Saturday, April 25, 2015

பொறியியல் விண்ணப்பம் மே 6 , மருத்துவம் மே 11 - தேதிகள் அறிவிப்பு (Engineering May 6 , Medical May 11 - Date Announced)



தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள்  மே 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளதால் Engineering படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 6ம் தேதியும், MBBS, BDS படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 11ம் தேதியும் துவங்குகின்றன.

மெடிக்கல் விண்ணப்பங்கள் 

  மருத்துவக்கல்வி இயக்குனர் Dr.S.Geethalakshmi,M.D.,Ph.D. அவர்கள் கூறியதாவது: MBBS, BDS படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி  முதல் 19 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னை பல் மருத்துவக் கல்லூரியிலும் கிடைக்கும். http://www.tnhealth.org/ இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தரப்பட உள்ளன. மே 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மே 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 12ல், கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் (383) போக, 2,172 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கிறது. ஓமந்தூரார் புதிய அரசு கல்லூரியில் 100 இடங்களுக்கான அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்ஜினீயரிங் விண்ணப்பங்கள்

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே 6ம் தேதி முதல் சென்னையில் சென்னையில் Anna University-Guindy, Govt Polytechnic College-Purasaivakkam, MIT-Chrompet, மற்றும் Bharathi Womens College-Broadway ஆகிய நான்கு இடங்களிலும், தமிழகம் முழுவதும், 60 இடங்களிலும் வினியோகம் செய்யப்படும். 2.40 லட்சம் விண்ணப்பங்கள் தரப்படும். அண்ணா பல்கலை வளாகத்தில் 29ம் தேதி வரையும், பிற இடங்களில் 27ம் தேதி வரையும் கிடைக்கும்.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 29ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பத்தின் விலை 500 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 250 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.இன்ஜினியரிங் படிப்புக்கு, அண்ணா பல்கலையின் 16 அரசு கல்லூரிகளும், 596 சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. இதில், 2.30 லட்சம் இடங்கள் உள்ளன.