Monday, June 22, 2015

2005க்கு முந்தைய அனைத்து ரூபாய் நோட்டுகளுக்கும் ஜூன் 30 வரை மட்டுமே ஆயுட்காலம்

கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஜூன் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும்.  இந்த அவகாசம் முடிவடைய  இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில்  'பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் தங்கள் கணக்கில் அவற்றை Deposit செய்யலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கறுப்பு பண புழக்கத்தை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டது. 

அதில், '2005க்கு முன் அச்சிடப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் உட்பட அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகாது. எனவே இந்த  ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலில் இதற்கு டிசம்பர் 2014 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர்  2015 ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

ஒவ்வொரு ரூபாய் நோட்டின் பின்புறத்தின் கீழ் பகுதியில், அந்த நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.அப்படி குறிக்கப்படவில்லை என்றால் அது 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு என அறியலாம்.