Showing posts with label INTERNATIONAL DAY'S. Show all posts
Showing posts with label INTERNATIONAL DAY'S. Show all posts

Tuesday, March 8, 2016

International Women's Day - March 08 - மகளிர் தினம்

Happy  International Women's Day 
 மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 


One Day i will.



The willingness to listen
The Patience to understand
The Strength to support
The Heart to Care 


You can Feel her Innocence in the form of a daughter
You can feel her Care in the form of a sister
You can feel Her Warmth in the form of a friend
You Can feel her Passion in the form of a beloved
You can Feel her Dedication in the form of a wife
You can feel her Divinity in the form of a mother
You can feel her Blessing in the form of a Grandmother
Yet She is so Tough too


Her Heart is so Tender
So Naughty
So Charming
So Sharing 
So Melodious
She is a Women
And
She is a Life

Every man needs a women when his life is a Mess
Because just like the game of Chess
the Queen protects the King

Happy International Women's Day

Sunday, June 21, 2015

International Day of Yoga 21 JUNE 2015


Rid your body of its impurities,
let your speech be true and sweet, 
feel friendship for the world, 
and with humility seek wealth and knowledge
 
“Be a lamp to yourself. 
Be your own confidence. 
Hold on to the truth within yourself as to the only truth.” 
                                                                                 ~ Buddha
Don’t move the way fear makes you move. 
Move the way love makes you move. 
Move the way joy makes you move


Yoga is not about the shape of your body,
 but the shape of your life. 
Yoga is not to be performed; 
yoga is to be lived. 
    Yoga doesn’t care about what you have been; 
     yoga cares about the person you are becoming. 

 A person experiences life as 
something separated from the rest -
 a kind of optical delusion of consciousness. 

Our task must be to free ourselves from this self-imposed prison, 
and through compassion, 
to find the reality of Oneness
                                                                                   ~ Albert Einstein




Click Here to download the Common Yoga Protocol  by AYUSH, Govt of India

Friday, June 12, 2015

World Day Against Child Labour 12 June

NO To Child Labour-YES To Quality Education 
(2015 Theme) 

The International Labour Organization (ILO) launched the World Day Against Child Labour in 2002 to focus attention on the global extent of child labour and the action and efforts needed to eliminate it.



Each year on 12 June, the World Day brings together governments, employers and workers organizations, civil society, as well as millions of people from around the world to highlight the plight of child labourers and what can be done to help them.


Around the world, large numbers of children are engaged in paid or unpaid domestic work in the home of a third party or employer. These children can be particularly vulnerable to exploitation.


Their work is often hidden from the public eye, they may be isolated, and they may be working far away from their family home. Stories of the abuse of children in domestic work are all too common.


World Day 2015 calls for:
  • free, compulsory and quality education for all children at least to the minimum age for admission to employment and action to reach those presently in child labour.
  • new efforts to ensure that national policies on child labour and education are consistent and effective;
  • policies that ensure access to quality education and investment in the teaching profession.

வறுமையில், அப்பாவோ , அம்மாவோ  இல்லாதவங்க, அப்பா சரியில்லாதவங்க, படிக்காத அப்பா,அம்மா இருக்குற பரம ஏழைக்குழந்தைங்க, சரியான வழிகாட்டுதல் இல்லாம, சமூகத்துல எப்படி போராடி ஜெயிக்கணும்'னு வகை தெரியாம.இருக்குற பெற்றோருக்கு பிறந்தவங்க, குடும்பமே வேலை செஞ்சாலும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் மட்டுமே கூலி வாங்குற அடிமைத் தொழிலாளிங்களோட பசங்க   இப்படி எல்லாம் இருக்குற சின்னப் பசங்க வேலைக்கு போகாம என்ன பண்ணுவாங்க.

மக்கள்'னா  பெரிய பணக்காரன், பணக்காரன், நடுத்தரம், ஏழை, பரம ஏழை, கொத்தடிமைகள்'னு எல்லோரும் தான் நாட்டுல இருக்காங்கன்னு புரிஞ்சு, ஓட்டு வாங்கி ஆட்சி அமைக்குறவங்கதான், இப்படி சின்ன வயசுலேயே பசங்க படிக்காம, கொத்தடிமை வேலைக்கு போகுறதை  தடுக்கணும். தனி நபர்களும், சேவை அமைப்புகளும் எவ்வளவு பேரை காப்பாத்த முடியும்?

இவங்க வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை என்னன்னு கண்டறிஞ்சு, அவங்க பெற்றோரோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவி செஞ்சா அவங்களே படிக்கப் போவாங்க. அரசாங்கங்கள் இதைப் பத்தி கவலைப் படுமா?

அடுத்த வருஷம் இதே ஜூன் 12ல், குழந்தை தொழிலாளர்கள் எவ்வளவு பேர் குறைஞ்சு இருக்காங்கன்னு UN புள்ளி விவரம் தரும்போது தெரியும்.


ff

Friday, June 5, 2015

Sunday, May 10, 2015

அன்னையர் தினம் - இது நன்றி உணரும் தருணம் ( HAPPY MOTHER'S DAY WISHES TO ALL )


தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை.
(ஈழப் போரில் தன் தாய் இறந்தது தெரியாமல் பால்  அருந்தும் பச்சிளம் குழந்தை)

தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்


மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
(இவன் தாயல்ல. இது தாய்மை)

கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
பாரதி, கண்ணதாசன் போல் எண்ணற்ற மேதைகள் சொல்லிய அன்னையின் பெருமைகளை , அவர்களைப் போல பிறருக்கு எடுத்துச் சொல்லும் தகுதி நமக்கு இல்லாததால்,  அகத்தியர் திரைபடத்தில், வயலின் மாமேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையில் உயர்திரு பூவை செங்குட்டுவன் அவர்கள் எழுதிய பாடல் மேலே எடுத்தாளப் பட்டுள்ளது.

