Previously a popular feature in Gmail Labs, and recently added to Inbox by Gmail, today we’re adding 'Undo Send' as a formal setting in Gmail on the web.
'Undo Send' allows people using Gmail to cancel a sent mail if they have second thoughts immediately after sending. The feature is turned off by default for those not currently using the Labs version, and can be enabled from the General tab in Gmail settings.
People currently using the Labs version of 'Undo Send' will have the setting turned on by default at launch.
இமெயிலை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட
நேரத்திற்குள் அதை திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது. சில நேரங்களில் மெயிலை அனுப்பிய பின் அதை ரத்து செய்ய வேண்டும் என நினைக்கும் நிலை வரலாம். அவசரத்தில் அல்லது உணர்ச்சிவசப்பட்டு ஒரு
மெயிலை அனுப்பி விட்டு பின்னர்
அவ்வாறு செய்திருக்க வேண்டாம் என நினைப்பது போன்ற பல
காரணங்களுக்காக
இவ்வாறு நினைக்கலாம்.
இது போன்ற
நேரங்களில் கைகொடுப்பதற்காக Gmailல் தற்போது Undo Send வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Gmailல் மெயிலை தட்டச்சு செய்து Send பட்டனை அழுத்திய பின், திரையின் மேல்பகுதியில் Undo Send என குறிப்பிட்டு ஒரு பெட்டி எட்டிப்பார்க்கும்.

மெயிலில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே Undo பட்டனை கிளிக் செய்தால், Mail அனுப்பப்படாமல் திரும்பி வந்துவிடும். அதன் பிறகு அந்த மெயிலில் திருத்தம் செய்யலாம் அல்லது டெலிட் செய்துவிடலாம்.
இந்த வசதியை
பயன்படுத்த Gmailன் வலப்புறத்தில் உள்ள Settings பகுதிக்கு சென்று Undo Sendல் 5 முதல் 30 விநாடிகள்
வரையான கால அவகாசத்தை
அமைத்துக் கொள்ளலாம். அதாவது 30 விநாடிகள் வரை அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் அவகாசம் இருக்கும். ஆக, இனி தவறான முகவரிக்கு இமெயிலை அனுப்பி வருந்தும் நிலை இருக்காது.
Criptext Mail
இதே போல மெயிலை திரும்ப பெறும்
வசதியை Criptext எனும் புதிய மெயில் சேவையும்
அளிக்கிறது. Gmail விட ஒரு படி மேலே சென்று படிக்கப்பட்ட பிறகும் கூட அந்த மெயிலை திரும்ப பெற வழி செய்கிறது.
இன்பாக்சில் வந்த
மெயிலை படிப்பவர் டெலிட் செய்வது
போல அனுப்பியவர் டெலிட் செய்ய இது வழி செய்கிறது.
ஆக நாம் அனுப்பிய மெயிலை நாம் கட்டுப்படுத்த முடியும். தகவலை பரிமாறிக்கொண்ட பின் அந்த தகவல் ஆவணமாக இன்னொருவர்
கம்ப்யூட்டரில் இருப்பதை
இது தவிர்க்கிறது.
ஒரு மெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாக
மறைந்துவிடச்செய்யும் வசதியும் இது அளிக்கிறது.
ரகசிய மற்றும் மிகவும் நம்பகமான தகவல் கொண்ட மெயில்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.பின்னாளில் வரக்கூடிய வில்லங்கத்தையும் தவிர்க்க உதவலாம். அதேபோல அனுப்பிய மெயில் படிக்கப்பட்டு விட்டதா என்பதையும் இதன் மூலம் கண்காணிக்கலாம். மெயிலை Encrypt செய்தும் அனுப்பலாம்.
ரகசிய மற்றும் மிகவும் நம்பகமான தகவல் கொண்ட மெயில்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.பின்னாளில் வரக்கூடிய வில்லங்கத்தையும் தவிர்க்க உதவலாம். அதேபோல அனுப்பிய மெயில் படிக்கப்பட்டு விட்டதா என்பதையும் இதன் மூலம் கண்காணிக்கலாம். மெயிலை Encrypt செய்தும் அனுப்பலாம்.
Criptext Mail ஐ பெற http://www.criptext.com/email/