Showing posts with label HIGHER EDUCATION. Show all posts
Showing posts with label HIGHER EDUCATION. Show all posts

Tuesday, March 29, 2016

ஏப்ரல் 15 முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம்


ஏப்ரல் 15ம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள்  விநியோகிக்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்திலிருந்து (https://www.annauniv.edu/) ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  60 மையங்களில் சமர்பிக்கலாம் என உயர்கல்வி செயலர் அபூர்வா தலைமையில்  நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் கணேசன் அவர்கள் தெரிவித்தார்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • ஏப்ரல் 14ல், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
  • ஏப்ரல் 15 முதல், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில், விண்ணப்பங்களை  ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
  • பதிவு செய்த விண்ணப்பத்தை, மாணவர்கள் பிரதி எடுத்து, விண்ணப்ப கட்டணத்தை வங்கியில் செலுத்தி, அதற்கான, D.Dயுடன் அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.
  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து, ஏழு நாட்களுக்குள், ஆன்லைன் பதிவை முடித்து கொள்ள வேண்டும்.
  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து, 10 நாட்களுக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்; அதன்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

Saturday, November 28, 2015

JEE MAIN Offline,Online Examinations & JEE Advance (Joint Entrance Examination - May 2016) Exam Date's Announced for +2 (XII) Students

IIT(Indian Institute of Technology), IIM(Indian Institute of Management),IISc(Indian Institute of Science) போன்ற  கல்விநிலையங்களில்  B.Tech,B.Arch, B.Pharm, B.S ஆகிய படிப்புகளில் சேர 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் JEE Main 2016 (Offline),  JEE Advance  (Joint Entrance Examination) தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன 


JEE(Main)- Paper-1 (B.E./B. Tech.) [Offline examination]                 :03.04.2016    

JEE(Main)- Paper-1 (B.E./B. Tech.) [Online examination ]                : 09,10 April, 2016  

JEE(Main)- Paper-2 (B.Arch./B.Planning) [Offline examination]                :03.04.2016 

JEE Advance  Examination                                                                      : 22.05.2016      
 

Apply online through :   


Online Application process Stats From                                                 : 01.12.2015
Last  Date of Online Applcation Registration                                       : 31.12.2015
தேர்வு தொடர்பான முக்கிய நாட்களை அறிய http://www.jeeadv.ac.in/scr/important-dates.php   தொடர்பை கிளிக் செய்யவும்.

மேலும் விவரங்களை அறிய  http://www.jeeadv.ac.in/index.php என்ற இணையதளத்தை அணுகவும்.

Saturday, August 29, 2015

2009 ஏப்ரல் 1 முதல் 2014 மார்ச் 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு வட்டித்தொகை தள்ளுபடி

வங்கிகளில் 2009 ஏப்ரல் 1 முதல் 2014 மார்ச் 31ம் தேதி வரை  கல்விக்கடன் பெற்றவர்களுக்கு  வட்டித்தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. 

'அரசு அறிவித்துள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் உடனே அளிக்க வேண்டும். வட்டி தள்ளுபடி பெற, தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை வங்கியின் இணையதளங்களில் வெளியிட வேண்டும். இணையதளத்தில் விவரங்கள் வெளியிட்டுள்ளது குறித்தும் விளம்பரம் செய்ய வேண்டும்' என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தி உள்ளது.

மாணவர்களே வங்கிகளை நேரடியாக அணுகி மனு அளித்தும்  கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடியைப் பெறலாம். 

'வட்டி தள்ளுபடி தர மறுக்கும் வங்கிகள் மீது சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவரிடம் புகார் செய்யலாம். புகாரின் பிரதியை, இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் அனுப்பலாம்' என கல்விக்கடன் ஆலோசனைக் குழு அமைப்பாளர், 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன் ஆலோசனை கூறியுள்ளார்.

Friday, August 28, 2015

தமிழகத்திலுள்ள 690 B.Ed கல்லூரிகளில் சேர செப்டம்பர் 3 முதல் விண்ணப்பம்

 

தமிழகத்திலுள்ள  690 B.Ed கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  வரும் செப்டம்பர்  3ம்  தேதி முதல் 10ம் தேதி வரை வழங்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை கீழ்காணும் கல்லூரிகளில் பெறலாம். 

