Monday, September 21, 2015

அக்டோபர் 8ல் பள்ளிகளை மூடி போராட்டம் - ஜாக்டோ , பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு

பங்களிப்பு பென்ஷன் திட்டம்(CPS) ரத்து உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  அக்டோபர் 8ம் தேதி   தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும் என, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.

சிவகங்கையில், அவர் கூறியதாவது: 

முதல்வர் ஜெ., சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஆட்சிக்கு வந்தவுடன் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன் என்றார். இன்று வரை ரத்தாகவில்லை. எனவே பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அக்டோபர் 8ம் தேதி தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆசிரியர்கள், பள்ளிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என அவர் கூறினார்.

வலையில் சிக்கிய மீன்கள் (Fishing on the net)

Thanks to: my Google+ friends.












Saturday, September 19, 2015

ஒரு சித்திரம் ஒரு சிந்தனை







கோஸ்ட்டா ரிகா(costa-rica) வர்ணமேகங்கள்



வானவில் போன்று வண்ணமயமாக காட்சியளித்த மேகம், கோஸ்ட்டா ரிக்கா (Costa Rica) நாட்டு மக்களை ஆச்சர்யத்திலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள இயற்கை அழகு மிக்க குடியரசு நாடான கோஸ்ட்டா ரிக்காவில் அண்மையில் வண்ண மயமான மேகங்கள் ஒன்று திரண்டு காட்சியளித்து அங்குள்ள மக்களை ஆச்சர்யப்படுத்தியது


அந்நாட்டு மக்கள் அந்த மேகத்தை அபோகாலிப்டிக் மேகங்கள் என்றும், கடைசி காலத்தை பிரதிபலிக்கும் மேகங்கள் என்றும் கூறிவருகின்றனர்.



இந்த வண்ணமயமான மேகத்தை கோஸ்ட்டா ரிக்காவின் பல்வேறு நகரங்களில் தோன்றியது. மக்கள் இதனை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

பலர் இந்த மேகத்தை கடவுளின் சாயல் என்றும் கூறி வருகின்றனர்.  


Friday, September 18, 2015

அக்டோபர் மாதம் 21 முதல் 25 வரை 5 நாள் தொடர் 'லீவு


அக்டோபர் மாதம் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை வருவதால், பொதுமக்கள் இப்போதே தங்கள் வேலைகளை 'பிளான்' பண்ணிக்கொள்வது நல்லது. 

அக்.21ம் தேதி (புதன்) ஆயுத பூஜை, 22ம் தேதி (வியாழன்) விஜயதசமி, 23ம் தேதி (வௌ்ளி) மொகரம், 24ம் தேதி (சனி), 25ம் தேதி (ஞாயிறு) ஆகியவையே அந்த விடுமுறை நாட்கள். ஒரே வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் பல பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஐந்து நாட்களுமே அரசு அலுவலகங்கள் இயங்காது என்பதால், சொந்த வேலையாக அங்கு செல்ல வேண்டியவர்கள் செல்லத் தேவையில்லை.

சுற்றுலா: பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை என்பதால், குழந்தைகளும் விடுமுறையில் இருப்பர். எனவே, குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவோரும் இப்போதே திட்டமிட்டால், பயணம் மகிழ்ச்சியானதாக அமையும்.

வங்கிகள்: வங்கிகளுக்கும் இதே கதை தான். நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை என்பதால், அவர்களுக்கும் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்றால் வர்த்தகர்களும் பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, 24ம் தேதி சனிக்கிழமை வங்கிகள் இயங்க அறிவுறுத்தப்படலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது. இதுகுறித்து வங்கிகள் இனிமேல் தான் அறிவிக்கும்.

தொடர் விடுமுறை என்றால் ஏடிஎம்-களிலும் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படும். எனவே, அதற்கேற்றாற்போல் பொதுமக்கள் திட்டமிடுவது நல்லது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் B.Ed படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (18.09.2015)  வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவி கல்வியியல் கல்லுாரிகளில், B.Ed மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் செப்- 28ம் தேதி நடக்கிறது. லேடி வெலிங்டன் கல்லுாரி மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. 

