Friday, July 10, 2015

மாயமான Dornier விமானம் கண்டுபிடிப்பு (Missing Dornier Aircraft Located Off Tamil Nadu Coastline)



கடலூர், பிச்சாவரம் அருகே 2015 ஜூன் 8ம் தேதி மாயமான Dornier விமானத்தின் உதிரிபாகங்கள் 33 நாட்களுக்கு பின்னர் பிச்சாவரத்திலிருந்து 16.5 மைல் கடல் தொலைவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


                   Pic: Thanks to HELIX
விமானத்தின் கறுப்பு பெட்டி கடலுக்கு அடியில் 950 மீட்டர் ஆழத்தில் இருந்துள்ளது.  விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட ஒலிம்பிக் கேன்யன், ஐ.என்.எஸ்., சிந்துவாஜ் கப்பல்கள் விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் மூலம், விபத்திற்கான காரணம் தெரிய வரும்.