Sunday, August 30, 2015

லயோலா கல்லூரி மக்கள் ஆய்வு மைய கருத்துக்கணிப்புகள் -தேர்தல் 2016(Layola College Census Predictions- Election 2016)


 
சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வு மையம் சார்பில் இம்மாதம் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களில் நடத்தப்பட்டது.  

3370 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டார்கள். ஆண்களும், பெண்களும் இந்த கருத்துக்கணிப்பில் சம அளவில் கலந்து கொண்டார்கள். அதன் முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன் சுருக்கத்தினை  மட்டும் வரைபடங்களில் அளிக்கிறோம்.







Saturday, August 29, 2015

2009 ஏப்ரல் 1 முதல் 2014 மார்ச் 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு வட்டித்தொகை தள்ளுபடி

வங்கிகளில் 2009 ஏப்ரல் 1 முதல் 2014 மார்ச் 31ம் தேதி வரை  கல்விக்கடன் பெற்றவர்களுக்கு  வட்டித்தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. 

'அரசு அறிவித்துள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் உடனே அளிக்க வேண்டும். வட்டி தள்ளுபடி பெற, தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை வங்கியின் இணையதளங்களில் வெளியிட வேண்டும். இணையதளத்தில் விவரங்கள் வெளியிட்டுள்ளது குறித்தும் விளம்பரம் செய்ய வேண்டும்' என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தி உள்ளது.

மாணவர்களே வங்கிகளை நேரடியாக அணுகி மனு அளித்தும்  கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடியைப் பெறலாம். 

'வட்டி தள்ளுபடி தர மறுக்கும் வங்கிகள் மீது சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவரிடம் புகார் செய்யலாம். புகாரின் பிரதியை, இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் அனுப்பலாம்' என கல்விக்கடன் ஆலோசனைக் குழு அமைப்பாளர், 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன் ஆலோசனை கூறியுள்ளார்.

Friday, August 28, 2015

தமிழகத்திலுள்ள 690 B.Ed கல்லூரிகளில் சேர செப்டம்பர் 3 முதல் விண்ணப்பம்

 

தமிழகத்திலுள்ள  690 B.Ed கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  வரும் செப்டம்பர்  3ம்  தேதி முதல் 10ம் தேதி வரை வழங்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை கீழ்காணும் கல்லூரிகளில் பெறலாம். 

S.No
Name of the College
Phone No
1
Institute of Advance Study in Education, Saidapet, Chennai -15
044-24358351
2
Lady Willingdon College, Triplicane, Chennai-5
044-28445531
3
Govt College of Education, Kumarapalayam,Namakkal Dist
04288-260085
4
Govt College of Education, Orathanadu, Thanjavur District
04372-233258
5
Govt College of Education, Pudukottai
04322-221559
6
Govt College of Education for Women, Townhall, Coimbatore – 641001
0422-2397616
7
Govt College of Education, Silk Mill, Gandhi Nagar, Vellore-6
0416-2243103
8
Lakshmi College of Education ,Gandhigram, Dindigul Dist-624302
0451-2452337
9
Sri Sarada College of Education for Women, Sarada College Road, New Fairlands,
Salem- 636016
0427- 2447538
0427- 244 9201
10
Thiagarajar College of Preceptors, Madurai
0452-2311682
0452- 2311875
11
V.O.C. College of Education, Palayamkottai Road, Thoothukkudu- 628008
0461-2310600
12
St.Ignatius College of Education for Women, South Mutharamman Kovil Street, Palayamkottai, Tirunelveli-627002
http://www.ignatiuscollegeofeducation.com/
0462- 2560558
13
N.V.K.S.D. College of Education, Attoor, Thiruvattar (Via)- 629191, Kanyakumari
04651 282 130

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி 
11.09.2015 மாலை 5.00 மணிக்குள் 

மேலும் விவரங்களுக்கு

Welcome to mythical King Mahabali - Happy Onam for All my Friends

அனைத்து தமிழ் , கேரள  நண்பர்களுக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்


"When Maveli ruled the land,
All the people were equal.
And people were joyful and merry;
They were all free from harm. 



There was neither anxiety nor sickness,
Deaths of children were unheard of,
There were no lies,
There  was neither theft nor deceit,
And no one was false in speech either.



Measures and Weights were right;
No one cheated or wronged his neighbor.