மொத்தமுள்ள 1800 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 7,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மதிப்பெண்ணுக்கு ஏற்ப வெயிட்டேஜ் முறையில், தரம் நிர்ணயிக்கப்படுகிறது. 

தரவரிசை பட்டியல் இன்று(18.09.2015)  மதியம் அல்லது மாலை 4.00 மணியளவில் http://www.ladywillingdoniase.com மற்றும் http://www.tnteu.in/ இணையதளங்களில் வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

Wednesday, September 16, 2015

+2 தனித்தேர்வு செப் -18 முதல் Hall Ticket ( XII PRIVATE EXAMINATION SEP-2015 HALL TICKET)

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு,  28.09.2015 அன்று துவங்கி, அக்டோபர் 6ல் முடிவடைகிறது. 
+2 தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை 18.09.2015  முதல்  www.tndge.in   இணையதளத்தில் செய்துக்கொள்ளலாம் என தேர்வுத்துறை தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

Tuesday, September 15, 2015

அறிஞர் அண்ணா ( C. N. Annadurai )


(15.09.1909 - 03.02.1969)
 
செல்வம் சிலரிடம் சென்று குவிந்திடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது, 
அது கொண்டவனையும் அழித்துவிடும், 
சமூகத்தில் வலிவற்றவரையும் அழித்துவிடும்.
 பணம் பெட்டியிலே தூங்குகிறது...
 பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்...
 ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறான், 
இல்லாவிடில் ஏன் இத்தனை பிச்சைக்காரர்கள்?”

***

திருமண வீட்டிலே கொடுக்கின்ற சந்தனமானாலும், உடலிலே பூசி, அது நன்றாக உலர்ந்து, கொஞ்சம் அரிப்பு எடுக்க ஆரம்பித்தால் வீட்டிலே வந்து கழுவுகிறோமே, அது சந்தனம்-மணமிருக்கின்றது. அன்போடு கொடுத்தார்கள். உபசாரத்திற்காகக் கொடுத்தார்கள் என்றாலும் பூசி உலர்ந்து விட்டால் மறுபடியும் துடைத்து விடுகின்றோமே சந்தனத்தையே துடைக்கின்றோம் என்றால், வெள்ளைக்காரன் பூசிவைத்த அந்தச் சேற்றிலே இன்றைய தினம் நின்று கொண்டு “இது எவ்வளவு வாசனை தெரியுமா, இதிலேதான் எனக்குச் சமதர்ம மணம் கிடைக்கின்றது” என்று என்னுடைய கம்யூனிஸ்ட் நண்பர்கள் சொன்னால், நான் அவர்களுடைய நாசிக் குற்றத்தைப் பற்றிப் பரிதாபப்படுவதா, அல்லது அவர்களுக்குத் திடீரென்று சேற்றிலே தோன்றி விட்ட காதலைப்பற்றிப் பச்சாதாபப்படுவதா!

 ***
நாட்டு மக்களுக்கு என்னுடைய பாஷை புரிந்து விட்டது அதை இனி யாராலும் அணைக்க முடியாது.

நாட்டு
மக்கள் அந்தப் பகுதியிலே திரும்புகின்றார்கள் என்ற உடனே, கை தட்டி, கம்யூனிஸ்டுகள்அங்கே போகாதே அது ஆபத்தான பாதை, என் பின்னோடு வா, என் பின்னோடு வாஎன்று அழைக்கின்றார்கள். எங்கே ஐயா? என்று கேட்டால் டெல்லி வரையிலே போகலாம் என்கிறார்கள். நான் தமிழ்நாட்டு மக்களை, கொல்லிமலையைப் பாருங்கள், குடகு மலையைப் பாருங்கள், கொச்சி மலையைப் பாருங்கள், பாலாற்றைப் பாருங்கள், காவேரியைப் பாருங்கள், வைகையைப் பாருங்கள், தாமிரபணியைப் பாருங்கள் என்கிறேன். காங்கிரஸ்காரர்களே, தேவலோகத்திலே ஓடுகின்ற ஆற்றைப் பாருங்கள் என்கிறார்கள். கம்யூனிஸ்டுகளோ கங்கைக்கரைக்கே வா என்று அழைக்கின்றார்கள். காலிலே வலிவு இருக்கின்றதா? கருத்து அதற்கு இடம் தருமா?

