Tuesday, April 14, 2015

நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.




             யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
             தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
             நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

             சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
             இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
             இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
  
             வானம் தண்துளி தலைஇ, ஆனாது
             கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
             நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
             முறைவழிப் படூஉம்என்பது திறவோர்

             காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
             பெரியோரை வியத்தலும் இலமே;
             சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


                     கணியன் பூங்குன்றன்
                                                 ( புறநானூறு - 192)







பொருள்:                                                                                               © deccanbluediamonds

            எவ்வூரும் எமது ஊர்.அனைவரும் எம் சொந்தம்.

            துன்பங்களும், இன்பங்களும் நம்மால் தான்.

            பிறர் தந்து வருவதல்ல தீதும், நன்றும்.



            மரணம் என்பது இயற்கை.

            அதனால்,

            வாழ்வு இனிது என

            மகிழ்வதும் தவறு.

            துறவு கொடிது என

            இகழ்வதும் தவறு.



            வெட்டும் மின்னலில்

            விழுகின்ற நீர்த் துளி

            கட்டுக் கடங்காத வெள்ளமாய்

            கல்லும் மண்ணும் புறண்டோட,

            அதில் சிக்கி அதன் வழியே போகும்

            ஓடம் போன்றது உயிர்.



            அது முன்னர் இட்ட முறைவழியே

            போகத் தான் செய்யும் என

            முன்பே அறிந்தவர் முனிவர்.

            அதனால்


                             பெரியோர் என நினைப்பவரை

            வியத்தலும் இல்லை.

            சிறியோரை இகழ்தல் என்பது

            அதனினும் இல்லை.