Wednesday, July 1, 2015

ஹெல்மெட் சார்பான காவலர்களின் அணுகுமுறைகள் - திரு S. George, I.P.S., Commr. of Police, Chennai


  1. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர், ஹெல்மெட் அணிந்து இருந்தால், தேவையில்லாமல் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது.

  2. சாலையில் தடுப்பு அமைத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், சோதனை நடத்தக்கூடாது.

  3. ஹெல்மெட் அணியாமல் பிடிபடுவோருக்கு, எந்த வகையிலும் சலுகை காட்டக் கூடாது. ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று உள்ளிட்ட அனைத்து ஒரிஜினல்ஆவணங்களையும், பறிமுதல் செய்ய வேண்டும்.

  4. வாகனம் மற்றும் ஆவணங்கள் பறிமுதலுக்கான, ஒப்புகை சீட்டைகட்டாயம் வழங்க வேண்டும்.

  5. ஆவணங்களை, நீதிமன்றத்தில் தான் சமர்ப்பிக்க வேண்டும்; லஞ்சம் வாங்கி திரும்ப ஒப்படைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  6. பணம் கேட்கும் போலீஸ் பற்றிஅவசர போலீஸ் எண், '100'க்கு தகவல் தெரிவிக்கலாம்.

  7. ஹெல்மெட்டை, வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்து பயணித்தல், தொங்க விடுதல், பின் பக்கத்தில் பூட்டு போட்டு இருத்தல் கூடாது. அவ்வாறு செய்தால், ஹெல்மெட் அணியாதவர் என்றே கருதப்படும். அவர்களிடமும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்.

  8.  வாகன ஓட்டிகள் முன்கூட்டியே அறிந்து, மாற்றுப்பாதையில்தப்பித்து விடாத வகையில், மறைவிடங்களில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

  9.  ஹெல்மெட் கண்காணிப்பை காரணம் காட்டி, சாலை விதிகளை மீறி செல்வோரையும் கோட்டை விட்டுவிடக் கூடாது.

  10. பெண்களும், ஹெல்மெட் அணிவது கட்டாயம்; அவர்களுக்கு எவ்வித சலுகையும் காட்டக் கூடாது.இவ்வாறு, உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேவையற்ற உயிரிழப்பை தவிர்க்க, ஜூலை 1ம் தேதி முதல் (இன்று) இரு சக்கர வாகன ஓட்டி கள், பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அமல்படுத்த வேண்டியது போக்குவரத்து போலீசாரின் கடமை. அதை, 100 சதவீதம் அமல்படுத்துவோம் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரு ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


வழக்கு தள்ளுபடி

முன்னதாக , சென்னை உயர் நீதிமன்றத்தில், திருகோபாலகிருஷ்ணன் மற்றும்  திருமதி நிம்மு வசந்த் ஆகியோர் "பெண்கள், குழந்தைகள், ஹெல்மெட் அணிவதில் பிரச்னை உள்ளது; எனவே, அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" ஆகிய பிரச்சினைகளை  உள்ளடக்கி ஹெல்மெட் கட்டாயமாக்கப் படுவதற்கு தடை கோரி  தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
 




பெற்றோர் கோரிக்கை 

பள்ளிக்கு தந்தை, தாயுடன், இருசக்கர வாகனத்தில் செல்லும், 'குட்டீஸ்'களுக்கும், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாய உத்தர வில் இருந்து விலக்கு வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரும்பாலான பெற்றோர், தங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை, டூவீலரில் தான் பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். 

பெற்றோர் மனநிலை :

காலையில் பள்ளிக்கு போகும் அவசரத்தில், குழந்தைகள், 'ஷூ, சாக்ஸ்' போடவோ, சாப்பிடவோ கூட நேரமிருப்பதில்லை.
பிள்ளைகளுடன் பள்ளி புத்தகப்பை, 'லஞ்ச் பேக்' வைக்கவே, டூ வீலரில் இடம் இல்லை. ஒரு தந்தை தனது இரண்டு பிள்ளைகளுடன், மூன்று ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் செய்யவே  முடியாது.
 Thanks to:  Dinamalar

இதற்காக அனைவராலும் மாற்று ஏற்பாடுகளை செய்யவும் முடியாது. எனவே இது பல குடும்பங்களில் புதிய பொருளாதார சிக்கல்களை உண்டுபண்ணும்.

மேலும் 1000பேர் படிக்கக் கூடிய ஒரு பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் பெற்றோர்களுடன் இருசக்கர வாகனத்தில் தான் பள்ளிக்கு வருகிறார்கள். இந்த 300 மாணவர்களின்  ஹெல்மெட்களையும் பள்ளிகளில் வைக்க இடம் உண்டா என்பது கேள்விக்குறி.

மாணவர்களை பள்ளிகளில்  இறக்கிவிட்டு திரும்பும் பெற்றோர்கள் 2 அல்லது 3 ஹெல்மெட்களை திரும்ப எடுத்துச் செல்லமுடியுமா எனப்படும் சிக்கல்.
மாணவியர் ஹெல்மெட் அணிந்தால் தலை கலைந்து விடும். பல தனியார் பள்ளிகள், தலையை சரியாக பின்னவில்லை எனக்கூறி வெளியே அனுப்பி விடுவர்.
மேலும் சந்தையிலும் பள்ளிக்குழந்தைகளுக்கு தனியாக ஹெல்மெட் விற்கவில்லை. 
எனவே பெற்றோர்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது போலீசார் கெடுபிடி செய்யக்கூடாது என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகும். இந்த உத்தரவு மிகவும் அவசியமானது என்றாலும், இதுவே பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தும் ஒன்றாக மாறக்கூடாது என்பது நமது விருப்பம் ஆகும்.

மேலும், இனி தமிழ்நாட்டில் எடுக்கும் அனைத்து திரைப்படங்களிலும் ஹீரோக்கள் ஹெல்மெட் அணிந்து தான் வண்டியை ஓட்டவேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும். ஏனெனில் திரைப்படங்களே இன்றைய இளைஞர்களுக்கு "வழிகாட்டியாகவும்", Inspiration ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.