Sunday, July 12, 2015

2015-2016ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் கேள்விக்குறி ?



2014-2015ம் கல்வியாண்டில்  TET தேர்ச்சி பெற்ற  3500 SG , 7000 BT, PG என 10500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

31.05.2015ல்  தமிழகம் முழுவதும் 4000க்கும் அதிகமான ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.



இக்காலிப்பணியிடங்களுக்கு 2015-2016ம் கல்வியாண்டுக்கான TET தேர்வு நடத்தி பணிநியமனம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு  D.T.Ed, B.Ed படித்து வேலைக்கு காத்திருக்கும் பட்டதாரிகளிடையே இருந்து வருகிறது.



2014-2015ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள உபரி ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டு பணிநிரவல் (Deployment) செய்யப்பட உள்ளனர். 

2014-2015ம் கல்வியாண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட, தற்போதுள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் 2015-2016ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது