Sunday, August 16, 2015

, 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்


உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும்  இந்தியர்கள்  



தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின்  முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, Google தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) 10.08.2015 அன்று சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

Google நிறுவனர் மற்றும்  தலைமை நிர்வாக அதிகாரி  Larry Page, கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனங்களை மறுசீரமைக்கும் பிரதான நிறுவனமாக 'Alphabet' (https://abc.xyz/) என்ற பெயரில் புதிய நிறுவனத்தை உருவாக்கி உள்ளார். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக  தன்னை நியமித்துக் கொண்ட லாரி பேஜ், 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்க வாழ் தமிழரான சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்களை நியமித்துள்ளார்.



சுந்தர் பிச்சை 12.07.1972 ல் பிறந்தவர். 10ம் வகுப்பு வரை சென்னை, அசோக் நகரில் உள்ள Jawahar Vidyalaya பள்ளியில் படித்தார். பின்   அடையாறு IIT வளாகத்தில் உள்ள வனவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (https://vanavani.iitm.ac.in/), 12ம் வகுப்பு வரை படித்தார்.

கரக்பூர் IIT (http://www.iitkgp.ac.in/)ல்  B.Tech (Metallurgical & Materials Engineering) படித்தார். பின்னர்  அமெரிக்காவில் உள்ள Stanford பல்கலைக் கழகத்தில்  (https://www.stanford.edu/)ல், M.S பயின்றார். பின் பென்சில்வேனியாவில் உள்ள Wharton (https://www.wharton.upenn.edu/), பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றார். 



பெற்றோர் மற்றும் மனைவி அஞ்சலி ஆகியோருடன் அமெரிக்காவில் வசித்து வரும் அவருக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.


2004ம் ஆண்டு முதல் Google நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை இதற்கு முன் அந்நிறுவனத்தின் தலைமை துணைத்தலைவராக பணியாற்றினார்.

இவர் Android, Google Chrome, Google Engineering, Google Apps, Gmail, Google Docs உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்து வந்தவர். 2008ம் ஆண்டு பிச்சை தலைமையிலான குழு Chrome Browserஉருவாக்கியது.

இதுவரை Google தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த அதன் நிறுவனர் Larry Page கவனித்து வந்த Google Search. Google+, Business, Marketing and Advertisement , Google Maps, Youtube, Apps மற்றும் Infrastructure ஆகிய பிரிவுகளை இனி சுந்தர் பிச்சை நிர்வகிப்பார்.

கூகுளின் எதிர்கால அதி உயர் தொழில்நுட்பப் பிரிவுகளான Google Calico, Google X-Labs, Bio Technology ஆகியவை கூகுளில் இருந்து பிரிக்கப்பட்டு 'Alphabet' என்ற பெயரில் தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவை Larry Page கவனிப்பார்.




உலகளவில், முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில், இந்தியர்கள் அதிகமாக இடம் பெற்று வருவதற்கு சர்வதேச முன்னணி பத்திரிகையான, 'TIME'  இதழ்  பாராட்டு தெரிவித்துள்ளது.
 
அதில், 'உலக முன்னணி நிறுவனங்களுக்கு தலைமை நிர்வாகிகளை ஏற்றுமதி செய்யும் உற்பத்திக் களமாக இந்தியா திகழ்கிறது' என, குறிப்பிட்டுள்ளது. இந்தியர்கள் தலைமைப் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து ஆண்டுக்கு 25 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பிற முன்னணி நிறுவனங்களில் கோலோச்சும் இந்தியர்கள் 
 
Satya Nadella



ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த சத்யா நாதெள்ளா, Microsoft நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். 

shantanu narayan






ஐதராபாத்தில் பிறந்த சாந்தனு நாராயண், புகழ் பெற்ற Adobe நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். 



Rajiv Suri




இந்தியாவில் பிறந்து, சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரான ராஜீவ் சூரி, 'Nokia Solutions and Networks' நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.


Indra Nooyi 



Pepsi நிறுவனத்தின் CEO வாக, சென்னையில் பிறந்த  இந்திரா நுாயி சாதனை படைத்து வருகிறார்