S.No
Name of the College
Phone No
1
Institute of Advance Study in Education, Saidapet, Chennai -15
044-24358351
2
Lady Willingdon College, Triplicane, Chennai-5
044-28445531
3
Govt College of Education, Kumarapalayam,Namakkal Dist
04288-260085
4
Govt College of Education, Orathanadu, Thanjavur District
04372-233258
5
Govt College of Education, Pudukottai
04322-221559
6
Govt College of Education for Women, Townhall, Coimbatore – 641001
0422-2397616
7
Govt College of Education, Silk Mill, Gandhi Nagar, Vellore-6
0416-2243103
8
Lakshmi College of Education ,Gandhigram, Dindigul Dist-624302
0451-2452337
9
Sri Sarada College of Education for Women, Sarada College Road, New Fairlands,
Salem- 636016
0427- 2447538
0427- 244 9201
10
Thiagarajar College of Preceptors, Madurai
0452-2311682
0452- 2311875
11
V.O.C. College of Education, Palayamkottai Road, Thoothukkudu- 628008
0461-2310600
12
St.Ignatius College of Education for Women, South Mutharamman Kovil Street, Palayamkottai, Tirunelveli-627002
http://www.ignatiuscollegeofeducation.com/
0462- 2560558
13
N.V.K.S.D. College of Education, Attoor, Thiruvattar (Via)- 629191, Kanyakumari
04651 282 130

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி 
11.09.2015 மாலை 5.00 மணிக்குள் 

மேலும் விவரங்களுக்கு

Thursday, August 20, 2015

கல்விக்கடன் பெற புதிய இணையதளம் துவக்கம் - மத்திய அரசு (NEW WEBSITE FOR EDUCATIONAL LOAN)


மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் 2015 பட்ஜெட் கூட்டத் தொடரில்  கல்வி கடன் பெறும் மாணவர்களின் வசதிக்காக  புதிய இணைதளம் துவக்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தார்.

தற்போது இந்த இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இந்த இணையத்தளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து, ஆன்லைன் மூலமாக எந்த வங்கிக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். 

இணையதள முகவரி

Tuesday, August 4, 2015

இன்ஜி. கவுன்சிலிங் 1.07 லட்சம் இடங்கள் நிரம்பின

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 536 இன்ஜி. கல்லூரிகளில் பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளுக்கு கடந்த ஒரு மாதமாக நடந்த கவுன்சிலிங் நேற்று நிறைவடைந்தது. இதில் 1,07,969 இடங்கள் நிரம்பியுள்ளன. 94,453 இடங்கள் காலியாக உள்ளன. 


Monday, July 20, 2015

B.Ed மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அறிவிப்பு

கடந்த ஆண்டு வரை B.Ed  ஓராண்டு படிப்பாக இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு முதல் B.Ed  படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இம்மாத இறுதியில் B.Ed மாணவர் சேர்க்கையைத் துவங்க, TNTEU முடிவு செய்துள்ளது. 

அதற்காக  புதிய விதிமுறைகளை  தமிழக கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது. 

அதன் விபரம்
  • B.Ed படிப்பில் சேர  ஏதாவது ஒரு இளங்கலை படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
  • M.Phil - Ph.D., மற்றும் முதுகலை படிப்பு படித்தவர்களும்  சேர முடியும்.
  • இளங்கலை படிப்பில், OC- 50; BC- 45; MBC- 43; SC, SCA- 40 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் மதிப்பெண்களுக்கு ஏற்ப  தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். PG- 4; M.Phil-5, Ph.D- 6 என வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
  • மேலும்  19 வகையான, ஆப்ஷனல் பாடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • B.Ed மாணவர் சேர்க்கை, சென்னை லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் நடக்கும்.
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் தேதி மற்றும் கவுன்சிலிங் குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

Saturday, July 11, 2015

B.Ed / B.Ed(Special) Result - TNTEU Announced

 
B.Ed. Degree Examination Results - May/June 2015
 


B.Ed. Spl. Degree Examination Results - May/June 2015




For Revaluation/ Retotalling Application

B.Ed தேர்வு முடிவுகள் இன்று(11.07.2015) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்படும் (B.Ed Degree Examination Results will be published on 11-07-2015 at 4.00 pm)



 B.Ed தேர்வு முடிவுகள் இன்று மாலை 4.00 மணியளவில்  வெளியிடப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக (TNTEU) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் திரு மணிவண்ணன்  அவர்கள்  தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகளை  http://www.tnteu.in/  இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
 
Marksheet மற்றும் Provisional Certificate  ஜூலை 30க்கு பின்னர்  கல்லுாரிகளில்  வழங்கப்படும்.

