Showing posts with label TNPSC. Show all posts
Showing posts with label TNPSC. Show all posts

Wednesday, March 1, 2017

DEPARTMENTAL EXAMINATIONS – MAY- 2017 - Registration Upto 31.03.2017

தமிழக அரசின் துறைத்தேர்வுகள் 24.05.2017 முதல்  31.05.2017 வரை நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க 31.03.2017 கடைசி நாளாகும்.
 
டிசம்பர் 2016ல்  நடைபெற்ற துறைத்தேர்வுகளின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
To Apply Online, Click the link Below


or 

Sunday, November 13, 2016

TNPSC தேர்வர்களுக்கான புதிய அறிவுரைகள் ( TNPSC - MODIFIED INSTRUCTIONS TO APPLICANT )

முக்கிய அம்சங்கள் 

  • தேர்வர்கள் யாரும் சிபாரிசுக்காக, TNPSC சார்பான யாரையும்  சந்திக்கக் கூடாது. சந்திக்க முயற்சித்தால், அவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

  • விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ, தேவையற்ற இடங்களில் எழுதினால், எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

  • வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்ட பெயர், சுருக்கொப்பம் தவிர, மற்ற எதையும் எழுதுதல்  கூடாது.

  • விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில், கெஞ்சி கேட்டு எழுதுவது கூடாது. கேள்விக்கு தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை வெளியிடும் வகையில் எழுதக் கூடாது.

  • கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டிலும், மாற்றி, மாற்றி எழுதினால், அந்த விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும்.

  • தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய, ஸ்மார்ட் வாட்ச்,மோதிரம், கம்யூனிகேஷன் சிப், மொபைல் போன், பல விபரங்கள் உடைய கால்குலேட்டர்களை, தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

  • தேர்வர்கள் விடைத்தாளில், தமிழ் அல்லது ஆங்கிலம் என, இரண்டில் எதில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், இரண்டிலும் மாற்றி, மாற்றி ஒவ்வொரு பக்கத்திலும் எழுதக் கூடாது. 
மேலும் விவரங்களுக்கு TNPSC  வெளியிட்ட கீழ்க்கண்ட  pdf ஐ படிக்கவும்.





TNPSC GROUP - 1 SERVICES (Deputy Collector, DSP, Assistant Commissioner (CT), District Registrar etc) ANNOUNCED

POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES - I EXAMINATION (GROUP-I-SERVICES)


Thursday, October 27, 2016

TNPSC Group IV தேர்வுக்கான Hall Ticket இணையதளத்தில் வெளியீடு

 
 
TNPSC Group IV தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் இணையதளத்தி்ல் வெளியிடப்பட்டுள்ளது.
5,451 அரசுத் துறை பணியிடங்களுக்கான Group IV தேர்வு நவம்பர்  6 ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது.

இதனை, TNPSC இணையதளங்களான www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதாவர்கள் contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு பணம் கட்டிய ரசீதுடன் அக்டோபர்  31 தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். 


  Click Here to Download Group IV Hall Ticket

Tuesday, September 27, 2016

TNPSC தேர்வுகளுக்கு தயாராவது எப்படி? (TNPSC Exam's Preparation Tips)


Base : M.Karthikeyan @ Dinamalar 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆண்டு தோறும் Group-I, Group-II, Group-IV, Group -VIII,  VAO  மற்றும் பலவிதமான தேர்வுகளை நடத்தி, பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது.

கல்வி ஒன்று மட்டுமே துணையாகக் கொண்ட, வசதியற்ற பல்லாயிரம் இளைஞர், இளம்பெண்களின்  எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்றக்கூடியதாக விளங்கும் TNPSC தேர்வுகளில் வெற்றியடைய வேண்டுமானால், சிறப்பான திட்டமிடல் வேண்டும். 

TNPSC தேர்வுகளுக்கான திட்டமிடல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சில முக்கிய ஆலோசனைகள் இங்கே வழங்கப் படுகிறது.

