Saturday, June 27, 2015

நாளை முதல் 28.06.2015 அண்ணா பல்கலைக் கழக கவுன்சிலிங் துவக்கம் - TNEA 2015

 
தமிழகத்தில் உள்ள 539 இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு  அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் Admission Counselling 28.06.2015 (ஞாயிறு)  முதல்  துவங்கி 30.07.2015ல் முடிவடைகிறது.  கவுன்சிலிங்கில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள் குளிக்கவும் தனி வசதி செய்யப்பட்டுள்ளது.

  • இடைத்தரகர்கள் உள்ளே வர தடை விதிக்கப் பட்டுள்ளது.

  • அண்ணா பல்கலை ஊழியர்கள் போல் நடித்து மாணவர்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அவர்கள் மீது பெற்றோர் புகார் கொடுக்கலாம்.

  • கவுன்சிலிங் வளாகத்தில், ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில், பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

  • குடிநீர், முதலுதவி, தீயணைப்பு மற்றும் , காவல் உதவி மையங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

  • பல்கலை வளாகத்தில், தனியார் கல்லுாரிகளின் துண்டு பிரசுரங்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  • வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு, அசல் அழைப்பு கடிதம் கொண்டு வந்தால் மாணவருக்கும், அவருடன் வந்து செல்லும் ஒருவருக்கும், அரசு பேருந்தில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும்.

  • வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் குளிக்க, குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது.

  • கவுன்சிலிங் அழைப்பு கடிதம் தபாலில் கிடைக்காதவர்கள், மூன்று மணி நேரத்திற்கு முன் வந்து, அண்ணா பல்கலையில் கடித நகல் பெற்றுக் கொள்ளலாம்.

  • கவுன்சிலிங் அரங்கின் உள்ளே வங்கிகளின் சார்பில், எட்டு சிறப்புக் கவுன்டர்கள் உள்ளன. 

  • மாணவர்கள், மூன்று வகை கல்லுாரிகள் மற்றும் விருப்ப பாடங்களை பதிவு செய்யலாம். இதற்காக, 50 பேர்  ஒரே நேரத்தில் பதிவு செய்ய 50 கணினிகள் வைக்கப்பட்டுள்ளன.

Friday, June 26, 2015

CPS நிதியில் 25% தொகையை 10 வருடம் பணிமுடித்தவர்கள் திரும்ப பெறலாம் - பயனுள்ள அறிவிப்பா?

தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த அனைவரும் CPS திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளனர். 
CPS  கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 8.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஊழியர் ஓய்வுபெறும்போது 60%  திருப்பிக் கொடுக்கப்படும். எஞ்சிய 40%  தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். 

பழைய ஓய்வூதிய திட்டமான GPF முறையில், ஊழியர்கள் தங்களின் GPF நிதியிலிருந்து  6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு கடன்பெறலாம். கடனை திருப்பி செலுத்திய பிறகு மீண்டும் கடன் பெறமுடியும். மேலும் 15 ஆண்டுகள்  பணி முடித்த ஒருவர் GPF நிதியில் இறுதித்தொகையின் ஒரு பகுதியை (Part Final Withdrawal) திரும்ப எடுத்துக்கொள்ளலாம். ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் GPF போன்று கடன்பெறும் வசதியோ, பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியோ இல்லாமல் இருந்துவந்தது.
  
தற்போது CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் 10 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால் தங்களின் CPS நிதியில் இருந்து 25% தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 
ஆனால்  இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. அதன்படி, 
  • CPS சந்தாதாரர்கள் தங்கள் பணிக் காலத்தில் 3 முறை சிபிஎப் தொகையை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். 

  • பிள்ளைகளின் படிப்பு செலவு, திருமண செலவு, வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, மருத்துவ செலவினங்களுக்கு (புற்றுநோய், சீறுநீரக குறைபாடு, இதய நோய் போன்றவை) இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • ஒவ்வொரு முறைக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும்.இருப்பினும், மருத்துவ செலவினத்துக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதி - Gmail அறிமுகம் - Undo Send for Gmail on the web



Previously a popular feature in Gmail Labs, and recently added to Inbox by Gmail, today we’re adding 'Undo Send' as a formal setting in Gmail on the web. 