Re totaling, Revaluation, Copy of Answer Script ஆகியவற்றைப்   பெற தனித்தனி விண்ணப்பங்களை ஜூலை 24க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவங்களை  http://www.tnteu.in/  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


Friday, July 10, 2015

மருத்துவ படிப்புக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு

மருத்துவப் படிப்புகளுக்கான  இரண்டாம் கட்ட கலந்தாய்வு  வரும் 22ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் MBBS, BDS  படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் நடந்தது. மொத்தமுள்ள  2939 இடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்தனர். ஆனாலும் 137 பேர் கல்லுாரிகளில் சேரவில்லை. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான  இரண்டாம் கட்ட கலந்தாய்வை  July 22 முதல்  25ம் தேதி வரை நடத்த  மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.


மாணவர்கள் சேராததால் அரசு கல்லுாரிகளில் MBBS படிப்புக்கு ஒன்பது இடங்கள், 20 BDS இடங்கள், சுய நிதி கல்லுாரிகளில் 108 MBBS  இடங்கள் என, 137 இடங்கள் காலியாக உள்ளன.  

இந்த  137 இடங்களுக்கும், சுயநிதி கல்லுாரிகளின்  1020 BDS இடங்களுக்கும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். இதுபற்றிய விவரங்கள், ஓரிரு நாளில்  www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Saturday, June 27, 2015

நாளை முதல் 28.06.2015 அண்ணா பல்கலைக் கழக கவுன்சிலிங் துவக்கம் - TNEA 2015

 
தமிழகத்தில் உள்ள 539 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு  அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் Admission Counselling 28.06.2015 (ஞாயிறு)  முதல்  துவங்கி 30.07.2015ல் முடிவடைகிறது.  கவுன்சிலிங்கில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள் குளிக்கவும் தனி வசதி செய்யப்பட்டுள்ளது.

  • இடைத்தரகர்கள் உள்ளே வர தடை விதிக்கப் பட்டுள்ளது.

  • அண்ணா பல்கலை ஊழியர்கள் போல் நடித்து மாணவர்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அவர்கள் மீது பெற்றோர் புகார் கொடுக்கலாம்.

  • கவுன்சிலிங் வளாகத்தில், ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில், பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

  • குடிநீர், முதலுதவி, தீயணைப்பு மற்றும் , காவல் உதவி மையங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

  • பல்கலை வளாகத்தில், தனியார் கல்லுாரிகளின் துண்டு பிரசுரங்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  • வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு, அசல் அழைப்பு கடிதம் கொண்டு வந்தால் மாணவருக்கும், அவருடன் வந்து செல்லும் ஒருவருக்கும், அரசு பேருந்தில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும்.

  • வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் குளிக்க, குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது.

  • கவுன்சிலிங் அழைப்பு கடிதம் தபாலில் கிடைக்காதவர்கள், மூன்று மணி நேரத்திற்கு முன் வந்து, அண்ணா பல்கலையில் கடித நகல் பெற்றுக் கொள்ளலாம்.

  • கவுன்சிலிங் அரங்கின் உள்ளே வங்கிகளின் சார்பில், எட்டு சிறப்புக் கவுன்டர்கள் உள்ளன. 

  • மாணவர்கள், மூன்று வகை கல்லுாரிகள் மற்றும் விருப்ப பாடங்களை பதிவு செய்யலாம். இதற்காக, 50 பேர்  ஒரே நேரத்தில் பதிவு செய்ய 50 கணினிகள் வைக்கப்பட்டுள்ளன.

Thursday, June 18, 2015

MBBS, BDS நாளை கலந்தாய்வு- MBBS,BDS Counseling Schedule and Cutoff Details


MBBS, BDS படிப்புகளுக்கு நாளை முதற்கட்ட கலந்தாய்வு துவங்குகிறது; 4,800 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் அரங்கிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரியில் 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது;
ஞாயிற்றுக் கிழமையும் கலந்தாய்வு உண்டு. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு அரசு கல்லூரிகளில் 2257; எட்டு சுயநிதி கல்லூரிகளில் 551 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. 'மறுகூட்டல் மறுமதிப்பீட்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதற்கான சான்றுகளை கட்டாயம் எடுத்து வர வேண்டும்' என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் தெரிவித்து உள்ளார்.


