Wednesday, April 22, 2015

தமிழகத்தில் புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை

தமிழகத்தில் புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது.

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில்  மூன்று நாள் சர்வதேச மாநாடு சென்னையில் துவங்கியது. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா உட்பட பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சந்தோஷ் பாண்டா அவர்கள் பேசும்போது,

நாட்டிலேயே, தமிழகத்தில்தான் அதிக பி.எட்., கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் இனி புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு மத்திய கல்வியல் கவுன்சில் அனுமதி அளிக்காது. தரமற்ற கல்லூரிகள் அதிகமாவதைத் தடுக்கவும், தரமான கல்லூரிகளை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிய கல்லூரி தேவை என்று, மாநில ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், தடையில்லா சான்று அளித்தால் மட்டுமே, அனுமதி குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.