தமிழன்டா.........
(கதை, சம்பவங்கள் கற்பனையே, நகைச்சுவைக்காக மட்டுமே SunMicroSystems பெயரை பயன்படுத்தி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் - deccanbluediamonds)
உகண்டா ல இருக்குற SunMicroSystems கம்பெனில JavaOS ப்ராஜெக்ட்ல வொர்க் பண்ண உலகம் முழுசும் இருந்து Apply பண்ணலாம் னு விளம்பரம் பண்ணி இருந்தாங்க. ஒரே ஒரு Vacant தான்.


அங்கே இவரைப் போல 5000 பேர் இன்டர்வியு' க்கு வந்திருந்தாங்க.
முதல்ல "எத்தனை பேருக்கு JAVA OS ல அனுபவம் இருக்கு" னு கேட்டாங்க.

java தெரியாததால 3000 பேர் குறைஞ்சாங்க.
அப்புறம் "அமெரிக்கன் இங்கிலீஷ் ல எத்தன பேரு fluent" னு கேட்டாங்க.

English தெரியாததால 1000 பேர் குறைஞ்சாங்க.
அப்புறம் "எத்தனை பேர் ஆப்ரிக்கன் country" னு கேட்டாங்க.
ஆப்ரிக்கனா இல்லாததால ஒரு 500 பேர் குறைஞ்சாங்க.

HR எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம 400 பேர் குறைஞ்சாங்க. 100 பேர் தான் மிச்சம். அதுல நம்மாளு ஒருத்தர்.
கடைசியா, "எத்தனை பேருக்கு உகாண்டா மொழியான Bantu தெரியும்" னு கேட்டாங்க.

Bantu மொழி தெரியாம 98 பேர் போயிட்டாங்க.

Interview பண்றவங்க கடைசியா இருந்த ரெண்டு பேரையும் "உங்களோட Bantu மொழியில பேசிக்குங்க பாப்போம்"னு சொன்னங்க.
நம்மாளு எதிர்ல இருந்தவர் கிட்டே கேட்டாரு.
"தம்பிக்கு எந்த ஊரு?"
அதுக்கு அவன் சொன்னான்.
"அண்ணே நான் திருச்சி பக்கம். நீங்க?"