Saturday, September 12, 2015

அரசுப் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ புத்தகங்கள் - செப் 14 முதல் விநியோகம்

 

 
தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவிப் பள்ளிகளுக்கான இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. செப்டமபர் 25ல்  காலாண்டுத் தேர்வுகள் முடிந்து அக்டோபர் 5 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்றே மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், செயலாளர் கார்மேகம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி மாவட்ட அளவிலான குடோன்களுக்கு 2 ஆவது பருவத்திற்கு உரிய 1 கோடியே 33 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை அனுப்பி உள்ளனர். 

பாடப்புத்தகங்களை வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதால் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளி திறக்கும்போதே  அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதால் முதல் கட்டமாக  6 முதல் 9ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் செப்-14 முதல்   வழங்கப்பட உள்ளது உள்ளது  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.