Friday, July 17, 2015

என்னம்மா, இப்படி பண்றீங்களேமா? - "Infosys" சேர்மன் நாராயணமூர்த்தி கவலை

கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த கண்டுபிடிப்பும் செய்யப்படவில்லை

பெங்களூர்  இந்திய அறிவியல் கழகத்தின்(IISc) பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய "Infosys" சேர்மன் திரு N.R. நாராயணமூர்த்தி,

"கடந்த 50 ஆண்டுகளில் உலக அளவில் சிறப்பான கண்டுபிடிப்புக்கள் குறித்த Top 10 பட்டியல், உலகப் புகழ்பெற்ற, கண்டுபிடிப்பாளர்களின் உற்பத்தி தளமாக விளங்கும் Massachusetts Institute of Technology (MIT) நிறுவனத்தால் உருவாக்கப் பட்டுள்ளது. 

இதில் கார்கள், எலக்ட்ரிக் பல்புகள், ரேடியோ, டிவி, கம்ப்யூட்டர், இன்டர்நெட், வை-பை, எம்.ஆர்.ஐ., லேசர், ரோபாட் உள்ளிட்ட பல்வேறு மிகப் பெரிய கண்டுபிடிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இவைகள் தந்ததற்காக மேற்கத்திய பல்கலைக்கழங்களின் ஆய்வுக்கு நன்றி.

அதே சமயம், இதில் இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் பங்கு என்ன என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக IISc மற்றும் IIT களில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகிற்கும், சமூகத்திற்கு பயனளிக்கும் எந்த கண்டுபிடிப்பும் நிகழ்த்தப்படவில்லை என்பதே உண்மை.  

அறிவாற்றல், உற்சாகம், திறமை, ஆகியவற்றில் மேற்கத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்திய மாணவர்களுக்கு இடையே வேறுபாடு ஏதும்  இல்லை. ஆனால் நமது இளைஞர்கள் இணையதளங்களில் மூழ்கி உள்ளனர். போதிய அளவு உழைக்காமல் மாய உலகில் உள்ளனர். இவற்றை சரி செய்ய கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும்"  என   அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.