Friday, March 13, 2015

தேவையான பக்கங்களை மட்டும் கொண்ட pdf கோப்புகளை உருவாக்குவது எப்படி? How to make a PDF file with selected pages.


How to make a  PDF file with selected pages


1. கீழே உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.

2.இந்த மென்பொருளை கணினியில் நிறுவவும்.

3. Printer and Faxes தேர்வை click  செய்து உங்கள் Printer Folder ல் PrimoPDF என உள்ளதா என்பதை உறுதி படுத்தவும். ( See Below)


4. தேவையான பக்கங்களை மட்டும் கொண்ட PDF கோப்பை உருவாக்க  முதலில் நீங்கள் தேர்வு செய்துள்ள PDF  கோப்பை Adobe Reader, Foxit Reader போன்ற ஏதேனும் ஒன்றில் திறந்து கொள்ளவும். (உதாரணமாக இந்த கோப்பில் 100 பக்கங்கள் இருப்பதாக கொள்வோம்)

5. தற்போது  உங்களுடைய PDF கோப்பு திறந்திருக்கும் நிலையில் , 

  • File -->Print  அல்லது Ctrl +P  கிளிக் செய்யவும். Print Dialogbox  தோன்றும். இதில்  Printer --> Name  என்னும் பகுதியில் PrimoPDF என்பதை தேர்வு செய்யவும்.
  • Print Range --> Pages  என்னும் பகுதியில்  உங்களுக்கு வேண்டிய பக்கங்களை மட்டும் கொடுத்து OK பட்டனை கிளிக் செய்யவும்.  உதாரணமாக, 1,4,6,15-20,31,50 etc (See Below for Example)


6. OK கொடுத்தவுடன் PrimoPDF உரையாடல் பெட்டி தோன்றும். இதில் கீழ்ப்பகுதியில் உள்ள Create  PDF பட்டனை கிளிக் செய்யவும்.


7. இப்போது தோன்றும்  Save As உரையாடல் பெட்டியில் உங்களுடைய கோப்பிற்கு புதிய பெயரை தட்டச்சு செய்து Save பட்டனை கிளிக் செய்யவும்.

8. பக்கங்கள் குறைக்கப்பட்ட உங்களுடைய புதிய PDF கோப்பு Adobe Reader  அல்லது Foxit Reader ல் திறக்கப்படும்.