'Undo Send' allows people using Gmail to cancel a sent mail if they have second thoughts immediately after sending. The feature is turned off by default for those not currently using the Labs version, and can be enabled from the General tab in Gmail settings.


undo-send.png

People currently using the Labs version of 'Undo Send' will have the setting turned on by default at launch.


இமெயிலை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது. சில நேரங்களில் மெயிலை அனுப்பிய பின் அதை ரத்து செய்ய வேண்டும் என நினைக்கும் நிலை வரலாம். அவசரத்தில் அல்லது உணர்ச்சிவசப்பட்டு ஒரு மெயிலை அனுப்பி விட்டு பின்னர் அவ்வாறு செய்திருக்க வேண்டாம் என நினைப்பது போன்ற பல காரணங்களுக்காக இவ்வாறு நினைக்கலாம். 


இது போன்ற நேரங்களில் கைகொடுப்பதற்காக Gmailல்  தற்போது Undo Send வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Gmailல் மெயிலை  தட்டச்சு செய்து Send பட்டனை  அழுத்திய பின், திரையின் மேல்பகுதியில்   Undo Send என  குறிப்பிட்டு  ஒரு பெட்டி எட்டிப்பார்க்கும். 


 
மெயிலில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே Undo பட்டனை கிளிக் செய்தால், Mail அனுப்பப்படாமல் திரும்பி வந்துவிடும். அதன் பிறகு அந்த மெயிலில் திருத்தம் செய்யலாம் அல்லது டெலிட் செய்துவிடலாம். 


இந்த வசதியை பயன்படுத்த Gmailன் வலப்புறத்தில் உள்ள Settings பகுதிக்கு சென்று Undo Sendல்   5 முதல் 30 விநாடிகள் வரையான கால  அவகாசத்தை அமைத்துக் கொள்ளலாம். அதாவது 30 விநாடிகள் வரை அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் அவகாசம் இருக்கும். ஆக, இனி தவறான முகவரிக்கு இமெயிலை அனுப்பி வருந்தும் நிலை இருக்காது.


Criptext Mail 

இதே போல மெயிலை திரும்ப பெறும் வசதியை Criptext எனும் புதிய மெயில் சேவையும் அளிக்கிறது. Gmail விட ஒரு படி மேலே சென்று படிக்கப்பட்ட பிறகும் கூட அந்த மெயிலை திரும்ப பெற வழி செய்கிறது. இன்பாக்சில் வந்த மெயிலை படிப்பவர் டெலிட் செய்வது போல அனுப்பியவர் டெலிட் செய்ய இது வழி செய்கிறது. ஆக நாம் அனுப்பிய மெயிலை நாம் கட்டுப்படுத்த முடியும். தகவலை பரிமாறிக்கொண்ட பின் அந்த தகவல் ஆவணமாக இன்னொருவர் கம்ப்யூட்டரில் இருப்பதை இது தவிர்க்கிறது.

ஒரு மெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாக மறைந்துவிடச்செய்யும் வசதியும் இது அளிக்கிறது.

ரகசிய மற்றும் மிகவும் நம்பகமான தகவல் கொண்ட மெயில்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.பின்னாளில் வரக்கூடிய வில்லங்கத்தையும் தவிர்க்க உதவலாம். அதேபோல அனுப்பிய மெயில் படிக்கப்பட்டு விட்டதா என்பதையும் இதன் மூலம் கண்காணிக்கலாம். மெயிலை Encrypt செய்தும் அனுப்பலாம்.


 
Criptext  Mail ஐ பெற http://www.criptext.com/email/  

Wednesday, June 24, 2015

அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் : பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை


6லிருந்து 12 வரை



'Special Class

      அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க கல்வி ஆண்டின் துவக்கம் முதல் 6லிருந்து 12ம்  வகுப்பு உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.