ஆகையினால்தான்
பழந்தமிழகம் எப்படி டெல்லியின் பிடிக்குக் கட்டுப்படாமல், எந்த ஆதிகத்திற்கும் உட்படாமல், யாரையும் ஆதிக்கத்திற்குக் கொண்டு வராமல், மற்றவர்களை மதித்து மற்றவர்களாலே மதிக்கப்பட்டு, மற்றவர்களை நண்பர்களாகப் பெற்று, மற்றவர்களுக்கு அறிவை ஊட்டி, மற்றவர்களிடமிருந்து அறிவைப் பெற்றுக்கொண்டு, மற்றவர்களிடத்திலே வியாபாரம் நடத்த இடம் கொடுத்து, எப்படி உரிமை மிக்க நாடாக வாழ்ந்ததோ, அதைப்போல வாழ்வதற்கு வழி இருக்கிறது, வகை இருக்கிறது என்று திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிறது.

 ***

Monday, September 14, 2015

2014-2015 CPS Annual Account Statement வெளியிடாமல் தாமதம்

                               Pic Source: Vanguard, Nigeria

Nigeria
Nigeria
Nigeria
Nigeria
Nigeria
Nigeria
2003ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த தமிழக அரசுப் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் Contributory Pension Scheme (CPS) நடைமுறையில்  உள்ளது. இத்திட்டத்தில் பல்வேறு ஓட்டைகளும், செயல்பாட்டில் எண்ணற்ற குழப்பங்களும் கூட நடைமுறையில் தான் உள்ளதாக ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் (GPF) இருக்கும் சலுகைகளில் ஒன்று கூட CPS திட்டத்தில் இல்லாதது இதன் சிறப்பாகும். சிறிய அளவிலான பண நெருக்கடிகளுக்குக் கூட வங்கிகளில்  Personal Loan போடவேண்டிய வாய்ப்புகளை இத்திட்டம்  அரசு ஊழியர்களுக்கு அளித்து வருகிறது.

CPS சந்தாதாரர்கள்  10 ஆண்டுகள்  பணி முடித்தப் பின் அவர்கள் கணக்கில் இருந்து 25% தொகையை எடுத்துக் கொள்ளலாம் என்ற புதிய உத்தரவு இருந்தாலும், அது  தமிழில் 'புலி' படமாக மாறியிருக்கும் John
Carter படத்தில் வருவதைப் போல ஏழு மலைகள் , ஏழு கடல்கள் தாண்டுவது மட்டுமல்லாமல் செவ்வாய் கிரகத்தையே தாண்டுவது போன்ற பிரமிப்பை தரக்கூடிய கடுமையான விதிமுறைகளுடன் கூடியதாக உள்ளது.

மேலும்  புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றி இறந்தவர்களுக்கு கூட இன்னும் CPS தொகையை அரசு அளிக்கவில்லை என பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நக்கீரன் இதழும் தனது ஆகஸ்ட் 22-25 வெளியீட்டில்
"13 லட்சம் பேரின் 12000 கோடி CPS பணம் அம்போ" என தனது பாணியில் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 2013-2014 ஆம் ஆண்டு  வரை மட்டுமே  http://218.248.44.123/auto_cps/  மற்றும்    http://218.248.44.123/auto_cps/public/index.php   இணையதளங்களில்  CPS Annual Account Statement வெளியிடப்பட்டுள்ளது.  இதில் 03/2013 முதல் 02/2014 வரை மட்டுமே கணக்கு விவரங்கள் உள்ளன.

