Wednesday, August 26, 2015

7th Pay Commission Report செப்டம்பரில் தாக்கல் செய்யப்படும் - நீதிபதி ஏ.கே. மாத்தூர்



48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது.  

7-வது ஊதியக் கமிஷன் தற்போது,  தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர் டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 7-வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள், 2016 ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். 

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதம், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 619 கோடி செலவாகிறது.

7- வது ஊதிய கமிஷன் பரிந்துரையால், 2016-17-ம் நிதியாண்டில் 16.79 சதவீதம் அதிகரித்து ரூ. 1.16 லட்சம் கோடியாகவும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ. 1.28 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.

இதே போல நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியர் களுக்கான செலவு ரூ. 88,521 கோடியாகும். இது 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின்படி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.