  • தேர்வுக்கான தேதி அறிவிப்பு வந்தவுடன், தேர்வு நடைபெறும் நாள்வரையிலான நேரத்தை. பாடத்திட்டத்திற்கேற்ப  பகுத்து படிக்க வேண்டும்.

  • தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் கல்வி புத்தகங்கள் தான் முதல் அடித்தளம். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் பொதுவாக மாநில அரசு தேர்வுகளுக்கான அடிப்படை புரிதலை வழங்குகின்றன.

  • ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபடுவது அறிவுறுத்தத் தகுந்தது.

  • நாம் எவ்வாறு தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிந்து வைத்திருக்கிறோம்  என்பதே தேர்வுக்கான வழிகாட்டியாகும்.  முந்தைய ஆண்டுகளுக்கான தேர்வுக் கேள்விகளை எவ்வாறு ஆய்ந்தறிந்துள்ளோம் என்பதும், அதற்கடுத்தாற்போல் எவ்வளவு சுய பயிற்சிகளை தேர்வுக்கு முன் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

  • தேர்வுக்கான ஊக்குவிப்புகளை புத்தகங்களில் தேடுவதை விட, எந்தப் பதவிக்கு தேர்வு எழுதுகிறோமோ அது பற்றிய விவரங்களையும், அதற்கான உங்களின் பாடங்களையும் தினசரி நினைவில் நிறுத்திக்கொள்வது சிறந்தது.பாடத்திட்ட அடிப்படையிலான தயாரிப்பானது, பின்வரும் முறையில் மேற்கொள்ளப்படலாம்.

அறிவியல்

தமிழக அரசு தேர்வுகளுக்கு அறிவியல் பாடமானது முக்கிய பாடமாக கருதப்படுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கியுள்ளது.

அறிவியல் பாடம், தேர்வுக்கான மதிப்பெண்களில் முக்கிய இடம் வகிப்பதால், அதில் சிறப்பு கவனம் செலுத்துதல் அவசியம்.

வைட்டமின்கள், நோய்களும் காரணிகளும், நோய்த்தடைகாப்பு மண்டலம் - இரத்தம், நரம்பு மண்டலம், இயற்கை வளங்கள் (மரபு சார்ந்த மற்றும் மரபுசாரா வளங்கள்), கனிம வளம் மிகுந்த பகுதிகள் ஆகியவை சிறப்பு கவனம் பெறும்.

ஒளிச்சேர்க்கை - செல் - செல்லின் அமைப்பு - செல்லின் பாகங்கள் - கனிகள் - விதைகள் - மகரந்த சேர்க்கை - இனப்பெருக்கம் - தாவர நோய்கள் - சுவாசித்தல் ஆகியவையும் இடம் பெறலாம்.

சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள், பொதுத் தாள் புத்தகங்கள் அறிவியல் பாடத் தயாரிப்பிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு:


போட்டித் தேர்வுகளில் எளிதாக மதிப்பெண் பெறும் பகுதியாக இது கருதப்படுகிறது.

பொதுவாகவே இவற்றிலுள்ள பெரும்பாலான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக அடிப்படை உரிமைகள், அரசு நெறிப்படுத்தும் கொள்கைகள், பாராளுமன்றம், மத்திய மாநில உறவுகள், பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

வரலாறு

வரலாறு பாடத்திற்கு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான சமச்சீர் புத்தகங்கள் ஆரம்பக் கட்ட புரிதலுக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு (1857-1947), கவர்னர்கள் (1757-1947), புத்த சமயம், சமணசமயம், சமூக சீர்திருத்த இயக்கம், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நாகரீகம், குப்தர்கள், மௌரியர்கள், சேர, சோழர், பாண்டியர் காலம், சுல்தான்கள் மராத்தியர்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வது நல்லது.