தற்போது, சென்னை உள்ளிட்ட நகரங்களில், காலை 9 மணிக்கு வகுப்புகள் துவங்கி மாலை, 3.30 மணிக்கு முடிகிறது. மாவட்டங்களில்  9.30 மணிக்கு பள்ளி துவங்கி, 4.00 மணிக்கு முடிகிறது. 

தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த, ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு, காலையில் பள்ளி துவங்கும் முன் ஒரு மணி நேரமும்(8.30 to 9.30),   10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் வகுப்புகள் முடிந்த பின் ஒன்றரை மணி நேரமும் (4.00 முதல் 5.30) சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

'இந்த திட்டத்தில், தினமும் எந்த பாடத்துக்கு சிறப்பு வகுப்பு என்பதை, ஆசிரியர்கள் முன்கூட்டியே அட்டவணை தயாரித்து, தலைமை ஆசிரியருடன் ஆலோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்; ஆசிரியர் இல்லை என்ற காரணம் காட்டி, சிறப்பு வகுப்பை ரத்து செய்யக் கூடாது' என, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் Passport பெற NOC தேவையில்லை


 மத்திய அரசின் உத்தரவு நகல்

GOI - PRIOR INTIMATION LETTER FOR PP REG LTR.pdf 

Tuesday, June 23, 2015

தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் DEO பதவி உயர்வு


பள்ளிக்கல்வித் துறையில்  காலியாக உள்ள 60 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு, தலைமை ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில்  நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களில், மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியலை மாவட்ட வாரியாக தயாரித்து அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

Winrar Archiver Free Download

Click Below to Download the Winrar Archiver

Monday, June 22, 2015

2005க்கு முந்தைய அனைத்து ரூபாய் நோட்டுகளுக்கும் ஜூன் 30 வரை மட்டுமே ஆயுட்காலம்

கடந்த, 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஜூன் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும்.  இந்த அவகாசம் முடிவடைய  இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில்  'பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் தங்கள் கணக்கில் அவற்றை Deposit செய்யலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கறுப்பு பண புழக்கத்தை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டது. 

அதில், '2005க்கு முன் அச்சிடப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் உட்பட அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகாது. எனவே இந்த  ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலில் இதற்கு டிசம்பர் 2014 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர்  2015 ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

ஒவ்வொரு ரூபாய் நோட்டின் பின்புறத்தின் கீழ் பகுதியில், அந்த நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.அப்படி குறிக்கப்படவில்லை என்றால் அது 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு என அறியலாம்.

Sunday, June 21, 2015

International Day of Yoga 21 JUNE 2015


Rid your body of its impurities,
let your speech be true and sweet, 
feel friendship for the world, 
and with humility seek wealth and knowledge
 
“Be a lamp to yourself. 
Be your own confidence. 
Hold on to the truth within yourself as to the only truth.” 
                                                                                 ~ Buddha
Don’t move the way fear makes you move. 
Move the way love makes you move. 
Move the way joy makes you move


Yoga is not about the shape of your body,
 but the shape of your life. 
Yoga is not to be performed; 
yoga is to be lived. 
    Yoga doesn’t care about what you have been; 
     yoga cares about the person you are becoming. 

 A person experiences life as 
something separated from the rest -
 a kind of optical delusion of consciousness. 

Our task must be to free ourselves from this self-imposed prison, 
and through compassion, 
to find the reality of Oneness
                                                                                   ~ Albert Einstein




Click Here to download the Common Yoga Protocol  by AYUSH, Govt of India

WhatsApp மூலம் அவதூறு பரப்புபவர்களை கண்காணிக்கும் பணியில் தமிழக சைபர் கிரைம்

'Facebook' நிறுவனத்துடன்  MOU ?


