Saturday, April 4, 2015

'Online' ல் 12ம் வகுப்பு விடைத்தாள் நகல் பள்ளிக்கல்வித் துறை முடிவு

 'Online' ல் 12ம் வகுப்பு விடைத்தாள் நகல்

மார்ச் 2015ல் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், திருத்தப்பட்ட விடைத்தாள் நகல்களை, Online மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.
இந்த ஆண்டு முதல் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளியானதும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு உடனே விண்ணப்பிக்கும் வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதனால், மாணவ, மாணவியர் மதிப்பெண் சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. 
மேலும் கூடுதல் வசதியாக மாணவர்கள்,  மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்காக, விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போதும், அவர்களுக்கு தாமதமின்றி நகல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
இதன்படி, இந்த ஆண்டு, Online மூலம், விடைத்தாள் நகல் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான முயற்சிகளை, தேர்வுத் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் இணைந்து மேற்கொண்டு வருவதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.