Saturday, April 11, 2015

8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஏப்ரல் 15 முதல் நோடல் சென்டர்களில் விண்ணப்பிக்கலாம்

 14.04.2015 முதல் 21.04.2015 வரை

8ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள்  14.04.2015 முதல்  21.04.2015 வரை நோடல் மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என வேலூர் மண்டல  தேர்வுத் துறை துணை இயக்குநர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.

தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு தேர்வு எழுத  01.05.2015 அன்று 12½  வயது நிறைவு பெற்று இருக்கவேண்டும்.


தேர்வுக்கட்டணம்  ரூ. 125 மற்றும் ஆன்லைன விண்ணப்பப் பதிவுக் கட்டணம்  ரூ. 50 ஆகியவை சேர்த்து  மொத்தம் ரூ.175/- ஐ கட்டணமாக செலுத்த வேண்டும் 

விண்ணப்பத்துடன் முன்னர் படித்த வகுப்பின் TC அல்லது  பிறப்புச் சான்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

நோடல் சென்டர்கள்:

வேலூர்

1. தோட்டப் பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி - பெண்களுக்கு மட்டும் 
2. செயின்ட் ஆண்ட்ரூஸ், அரக்கோணம்   -  ஆண், பெண்  இருபாலரும் 
3. அரசு மேல்நிலைப்பள்ளி, ராணிபேட்டை - ஆண்கள் மட்டும் 
4.பெண்கள் மேல்நிலைப் பள்ளி , காட்பாடி  - ஆண், பெண்  இருபாலரும் 
5. ராமகிருஷ்ணா மேல்நிலை, திருப்பத்தூர்  - பெண்களுக்கு மட்டும் 
6. மஸ்ருல் உலம் மேல்நிலை , ஆம்பூர்  - ஆண்கள் மட்டும்
7.இந்து மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி - ஆண், பெண்  இருபாலரும்


திருவண்ணாமலை
1.ஷண்முகா இண்டஸ்ட்ரிஸ் மேல்நிலைப்பள்ளி  -ஆண்கள் மட்டும்
2.தியாகி அண்ணாமலை அ.மே.நி.பள்ளி - பெண்களுக்கு மட்டும் 
3. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போளூர் -ஆண், பெண்  இருபாலரும் 
4. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்கம் -ஆண், பெண்  இருபாலரும் 
5.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செய்யாறு - பெண்களுக்கு மட்டும் 
6.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வந்தவாசி -ஆண்கள் மட்டும்
7.சுப்ரமணிய சாஸ்திரி  மேல்நிலைப்பள்ளி, ஆரணி- ஆண், பெண் 
தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட், தேர்வு நடைபெறும் நாட்கள் ஆகிய விவரங்கள் இணையத்தளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.