பொருளாதாரம்

குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்தே பொருளாதாரத்தில் வினாக்கள் கேட்கப்படுகிறது. ஆனாலும் அவற்றை அலட்சியப்படுத்தாமல் கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையேயான பொருளாதார உறவுகள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தலாம்.

பொதுஅறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்

போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற முக்கியமான பகுதிகளாக பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் கருதப்படுகின்றன. நாள்தோறும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

பிரபல நபர்கள், அரசாங்க திட்டங்கள், தமிழக நடப்பு நிகழ்வுகள் மற்றும் தேசிய நிகழ்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்.

புவியியல்

இந்திய, தமிழக வரைபடங்கள், உயர்ந்த சிகரங்கள், மலைத்தொடர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

மனத்திறன் பயிற்சி மற்றும் அறிவுக்கூர்மை திறன்

வினாத்தாளில் நான்கில் ஒரு பகுதிக் கேள்விகள் இப்பகுதியில் இருந்து கேட்கப்படுகின்றன.


சில குறிப்புகள்

முக்கிய ஆண்டுகளை நினைவில் வைத்திருத்தல் அவசியம். இதில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.

குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 8 ஆகிய தேர்வுகளுக்கு நடப்பு அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக நிகழ்வுகளை அறிந்து வைத்திருத்தல் கூடுதல் பயனளிக்கும்.

முறையான மற்றும் தேவையான கையேடுகளை மட்டும் படித்தாலே இத்தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

அனைத்து பாடபுத்தகங்களையும் கைப்பேசி அல்லது கணினி உதவியோடு இணையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

வாழ்த்துக்கள் 
Composed By:  DBD  Team 

Sunday, September 25, 2016

DEPARTMENTAL EXAMINATIONS – DECEMBER- 2016 - Registration Upto 30.09.2016 ( Reminder Notice)

தமிழக அரசின் துறைத்தேர்வுகள் 23.12.2016 முதல்  31.12.2016 வரை நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க 30.09.2016 கடைசி நாளாகும்.

Thursday, September 8, 2016

குரூப் - 4 தேர்வு - விண்ணப்பிக்க செப்டம்பர் 14ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு ( Date Extended for TNPSC Group IV Online Application Upto Sep 14 )

 

 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  மூலம்  நவம்பர் 6ம் தேதி நடக்கவுள்ள  Group IV தேர்வுக்கு வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

குரூப் 4 தொகுதியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 5451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (செப்.8) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது , இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணம் செலுத்த செப்டம்பர் 16 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 

 

Friday, April 22, 2016

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள்


 
தமிழக அரசின், அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு நடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுப்பணி தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றது.

அதன் விவரம்: 

நவம்பர் 8,2015  குரூப் 1 தேர்வு

காலிப் பணியிடங்கள்: 74
தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை:  117,696
முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்:  4,033
முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:  29.07.2016, 30.07.2016 மற்றும்  31.07.2016

ஜூலை 11,2015  புள்ளியல் அதிகாரி தேர்வு

காலிப் பணியிடங்கள்: 270
தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை:  19,130
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு  தேர்வு செய்யப்பட்டவர்கள்:  54
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்:  06.05.2016

ஆகஸ்ட் 1,2015  நுாலகர் தேர்வு

காலிப் பணியிடங்கள்: 29
தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை:  2,352
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு  தேர்வு செய்யப்பட்டவர்கள்: 71
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்:  09.05.2016 மற்றும் 10.05.2016


தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு அடிப்படையில், முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in வலைதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, March 30, 2016

TNPSC துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி 11.04.2016 வரை நீட்டிப்பு

 Spl. Link  PAY DRAWN COMPLETE PARTICULARS FOR THE YEAR 2015-2016


TNPSC துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி 31.03.2016 மாலை 5.45  வரை என அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது துறைத் தேர்வுகளுக்கு online மூலம் விண்ணப்பிப்பதற்க்கான கடைசி தேதி 11.04.2016 மாலை 5.45 வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

