Showing posts with label Rethink. Show all posts
Showing posts with label Rethink. Show all posts

Thursday, August 27, 2015

இணைய தவறுகளைத் தடுக்கும் மென்பொருள் கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி (Trisha Prabhu invent 'Rethink' To Stop Cyber bullying)

2014 Google Science Fair  Finalist
Trisha Prabhu


அமெரிக்கா:  சிகாகோவை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி திரிஷா பிரபு இணையதள தவறுகளைத் தடுக்கும் 'Rethink' எனும்  மென்பொருளைக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார். 

தொழில்நுட்ப வளர்ச்சி நமது வாழ்வை ஒருபக்கம் மேம்படுத்தினாலும், மறுபக்கம் அதை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவோரும் பெருகிக்கொண்டேதான் வருகிறார்கள். உண்மையான செய்திகளை மட்டுமல்லாது, ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்துக்கள் நொடிப்பொழுதில் உலகுக்கே தெரிந்துவிடுவதால் அது பல நேரங்களில், பல்வேறு விஷயங்களில் அச்சுறுத்தலாகவே முடிகிறது.

இதைத் தடுக்கும் வகையில்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரிஷா பிரபு என்கிற 13 வயது மாணவி  'Rethink' எனும் மென்பொருளை உருவாக்கி அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.
 
 Galapagos Islands 
 
Google Science Fair கடைசி சுற்று மூலமாக தேர்வு செய்யப்பட்ட 15 பேர்களும் பசிபிக் பெருங்கடலில் உள்ள Galapagos (https://www.galapagosislands.com/) தீவுகளுக்கும், கலிபோர்னியாவில் உள்ள  Virgin Galactic Spaceport (http://www.virgingalactic.com/spaceport-america/)
விண்வெளி மையத்திற்கும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக தலா   50,000 டாலர் அளிக்கப்படுகிறது.
 
 Virgin Galactic Spaceport
 
Google Science Fair கடைசி சுற்று மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களில்   திரிஷா பிரபு மட்டும் அல்லாமல், வேகமான தேடுபொறியை (Search Engine) வடிவமைத்த அன்மோல் துக்ரெல் (Anmol Tukrel) என்பவரும் இந்திய வம்சாவளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.