Friday, July 10, 2015

மருத்துவ படிப்புக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு

மருத்துவப் படிப்புகளுக்கான  இரண்டாம் கட்ட கலந்தாய்வு  வரும் 22ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் MBBS, BDS  படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் நடந்தது. மொத்தமுள்ள  2939 இடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்தனர். ஆனாலும் 137 பேர் கல்லுாரிகளில் சேரவில்லை. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான  இரண்டாம் கட்ட கலந்தாய்வை  July 22 முதல்  25ம் தேதி வரை நடத்த  மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.


மாணவர்கள் சேராததால் அரசு கல்லுாரிகளில் MBBS படிப்புக்கு ஒன்பது இடங்கள், 20 BDS இடங்கள், சுய நிதி கல்லுாரிகளில் 108 MBBS  இடங்கள் என, 137 இடங்கள் காலியாக உள்ளன.  

இந்த  137 இடங்களுக்கும், சுயநிதி கல்லுாரிகளின்  1020 BDS இடங்களுக்கும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். இதுபற்றிய விவரங்கள், ஓரிரு நாளில்  www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.