அவதுாறு மற்றும் பீதியைப் பரப்பும், 'WhatsApp' பதிவுகளை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இணையதளங்களை விட 'WhatsApp' பதிவுகள்  காட்டுத் தீ போல  சில நிமிடங்களில் நாடு முழுவதும் பரவுகின்றன. இதில் தீய நோக்கத்தோடு செய்யப்படும் பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

சில நாட்களுக்கு முன் சில தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டு, 'இவை தீவிரவாதிகளின் எண்கள். இதைத் தொடர்பு கொண்டால், குண்டு வைப்பது உள்ளிட்ட வேலைகள் நடக்கும். எனவே, இந்த எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம்' என, பொதுமக்களை எச்சரிப்பதாக, BSNL பெயரில்  'WhatsApp' பதிவு வெளியானது. ஆனால்  இந்த பதிவுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என BSNL நிறுவனம் தெரிவித்தது.

உள்நோக்கத்தோடு  அவதுாறு பரப்பும் வகையில்  இப்பதிவு உள்ளது என  புகார் எழுந்துள்ளது. எனவே  'WhatsApp' பதிவுகளை  தமிழக சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணிக்கத் துவங்கி உள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:


'WhatsApp பதிவுகள்  ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து  மற்றொரு எண்ணிற்கு செல்லும் போது, தொலைபேசி எண்ணிற்கு உரியவர்களை, பொறுப்பாக்க முடியும். இதுபோன்ற புகார்கள் மீது  நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

இரு தொலைபேசி எண்களுக்கு இடையே நடக்கும் வாட்ஸ் ஆப் உரையாடல், தொலைபேசி உரையாடல் போலத் தான் கருதப்படும். ஆனால், 'WhatsApp Groups' மூலம் பரப்பப்படும் பதிவுகள், எங்கிருந்து துவங்கியது என்பதை கண்டுபிடிப்பது சற்று கடினமாக உள்ளது.

குரூப் பதிவின் மூலத்தை, 'WhatsApp' சர்வரில் இருந்தே பெற முடியும். 'WhatsApp' சேவை, 'facebook' நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இதன் அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது. எனவே  WhatsApp பதிவின் மூலத்தைப் பெற  பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளோம்.  தற்போதைக்கு குரூப் பதிவு குறித்து, வரும் புகார்களை பதிவு செய்து, விசாரணை மட்டும் நடத்தி வருகிறோம்' என அவர் தெரிவித்துள்ளார்.

அவதுாறு பரப்பும் WhatsApp பதிவுகளை செய்வோருக்கு  சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க  அரபு நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.

சில நாடுகள் WhatsApp பயன்படுத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Friday, June 19, 2015

‘அனைத்து பள்ளிகளுக்கும் ஒருங்கிணைந்த சட்டம் வகுக்கப்படும் ’ - தமிழக அரசு


முன்னாள் மத்திய அமைச்சர்  ஆர்.வேலு அவர்கள் 2011ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார் .  

'மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான விதிமுறைகள்  செல்லாது என அறிவிக்க வேண்டும்.  சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களால் 1976 ஜூன் 1ம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை தவிர  மற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை  ரத்து செய்ய வேண்டும்' என்பது அந்த மனுவின் சாரம்.

இதற்கு கல்வி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய ’முதல் பெஞ்ச்’ முன நேற்று விசாரணைக்கு வந்தது.

பள்ளி கல்வி துறை சார்பில்  இணைச் செயலர் அழகேசன் தாக்கல் செய்த கூடுதல் பதில் மனுவில் 

'கடந்த 1973ல் கொண்டு வரப்பட்ட 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம்'  சட்டப்பூர்வமானது. அனைத்து தனியார் மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான விதிமுறைகள் சட்டப்பூர்வமற்றவை. இவற்றுக்கென ஒருங்கிணைந்த சட்டத்தை வகுக்க,  உயர்மட்டக் குழுவை அமைக்க  அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தச் சட்டம், சமச்சீர் கல்வி சட்டம் மற்றும் இலவச, கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில் இருக்கும்'  என தெரிவிக்கப் பட்டுள்ளது.


