Monday, July 20, 2015

TNPSC Group 1 தேர்வு வயது வரம்பை உயர்த்த கோரிக்கை

TNPSC Group  1 தேர்வு எழுதுவதற்கான  வயது உச்ச வரம்பை  45 ஆக  உயர்த்த வேண்டும் என  தமிழக Group  1 தேர்வர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, கூட்டமைப்பு சார்பில் தமிழக  முதல்வருக்கு அனுப்பி உள்ள  மனுவில்,

'தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும் தமிழ் வழியிலேயே கல்வி கற்கின்றனர். இவர்கள் Group 1 தேர்வு குறித்து  30 வயது கடந்த பின்னரே தெரிந்து கொள்கின்றனர். 

ஒன்று அல்லது இரண்டு தோல்விக்கு பின்னரே  தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என தெரிந்து கொள்கின்றனர். இதற்குள் தேர்வு எழுதுவதற்கான உச்ச வயது வரம்பை கடந்து விடுவதால்Group 1 தேர்வு குறித்து நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்கு ஆளாகின்றனர். 

UPSC  தேர்வுகள், ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன.ஆனால் TNPSC Group 1 தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து  பணி நியமனம் வரை, மூன்று ஆண்டுகள் வரை  காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த காலகட்டத்தில்  பல இளைஞர்கள்  உச்ச வயது வரம்பை கடந்து விடுகின்றனர். இதில் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கேரளா, குஜராத், அரியானா, மேற்கு வங்கம், அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் Group 1க்கான உச்ச வயது வரம்பு  45 வயது என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  

09.07.2015 அன்று வெளியான, Group 1தேர்வுக்கான  உச்ச வயது வரம்பையும் 45 வயதாக உயர்த்தி தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும்' எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.