Monday, December 14, 2015

விஏஓ தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

TNPSC நடத்தும் VAO தேர்விற்குவிண்ணப்பிக்க டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணத்தை செலுத்த ஜனவரி 2-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Thursday, November 12, 2015

TNPSC : 813 கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு




1
Post
Village Administrative Officer
2
Vacancies
813
3
Scale of Pay
5200-20200 + 2800 GP
4
One Time Registration Fee
50/-
5
Exam Fee
75/-
6
Age Limit
for OC :  21 to  30

SC/ST/MBC/DNC/BC/BCM  :  21 to 40
7
Qualification
SSLC Pass




 
1
Date of Notification
12.11.2015
2
Last Date for submission of Application
14.12.2015
3
Last Date for Fees Payment
16.12.2015
4
Date of Examination
14.02.2016 FN  10.00 AM to 1.00 PM


for more details:

http://www.tnpsc.gov.in/latest-notification.html 

Monday, October 26, 2015

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இ-சேவை மையத்தில் வசதி

Special Link: CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15
 

இ-சேவை மையத்தில்  TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டணம் எவ்வளவு?

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.


மேலும், புதிதாக, டி.என்.பி.எஸ்.சி.,க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, நிரந்தரப் பதிவு செய்ய, 50 ரூபாய், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, 30 ரூபாய், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய, ஐந்து ரூபாய், மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற, 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்புகை சீட்டு

நிரந்தர பதிவு கட்டணமான 50 ரூபாய் மற்றும் தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களில் செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. பணம் செலுத்தியதற்கான, ஒப்புகை சீட்டு, உடனடியாக பெற்று கொள்ளலாம் என, சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Friday, October 16, 2015

விரைவில் 4900 பணியிடங்களுக்கு Group IV தேர்வு; டி.என்.பி.எஸ்.சி.,அறிவிப்பு



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, அருள்மொழி நேற்று பதவி ஏற்றார். அரசு இ-சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, முதல் அறிவிப்பை அவர் வெளியிட்டார். 


அவர் அளித்த பேட்டி: 


போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள், தாமதமின்றி வெளியிடப்படும். அரசு துறை காலியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு அறிவிக்கப்படும்.  

டி.என்.பி.எஸ்.சி.,யின் இணைய வழி சேவை அனைத்தும், மிகக் குறைந்த செலவில் கிடைக்க, இ-சேவை மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.நிரந்தர பதிவு, தேர்வு விண்ணப்பம், அதில் மாற்றம், நகல் பெறுதல் போன்ற சேவைகளுக்கு, அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்களை அணுகலாம். அதற்கு, கட்டணம் உண்டு. இந்த சேவைகள், எல்காட் நடத்தும், இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, October 13, 2015

TNPSC GROUP II - A : 1863 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு






1863 உதவியாளர், இளநிலை உதவியாளர்  காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



TNPSC GROUP II A

பணியிடங்கள்
உதவியாளர், இளநிலை உதவியாளர்
கல்வித்தகுதி : 

இளநிலை பட்டப்படிப்பு 
பணியிடங்களின் எண்ணிக்கை
1863
கடைசி தேதி
11.11.2015


மேலும் விவரங்களுக்கு

TNPSC ன் புதிய தலைவர்: கே. அருள்மொழி


 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC தலைவராக கே. அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த ஏ.நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபா இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பொறுப்பை கடந்த ஜூன் மாதம் அவர் ராஜினாமா செய்தார்.


இதன்பின் தலைவர் பொறுப்பை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக உள்ள பாலசுப்பிரமணியன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். 

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கே. அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் அவர் 6 ஆண்டுகாலம் நீடிப்பார் என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, September 22, 2015

மே 2015 துறைத் தேர்வு முடிவுகள் - Results of Departmental Examinations - MAY 2015


மே 2015ல் நடைபெற்ற துறைத்தேர்வுகளுக்கான முடிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Click Here to View and download the TN Dept Exam May 2015 Results.