Monday, June 8, 2015

EMIS சுணக்கம் - பட்டதாரி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி தர கல்வித்துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ  மாணவியரின் விவரங்களை  பதிவு செய்ய, EMIS ( Educational Management Information System) என்ற மின்னணு மேலாண்மை மற்றும் தகவல் திட்டம் 2012ம்  ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்டது.

இந்த திட்டத்தில் மாணவர் பெயர், வகுப்பு, பெற்றோர் பெயர், தொழில், இனம், முகவரி, அங்க அடையாளம் மற்றும் ரத்தப்பிரிவு போன்ற பல்வேறு விவரங்களை வலைத்தளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.

ஆனால் திட்டமிட்டபடி  மாணவர் விவரங்களை  கணினியில் முழுமையாக பதிவேற்ற இயலாமல் மூன்று ஆண்டுகளாக இழுபறி நிலையில் உள்ளது. இதனால் இந்த ஆண்டு முதல் நடைமுறைப் படுத்த நினைத்த Smart BusPass வழங்கும் திட்டம் கேள்விக்குறியானது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்த போது, 'கணினி சரியில்லை, பழுது, சர்வர் மக்கர்' என, பள்ளிகளில் பல காரணங்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு தெரியாததால், இந்தப் பணிகள் கிடப்புக்குப் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மீண்டும் கணினி பயிற்சிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், ஜூன் 10ம் தேதிக்குள் திட்டமிட்டு இதற்கு உரிய அறிக்கை தருமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.