Friday, May 1, 2015

சிந்தனை மாற்றங்களே உழைப்பாளர்களின் விடுதலை - மே தின வாழ்த்துக்கள் ( The May Day Greetings)



    
                              சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
                              உழந்தும் உழவே தலை.

Monday, March 23, 2015

WORLD WATER DAY 2015 - March 22 - Water and Sustainable Development



இதை படிக்கலேன்னா நீங்க வரும் காலத்தில் ரொம்ப கஷ்டப் படுவீங்க. தண்ணியே இல்லாத ஊர்ல சதுர அடி 1500 ரூபாய்க்கு வாங்குவோமே. அந்த மாதிரி.(So,  Read Must and Be Cool Friends.)

 Humanity Needs Water

 A drop of water is flexible. A drop of water is powerful.

A drop of water is in demand.

தண்ணீர் என்பது உடல்நலன் (Water is Health)

மனிதனின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது தண்ணீர். உணவு இல்லாமல் பல வாரங்கள் கூட மனிதனால் உயிர் வாழமுடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் கூட வாழ முடியாது. கைகளை சுத்தமாக கழுவுவதாலேயே நாம் பெரும்பாலான நோய்களை தவிர்த்து விட முடியும். ஒரு கிராம் மனிதக் கழிவில் சுமார் 1 ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனிதனின் உடல் சராசரியாக 50-65% தண்ணீரைக் கொண்டுள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகள் உடலில் 78% தண்ணீர் உள்ளது. மனிதர்களாகிய நாம்  தினந்தோறும் குடிக்கவும் , குளிக்கவும், சமைக்கவும், துவக்கவும் என பல விதங்களில் தண்ணீரைச் சார்ந்தே வாழ்கிறோம்.  உலகில் சுமார் 75 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட  குடிநீர் வசதி இல்லாமலே வாழ்கிறார்கள். சுமார் 250 கோடி மக்களுக்கு சரியான சுகாதார வசதிகள் இல்லை. எனவே வருங்காலத்தில்  தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் சார்ந்த தொழில்துறை வளர்ச்சிபெரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

 தண்ணீர் என்பது இயற்கை  (Water is  Nature )

 உலகின் சுற்றுச் சூழல் என்பது  நிலையான, தொடர்ச்சியான நீர் சுழற்சியை மட்டுமே நம்பி உள்ளது.  சுத்திகரிக்கப் படாத தொழிற்சாலை கழிவுகள், விவசாயக் கழிவுகள், இல்லக் கழிவுகள்  என எல்லாவற்றையும் ஆறுகளிலும் , கால்வாய்களிலும், ஏரிகளிலும் கலந்து சுத்தமான நன்னீர் மண்டலங்களை எல்லாம் நாம் பாழ்படுத்தி விட்டோம். 

 இந்தியாவை பொறுத்தவரை, கங்கை நதியை நாம் மிகவும் கீழ்த்தரமாக மாசுபடுத்தி விட்டோம். தமிழ்நாட்டில் காவேரி, பாலாறு, வைகை, பவானி என அனைத்து ஆறுகளும் கழிவுநீர் கால்வாய்களாகிவிட்டன. இதனால் இயற்கையின் சமநிலையும் சுற்றுச் சூழலும் வெகுவாக பாதிக்கப் பட்டு எங்கெங்கு காணினும் வறட்சியை மட்டுமே கண்டு வருகிறோம்.

 

 தண்ணீர் என்பது நகர்மயமாதல்   (Water is urbanization )

உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சுமார் 10 இலட்சம் மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். நகரமயமாக்கல் பெரும்பாலும் ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டும் சுமார் 93% இருக்கும் என  UN DESA’s Population Division ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால் நகர்ப்புறங்களில் சுமார் 40% பகுதிகள் குடிசைப் பகுதிகளை இருக்கும். 2050ம் ஆண்டிற்குள் 250 கோடி மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியா , சீனா, நைஜீரியா ஆகிய நாடுகளில் மிகப் பெரும் நகர்மயமாதல் ஏற்படும் எனவும் UN DESA ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் என்ன ஆகும்?

நகர்புற மேம்பாடுகளை செய்வது என்பது 2050ம் ஆண்டுவாக்கில் பெரும் சவாலானதாக இருக்கும். தற்போதுள்ள நீர் மேலாண்மை கட்டமைப்புகள் அனைத்தும் ஏராளமான தண்ணீரை வீணாக்குகின்றன. கழிவுநீர் அமைப்புகள் எல்லாம் முறையாக இல்லாமலும், காலாவதி ஆகியும் உள்ளன. இதனால் ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கான குடிநீர் மற்றும் கழிவு நீர் பைப்புகளை புதைக்க வேண்டியிருக்கும்.

                                                                                   --  இன்று மாலை நிறைவு பெறும் .