WORLD WATER DAY 2015 - March 22 - Water and Sustainable Development
இதை படிக்கலேன்னா நீங்க வரும் காலத்தில் ரொம்ப கஷ்டப் படுவீங்க. தண்ணியே இல்லாத ஊர்ல சதுர அடி 1500 ரூபாய்க்கு வாங்குவோமே. அந்த மாதிரி.(So, Read Must and Be Cool Friends.)
Humanity Needs Water
A drop of water is flexible. A drop of water is powerful.
A drop of water is in demand.
தண்ணீர் என்பது உடல்நலன் (Water is Health)
மனிதனின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது தண்ணீர். உணவு இல்லாமல் பல வாரங்கள் கூட மனிதனால் உயிர் வாழமுடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் கூட வாழ முடியாது. கைகளை சுத்தமாக கழுவுவதாலேயே நாம் பெரும்பாலான நோய்களை தவிர்த்து விட முடியும். ஒரு கிராம் மனிதக் கழிவில் சுமார் 1 ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனிதனின் உடல் சராசரியாக 50-65% தண்ணீரைக் கொண்டுள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகள் உடலில் 78% தண்ணீர் உள்ளது. மனிதர்களாகிய நாம் தினந்தோறும் குடிக்கவும் , குளிக்கவும், சமைக்கவும், துவக்கவும் என பல விதங்களில் தண்ணீரைச் சார்ந்தே வாழ்கிறோம். உலகில் சுமார் 75 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதி இல்லாமலே வாழ்கிறார்கள். சுமார் 250 கோடி மக்களுக்கு சரியான சுகாதார வசதிகள் இல்லை. எனவே வருங்காலத்தில் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் சார்ந்த தொழில்துறை வளர்ச்சிபெரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தண்ணீர் என்பது இயற்கை (Water is Nature )
உலகின் சுற்றுச் சூழல் என்பது நிலையான, தொடர்ச்சியான நீர் சுழற்சியை மட்டுமே நம்பி உள்ளது. சுத்திகரிக்கப் படாத தொழிற்சாலை கழிவுகள், விவசாயக் கழிவுகள், இல்லக் கழிவுகள் என எல்லாவற்றையும் ஆறுகளிலும் , கால்வாய்களிலும், ஏரிகளிலும் கலந்து சுத்தமான நன்னீர் மண்டலங்களை எல்லாம் நாம் பாழ்படுத்தி விட்டோம்.
இந்தியாவை பொறுத்தவரை, கங்கை நதியை நாம் மிகவும் கீழ்த்தரமாக மாசுபடுத்தி விட்டோம். தமிழ்நாட்டில் காவேரி, பாலாறு, வைகை, பவானி என அனைத்து ஆறுகளும் கழிவுநீர் கால்வாய்களாகிவிட்டன. இதனால் இயற்கையின் சமநிலையும் சுற்றுச் சூழலும் வெகுவாக பாதிக்கப் பட்டு எங்கெங்கு காணினும் வறட்சியை மட்டுமே கண்டு வருகிறோம்.
தண்ணீர் என்பது நகர்மயமாதல் (Water is urbanization )
உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சுமார் 10 இலட்சம் மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். நகரமயமாக்கல் பெரும்பாலும் ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டும் சுமார் 93% இருக்கும் என UN
DESA’s Population Divisionஆய்வுகள் காட்டுகின்றன. இதனால் நகர்ப்புறங்களில் சுமார் 40% பகுதிகள் குடிசைப் பகுதிகளை இருக்கும். 2050ம் ஆண்டிற்குள் 250 கோடி மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியா , சீனா, நைஜீரியா ஆகிய நாடுகளில் மிகப் பெரும் நகர்மயமாதல் ஏற்படும் எனவும் UN
DESA ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் என்ன ஆகும்?
நகர்புற மேம்பாடுகளை செய்வது என்பது 2050ம் ஆண்டுவாக்கில் பெரும் சவாலானதாக இருக்கும். தற்போதுள்ள நீர் மேலாண்மை கட்டமைப்புகள் அனைத்தும் ஏராளமான தண்ணீரை வீணாக்குகின்றன. கழிவுநீர் அமைப்புகள் எல்லாம் முறையாக இல்லாமலும், காலாவதி ஆகியும் உள்ளன. இதனால் ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கான குடிநீர் மற்றும் கழிவு நீர் பைப்புகளை புதைக்க வேண்டியிருக்கும்.