When Maveli ruled the land,
All the people formed one caste less races"

 Thanks To: #HappyOnam, Alicia Blain ‏@trstydotcom, www.ns7.tv, www.deepika.comwww.mathrubhumi.com

Thursday, August 27, 2015

இணைய தவறுகளைத் தடுக்கும் மென்பொருள் கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி (Trisha Prabhu invent 'Rethink' To Stop Cyber bullying)

2014 Google Science Fair  Finalist
Trisha Prabhu


அமெரிக்கா:  சிகாகோவை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி திரிஷா பிரபு இணையதள தவறுகளைத் தடுக்கும் 'Rethink' எனும்  மென்பொருளைக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார். 

தொழில்நுட்ப வளர்ச்சி நமது வாழ்வை ஒருபக்கம் மேம்படுத்தினாலும், மறுபக்கம் அதை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவோரும் பெருகிக்கொண்டேதான் வருகிறார்கள். உண்மையான செய்திகளை மட்டுமல்லாது, ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்துக்கள் நொடிப்பொழுதில் உலகுக்கே தெரிந்துவிடுவதால் அது பல நேரங்களில், பல்வேறு விஷயங்களில் அச்சுறுத்தலாகவே முடிகிறது.

இதைத் தடுக்கும் வகையில்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரிஷா பிரபு என்கிற 13 வயது மாணவி  'Rethink' எனும் மென்பொருளை உருவாக்கி அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.
 
 Galapagos Islands 
 
Google Science Fair கடைசி சுற்று மூலமாக தேர்வு செய்யப்பட்ட 15 பேர்களும் பசிபிக் பெருங்கடலில் உள்ள Galapagos (https://www.galapagosislands.com/) தீவுகளுக்கும், கலிபோர்னியாவில் உள்ள  Virgin Galactic Spaceport (http://www.virgingalactic.com/spaceport-america/)
விண்வெளி மையத்திற்கும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக தலா   50,000 டாலர் அளிக்கப்படுகிறது.
 
 Virgin Galactic Spaceport
 
Google Science Fair கடைசி சுற்று மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களில்   திரிஷா பிரபு மட்டும் அல்லாமல், வேகமான தேடுபொறியை (Search Engine) வடிவமைத்த அன்மோல் துக்ரெல் (Anmol Tukrel) என்பவரும் இந்திய வம்சாவளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

12ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு (XII SPL.SUPP.EXAM-JUNE 2016) அசல் மதிப்பெண் பட்டியல் விநியோகம்

 ஜூன் 2016ல் 12ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள், இன்று (27.08.2015) முதல் 04.09.2015 வரை அந்தந்த தேர்வு மையங்களில் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

04.09.2015 க்கு பின்னர் தேர்வுத்துறை மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் தான் மதிப்பெண் பட்டியல்களை பெற முடியும்

Wednesday, August 26, 2015

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 - National Population Survey 2011( Religious Survey)

மக்கள் தொகை கணக்கெடுப்பு  2011
(Religion Wise)

S.No
Religion
2001
(in Crore)
2001
%

2011
(in Crore)
2011
%

Increase (+) / Decrease (-)
1
Hindu
82.75
80.5%
96.63
79.8%
-
2
Muslim
13.8
13.4%
17.22
14.2%
+
3
Christian
2.40
2.3%
2.78
2.3%
No Change
4
Sikh
1.92
1.9%
2.08
1.7%
-
5
Buddhist
.79
0.8%
.84
0.7%
-
6
Jain
.42
0.4%
.45
0.4%
No Change
7
Others
.66
0.6%
.79
0.7%
+
8
Not Related to Any Religion
.07
0.1%
.29
0.2%
+



100%

100%


7th Pay Commission Report செப்டம்பரில் தாக்கல் செய்யப்படும் - நீதிபதி ஏ.கே. மாத்தூர்



48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது.  

7-வது ஊதியக் கமிஷன் தற்போது,  தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர் டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 7-வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள், 2016 ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். 

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதம், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 619 கோடி செலவாகிறது.

7- வது ஊதிய கமிஷன் பரிந்துரையால், 2016-17-ம் நிதியாண்டில் 16.79 சதவீதம் அதிகரித்து ரூ. 1.16 லட்சம் கோடியாகவும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ. 1.28 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.

இதே போல நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியர் களுக்கான செலவு ரூ. 88,521 கோடியாகும். இது 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின்படி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.