Thursday, June 18, 2015

MBBS, BDS நாளை கலந்தாய்வு- MBBS,BDS Counseling Schedule and Cutoff Details


MBBS, BDS படிப்புகளுக்கு நாளை முதற்கட்ட கலந்தாய்வு துவங்குகிறது; 4,800 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் அரங்கிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரியில் 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது;
ஞாயிற்றுக் கிழமையும் கலந்தாய்வு உண்டு. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு அரசு கல்லூரிகளில் 2257; எட்டு சுயநிதி கல்லூரிகளில் 551 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. 'மறுகூட்டல் மறுமதிப்பீட்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதற்கான சான்றுகளை கட்டாயம் எடுத்து வர வேண்டும்' என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் தெரிவித்து உள்ளார்.


கலந்தாய்வு தேதி, 'கட் - ஆப்' விவரம்

19ம் தேதி, விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

தேதி
பிரிவு
'கட் - ஆப்'
20.06.2015
General
200 - 198.25
21.06.2015
General
198.25 - 197.50
22.06.2015
General
197.50 - 197.00
23.06.2015
General
197.00 - 196.25
24.06.2015
BC
196.50 - 196.25
BCM
196.50 - 195.00
MBC
196.50 - 195.50
SC
196.50 - 192.00
25.06.2015
SC
192.00 - 190.50
SCA
196.50 - 186.75
ST
194.25 - 180.25
 


ஜூலை 1 முதல் 2 ஹெல்மெட் வாங்கி வச்சுக்குங்க.




ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வோரும் அதில் பயணிப்போரும் கண்டிப்பாக 'ஹெல்மெட்' அணிய வேண்டும். தவறினால் மோட்டார் வாகன சட்டம் - 1988, பிரிவு 206ல் தெரிவிக்கப் பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்மந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள், ஓட்டுனர் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும்.இந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய 'ஹெல்மெட்' மற்றும் அதை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காண்பித்தால் மட்டுமே, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும்' என, தமிழக அரசு உள்துறை முதன்மை செயலர் அபூர்வா வர்மா செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

பின் இருக்கையில் பெண்கள் அமர்ந்திருந்தால், அவர்களும் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.

'தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஜூலை 1 முதல் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும். இதை தமிழக உள்துறை மற்றும் டி.ஜி.பி., நிறைவேற்ற வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தர விட்டதை அடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
.

மோட்டார் வாகன சட்டம் 

மோட்டார் வாகன சட்டம் - 129ன் படி, இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும், 'ஹெல்மெட்' அணிவது அவசியம்.

மோட்டார் வாகன சட்டப்படி, 'ஹெல்மெட்' இன்றி இரு சக்கர வாகன ஓட்டுபவருக்கு முதலில் 100 ரூபாய்; தொடர்ந்து விதியை மீறும் பட்சத்தில் 300 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்  தற்போது தமிழக அரசு, 'ஹெல்மெட்' கட்டாயம். இல்லையென்றால், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்' என அறிவித்துள்ளது.

'ஹெல்மெட்' அணிவது கட்டாயம் என்றாலும், அதை அணியாவிட்டால், அபராதம் வசூலிக்க தான் சட்டத்தில் இடம் உள்ளது என்கின்றனர் வழக்கறிஞர்கள்.


வழக்கறிஞர்களின்  பார்வை

அச்சுறுத்தும் நடவடிக்கையாக, அரசின் அறிவிப்பு உள்ளது. உயிர் பாதுகாப்புக்கு தலை கவசம் அணிய வேண்டும் என சட்டமும், உயர் நீதிமன்றமும் கூறியுள்ளது.ஆனால், 'ஹெல்மெட்' அணியாவிட்டால், ஆவணங்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என சட்டத்தில் கூறப்படவில்லை. சட்டப்படி, அபராதம் வசூலிக்கலாம் என  வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் கூறியுள்ளார்.

Wednesday, June 17, 2015

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஜூன் 18 முதல் ’ஹால் டிக்கெட்’

வரும் ஜூன்/ஜூலை 2015ல்  நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களுக்கும் (தட்கல் உட்பட) ஜூன் 18ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்பட உள்ளது.

தனித்தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் மார்ச் 2015 பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து  தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பள்ளிக்கு தாமதமாக வந்த 8 ஆசிரியர்களுக்கு 'ABSENT ' - திருவண்ணாமலை