Wednesday, March 11, 2015

மனிதர்கள் 500 ஆண்டுகள் உயிர் வாழ முடியும். Google says humans could live for 500 YEARS


மனிதர்கள் 500 ஆண்டுகள் உயிர் வாழ  முடியும் 

Google says humans could live for 500 YEARS - and is investing in firms hoping to extend our lives five-fold

மனிதர்கள் வாழ்நாளை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என google  நிறுவனம் தெரிவித்துள்ளது. google  நிறுவனத்தின் முதலீட்டுப் பிரிவு தலைவர் திரு பில் மாரிஸ் அவர்கள் பகிரும் தகவல்,

  "விஞ்ஞானிகள் உதவியோடு  இன்னும் 20 வருடங்களில் கீமோதெரபி மூலம் புற்று நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.  மருத்துவ துறையின் நவீன வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும்  BioMechanics  மூலமாக இது சாத்தியமாகும்."  என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மரபணுவியல் துறையில் ஏற்கனவே இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன எனவும், அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 google  நிறுவனத்தின் பொறியியல் பிரிவு இயக்குனர் திரு Ray Kurzweil அவர்கள் , "2045ம்  ஆண்டிற்குள் இயந்திர மனிதனில் மனித மூளையை பொருத்த முடியும் " என தெரிவித்துள்ளார்.

  ஆனால், புகழ் பெற்ற நரம்பு உயிரியல் பேராசிரியர் திரு Sir Colin Blakemore அவர்கள் , "மனிதனின் அதிகபட்ச வாழ்நாள்  120 ஆண்டுகள் மட்டுமே " என தெரிவித்துள்ளார்.

our sincere thanks to