Friday, June 12, 2015

மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 19

 
முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வு, 19ம் தேதி துவங்குகிறது.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

விண்ணப்பித்த அனைவருக்கும், ’ரேண்டம்’ எண் தரப்பட்டுள்ளது. www.tnhealth.org என்ற இணையதளத்தில்  பதிவு எண் , பிறந்த தேதியை பதிவு செய்தால், ’ரேண்டம்’ எண் விவரம் அறியலாம். 

இந்த ஆண்டில் 20வது அரசு மருத்துவக் கல்லூரியாக, 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்துள்ளது. இதனால், எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,655 ஆக உயர்ந்துள்ளது.

இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக, மீதம், 2,557.

அரசு கல்லூரியில், 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுய நிதி கல்லூரிகளில்  780 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,432 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. ஜூன் 15ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கைக்கான, முதற்கட்ட கலந்தாய்வு, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 19ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடக்கும். முதற்கட்ட கலந்தாய்வில், சுய நிதி கல்லூரிகளின், பி.டி.எஸ்., இடங்கள் இடம்பெறாது என மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் ஆகியோர் தெரிவித்தனர்.