கலந்தாய்வு தேதி, 'கட் - ஆப்' விவரம்

19ம் தேதி, விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

தேதி
பிரிவு
'கட் - ஆப்'
20.06.2015
General
200 - 198.25
21.06.2015
General
198.25 - 197.50
22.06.2015
General
197.50 - 197.00
23.06.2015
General
197.00 - 196.25
24.06.2015
BC
196.50 - 196.25
BCM
196.50 - 195.00
MBC
196.50 - 195.50
SC
196.50 - 192.00
25.06.2015
SC
192.00 - 190.50
SCA
196.50 - 186.75
ST
194.25 - 180.25
 


Friday, June 12, 2015

மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 19

 
முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வு, 19ம் தேதி துவங்குகிறது.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

விண்ணப்பித்த அனைவருக்கும், ’ரேண்டம்’ எண் தரப்பட்டுள்ளது. www.tnhealth.org என்ற இணையதளத்தில்  பதிவு எண் , பிறந்த தேதியை பதிவு செய்தால், ’ரேண்டம்’ எண் விவரம் அறியலாம். 

இந்த ஆண்டில் 20வது அரசு மருத்துவக் கல்லூரியாக, 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்துள்ளது. இதனால், எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,655 ஆக உயர்ந்துள்ளது.

இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக, மீதம், 2,557.

அரசு கல்லூரியில், 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுய நிதி கல்லூரிகளில்  780 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,432 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. ஜூன் 15ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கைக்கான, முதற்கட்ட கலந்தாய்வு, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 19ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடக்கும். முதற்கட்ட கலந்தாய்வில், சுய நிதி கல்லூரிகளின், பி.டி.எஸ்., இடங்கள் இடம்பெறாது என மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் ஆகியோர் தெரிவித்தனர்.

Thursday, June 11, 2015

மருத்துவ படிப்புகளுக்கான ‘ரேண்டம் எண்’ வெளியீடு

சென்னை: தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, விண்ணப்பித்தோருக்கான, ’ரேண்டம் எண்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து, 20 அரசு மருத்துவ கல்லூரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. 2,655 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. 

அகில இந்திய ஒதுக்கீடாக, 15 சதவீத இடங்கள் போக, மற்ற இடங்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், கலந்தாய்வு நடத்தி மாணவரை சேர்க்க உள்ளது. இதற்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், ’ரேண்டம் எண்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. பலர் ஒரே மாதிரியான, ’கட் - ஆப்’, பிறந்த தேதி, பாடவாரியாக மதிப்பெண் என, எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு. 

அப்படியான சூழலில், அவர்களில், யாரை முன்னிலைப்படுத்துவது என்பதற்கான, ’ரேண்டம்’ எண், இன்று வெளியிடப்பட்டது. பிளஸ் 2 மறு கூட்டலுக்கான முடிவுகள் குறித்த, ’சிடி’ இன்று, பள்ளிக் கல்வித் துறை தர உள்ளது. இதைத் தொடர்ந்து, 14ம் தேதி, தர வரிசை பட்டியலை வெளியிடவும், 19ம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வை நடத்தவும், மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

‘ரேண்டம் எண்’ அறிந்துகொள்ள: http://www.tnhealth.org/

Tuesday, May 26, 2015

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் எப்போது?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் 2 நாட்களில் முடிய உள்ளது. ஆனால் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை விண்ணப்பம் வழங்காதது, மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 296 இடங்கள் உள்ளன. இதுதவிர, 20 சுயநிதி கல்லூரிகளில் இருந்து, 994 இடங்கள், அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும்.

இதன்படி, 1,290 இடங்கள் உள்ளன. எம்.பி.பி.எஸ்., படிப்பு கலந்தாய்வைத் தொடர்ந்து, சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும், கலந்தாய்வு துவக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்தாலும், அதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாததால், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை முடிக்க வேண்டிய கடைசி மாதத்தில், கலந்தாய்வு நடத்தும் நிலை தொடர்கிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 28ம் தேதியுடன் முடிகிறது.

முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன் 19ல் நடக்க உள்ளது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இதுவரை விண்ணப்பம் வழங்கவில்லை.

இந்திய மருத்துவப் படிப்புகளில் சேர, கட் - ஆப் மதிப்பெண் இருந்தும், இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ என, அரை ஆண்டு காலம் காத்திருப்பது நரக வேதனை. கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தினால், இந்த சிக்கல் தீரும் என மாணவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது: கல்லூரிகளில், ஆயுஷ் கவுன்சில் ஆய்வு முடிந்துள்ளது. முறையான அனுமதியை எதிர்பார்த்துள்ளோம். கடந்த ஆண்டு, ஜூலை 14ல் விண்ணப்பம் தரப்பட்டு, அக்., மாதம்தான் கலந்தாய்வு நடந்தது.

இந்த ஆண்டு, ஜூன், இரண்டாம் வாரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவை, ஆயுஷ் கவுன்சில் அனுமதியைப் பொறுத்தே அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.