Wednesday, April 29, 2015

பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன் 
125வது  பிறந்த நாள் 

(29.04.1891 - 21.04.1964)

பைந்தமிழ்த் தேர்ப் பாகன்; அவனொரு 
செந்தமிழ்த்  தேனீ; சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக் 
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த  நிலா!

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் 
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்  - காய்ச்சுப் 
பாகிடை ஏறிய ருசியும் 
நனிபசு  பொழியும் பாலும் - தென்னை 
நல்கிய குளிரிள நீரும் 
இனியன என்பேன் எனினும் - தமிழை 
என்னுயிர் என்பேன் கண்டீர்.

தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத் 
தமிழ்இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு  நேர்.

தமிழுக்கு  மணமென்று பேர்! - இன்பத் 
தமிழ்எங்கள்  வாழ்வுக்கு நிருமித்த ஊர்.

தமிழ்  எங்கள் இளமைக்குப்  பால்! -  இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!