Thursday, July 2, 2015

47% நேரத்தை Smart Phoneகளில் கழிக்கும் இந்தியர்கள்: Ericsson நிறுவனம் ஆய்வறிக்கை




இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் நேரத்தில் 47 சதவிகிதத்தை WhatsApp, Facebook, Skype, Online Shopping, Email  போன்ற தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்வதில் செலவழிப்பதாக  தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் சுவீடன் நிறுவனமான Ericsson வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொபைல் போன்களில் உள்ள நவீன தகவல் தொடர்பு வசதிகள் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன் மூலம் மொபைல் இணையதள சேவைக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாகவும் எரிக்சன் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.