Showing posts with label PAY. Show all posts
Showing posts with label PAY. Show all posts

Saturday, October 17, 2015

epayroll'ல Bill போடுறீங்களா? DA வை நீங்க மாத்த முடியாது. NIC Server ல தான் மாத்த முடியும். Wait பண்ணுங்க.


epayroll மூலமாக அக்டோபர் மாத ஊதியப் பட்டியலை தயாரிக்கும் வேலையில் இருப்பவர்கள், தங்களுடைய  login சென்று DA வை 113% லிருந்து 119% ஆக மாற்ற முடியாது.  NICன்  Web Payroll System server ல் மாற்றினால் தான் நம்மால் புதிய DA வில் ஊதியப் பட்டியலை தயாரிக்க முடியும்.

திங்கள்கிழமை(19.10.2015) அன்று NIC Server ல் புதிய DA(119%) மாற்றப்படும். எனவே ஊதியப் பட்டியல்களை தயாரிக்கும் வேலையில் இருப்பவர்கள் திங்கள்கிழமை மதியம் முயற்சிக்கவும்.

Link:   

     

Wednesday, August 26, 2015

7th Pay Commission Report செப்டம்பரில் தாக்கல் செய்யப்படும் - நீதிபதி ஏ.கே. மாத்தூர்



48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது.  

7-வது ஊதியக் கமிஷன் தற்போது,  தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர் டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 7-வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள், 2016 ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். 

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதம், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 619 கோடி செலவாகிறது.

7- வது ஊதிய கமிஷன் பரிந்துரையால், 2016-17-ம் நிதியாண்டில் 16.79 சதவீதம் அதிகரித்து ரூ. 1.16 லட்சம் கோடியாகவும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ. 1.28 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.

இதே போல நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியர் களுக்கான செலவு ரூ. 88,521 கோடியாகும். இது 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின்படி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.

Wednesday, January 21, 2015

7th Pay Commission Pay Scales As On 01.01.2016 ( Estimated )

7வது  ஊதியக்  குழுவில் எதிர்பார்க்கப்படும்  காலமுறை ஊதிய விகிதங்கள்


7வது  ஊதியக் குழுவினை  முந்தைய மத்திய  அரசு  28.02.2014 அன்று  அமைத்தது.  நீதிபதி திரு. அசோக் குமார் மாத்தூர்  அவர்களை சேர்மன் ஆகக்  கொண்டு  அமைக்கப் பட்டுள்ள 7வது ஊதியக் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப் பட்டு  01.01.2016 முதல் நடைமுறைப்  படுத்தப்படும்  என  எதிர்பார்க்கப் படுகிறது.