2014-2015ம் வருவாய் ஆண்டு முடிந்து 5 மாதங்கள் ஆகின்றன.  03/2014 முதல் 02/2015 வரையிலான Account Statement இன்னும் வெளியிடப் படவில்லை. இன்னும் 5 மாதங்கள் கடந்தால்  03-2015 முதல்  02/2016 வரையிலான Account Statement கூட நிலுவையில் வரலாம் என CPS சந்தாதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Microsoft க்கு மாற்றாக BOSS ஆப்பரேட்டிங் சிஸ்டம் - மத்திய அரசு முடிவு



 
அதிகரித்து வரும் Cyber Crime, சீனாவின் Hacker களால் இந்திய அரசின் இணையதளங்கள் உளவு பார்க்கப்படுவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மத்திய அரசின் அங்கமான நவீன கணினி மேம்பாட்டு மையம் உருவாக்கி உள்ளது. 

புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாற்றாக Linux இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் BOSS (Bharath Operating System Solutions) என்ற அதிநவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

மேலும் கல்வி சார்ந்த பிரத்யேக தேவைகளுக்காக EduBOSS   ஆப்பரேட்டிங் சிஸ்டமும் உருவாக்கப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



Click Here to Download  BOSS & EduBOSS Operating System


இந்த BOSS ஆப்பரேட்டிங்  சிஸ்டம், கடந்த வாரம் நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது 

ராணுவம், உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இணையதளங்கள் பல்வேறு விதமான  ஊடுருவலுக்கு (Intruder) உட்படுத்தப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகளை பாஸ் முறியடித்து, வெற்றி கண்டுள்ளது.


அமெரிக்கா, ரஷ்யா, சீன உளவுத்துறைகளால் இணையத் தளங்களில் அதிகம் கண்காணிப்படும் நாடு இந்தியாஇதனால் வெளிநாட்டினர் இந்திய அரசின் ரகசியங்களை உளவு பார்ப்பதை தடுப்பதற்காக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்திய தொழில்நுட்பத்தை புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும்..


முதல்கட்டமாக அரசு இணையதளங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், தனிநபர்களின் ரகசியங்களையும் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Saturday, September 12, 2015

7243 நர்சுகளுக்கு பணி நியமன ஆணை - முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

அரசு மருத்துவமனைகளில்  தொகுப்பூதிய அடிப்படையில் 451 ஆண் நர்ஸ்கள் உட்பட  7243 நர்ஸ்கள் பணியிடங்களுக்கு  பணியாளர்களை நியமிக்க தமிழகத்தில் முதன் முறையாக அரசு தகுதித் தேர்வு கடந்த ஜூன் 28ம் தேதி நடைபெற்றது.

இத்தேர்வில் வெற்றிபெற்று மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தால்(MEDICAL SERVICES RECRUITMENT BOARD - MRB)தேர்வு செய்யப் பட்ட 7,243 நர்சுகளுக்கு, இன்று (செப்.12) தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரசுப் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ புத்தகங்கள் - செப் 14 முதல் விநியோகம்

 

 
தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவிப் பள்ளிகளுக்கான இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. செப்டமபர் 25ல்  காலாண்டுத் தேர்வுகள் முடிந்து அக்டோபர் 5 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்றே மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், செயலாளர் கார்மேகம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி மாவட்ட அளவிலான குடோன்களுக்கு 2 ஆவது பருவத்திற்கு உரிய 1 கோடியே 33 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை அனுப்பி உள்ளனர். 

பாடப்புத்தகங்களை வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதால் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளி திறக்கும்போதே  அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதால் முதல் கட்டமாக  6 முதல் 9ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் செப்-14 முதல்   வழங்கப்பட உள்ளது உள்ளது  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, September 11, 2015

Ms Office 2016 பதிப்பு Sep 22ல் வெளியீடு (Microsoft Launch Office 2016 On Sep 22)


Ms Office ன் அடுத்த பதிப்பான "Office 2016"  Sep 22 ஆம் தேதி வெளியிடப்படுவதாக Microsoft  அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆஃபிஸ் 2016 சிறப்பம்சங்கள் :
Office 2016 பதிப்பில், ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்டோர் ஆவணத்தில் திருத்தம் (co-edit documents) செய்ய முடியும். IT நிர்வாகிகள் மற்றும் வணிகத்தினர்களுக்கான சில புதிய அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும் ஒன் ட்ரைவுடன் (OneDrive) சின்க் (sync) செய்யும் வசதி என மேம்பாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை “மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் 2016” பதிப்பின் கட்டணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளுக்கு 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை நாளை முதல் அமல்




 



நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் அமலாகிறது.



இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பும், வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆவது மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறையை மாற்று முறை ஆவணங்கள் சட்டம் 1881-இன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.



அதன்படி, இந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 12) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். இதேபோன்று 4-ஆவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 26) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும்.

2, 4-ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதால், அனைத்து வங்கிகளும் மற்ற சனிக்கிழமைகளில்  முழுநேரம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



 

Thursday, September 10, 2015

தமிழகம் முழுவதும் ஆதார் பதிவை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்

 

தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்திருந்தது. ஆனால் இதுவரை  5 கோடியே 1 லட்சம் பேருக்கு (74%) ஆதார் அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன

எனவே தமிழகத்தில் உள்ள அனைவருக்கும்(100%) ஆதார் எண் வழங்குவதற்கான விவரங்களை பதிவு செய்யும் பணியை டிசம்பர் 2015க்குள் முடிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கூடுதல் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது என இயக்குனராக அதிகாரி தெரிவித்துள்ளார்.

 


Wednesday, September 9, 2015

அகவிலைப்படி 6% - மத்திய அமைச்சரவை ஒப்புதல்



 
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே உள்ள 113% அகவிலைப்படி ஜூலை 1 முதல் 119% ஆ உயர்த்தி முன்தேதியிட்டு வழங்கப்படும்.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இதனை தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் 6 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்படும் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

6% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவையில் இன்று முடிவு ( 6% DA hike for Central Govt Employees)

 
இன்று (09.09.2015) நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6% உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
6% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால்  தற்போதுள்ள 113%  இருந்து 119% ஆக  உயரும்.  இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.


இதன் மூலம், 48 லட்சம் அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பெறுவார்கள்.

Tuesday, September 8, 2015

ரூ.500, ரூ.1,000 தாள்களில் 7 புதிய மாற்றங்கள்: ரிசர்வ் வங்கி திட்டம் ( RBI Plans 7new security features in 500,1000 Rs.)



கள்ள நோட்டுப் புழக்கத்தைத் தடுக்க ரூ.500, ரூ.1,000 தாள்களில் 7 புதிய மாற்றங்கள் செய்ய  ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது

கடந்த சில மாதங்களாக இந்திய சந்தை முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் தொடர்ந்து புகார் வந்து வண்ணம் உள்ளன. மேலும் இக்கள்ள நோட்டுகள்  வங்கி .டி.எம்.களிலும்  இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே ரூ.500, ரூ.1,000 தாள்களில் 7 புதிய மாற்றங்கள் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. உதாரணமாக  மேலே படத்தில் உள்ள ரூபாய் நோட்டில் உள்ளது போல வரிசை எங்கள் ஒரே அளவில் இல்லாமல் முதல் 3 எண்-எழுத்துக்கள்(Alpha Numerals) ஒரே அளவிலும், அடுத்த 6 எங்கள் வளரும் நிலையிலும் (Rapid Growth) இருக்கும்.

மேலும் இதேபோல புதிதாக செய்யப்படவுள்ள மாற்றங்கள் அனைத்தும் சாதாரண மக்களாலேயே நல்ல ரூபாய் நோட்டுகளை அடையலாம் காணவல்ல வகையில் எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recruitment in National Investigation Agency (NIA)

 
தேசிய புலனாய்வு நிறுவனமான NIA வில் பணிவாய்ப்பு  அறிவிக்கப் பட்டுள்ளது. 
 

மேலும் விவரங்களுக்கு 
 

உலக எழுத்தறிவு தினம்

               மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் 
               மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் 
               தன்தேச மல்லால் சிறப்பில்லை - கற்றோர்க்கு 
               சென்ற இடமெல்லாம் சிறப்பு.