“பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமே உலகத்துக்குத் தருகி்ன்றனர்.
ஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“
ஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“

Dr. சர்வபள்ளி
ராதாகிருஷ்ணன்
(05.09.1888 - 17.04.1975)
(05.09.1888 - 17.04.1975)
நமது நாட்டின்
இரண்டாவது ஜனாதிபதியாக
பதவி வகித்த
மாமேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று(செப்டம்பர் 5) இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாக
கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் 05.09.1888ல் திருத்தணியில் தெலுங்கு நியோகி பிராமணப்பிரிவு குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி, தாயார் பெயர் சீதம்மா. இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஆரம்பக் கல்வியை திருத்தணியில் பயின்றார். திருப்பதியில் உள்ள லுத்தரன் மிஷன் பள்ளியில் உயர்நிலைக்கல்வியை பயின்றார்.
வேலூர் ஊரிஸ் கல்லூரியில் B.A தத்துவம் சேர்ந்து பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு மாறுதல் பெற்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் M.A. தத்துவவியல் முடித்த பின்பு, 1909ல் சென்னை மாநிலக் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக சேர்ந்தார்.
1914ல் கணித மேதை டாக்டர் ஸ்ரீனிவாச ராமானுஜம், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு செல்வதற்கு முன் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.
1918ல் மைசூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.
1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மதிப்புமிக்க மன்னர் V ஜார்ஜ் பெயரால் வழங்கப்படும் தத்துவவியல் பேராசிரியர் பதவியை பெற்றார்.
1931ல் ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர் ஆனார்.
1939ல் மதன் மோகன் மாளவியா நிறுவிய பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக பொறுப்பேற்றார்.
சுதந்திரம் பெற்ற பிறகு 1948ல் பல்கலைக்கழக கல்விக் குழுவின்(University Education
Commission ) தலைவர் ஆனார்.
1949ல் சோவியத் யூனியனுக்கான தூதுவராக நியமிக்கப் பட்டார்.
1952ல் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்
.
1954ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே ஆண்டில் அமெரிக்காவில் இவரது "The Philosophy of Dr. Sarvepalli Radhakrishnan" புத்தகம் வெளியிடப் பட்டது.
1962ல் இந்தியாவின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவி வகிக்க அ வருக்கு அழைப்பு விடப்பட்டும் அவர் அதை விரும்பவில்லை.
அவரது 79வது வயதில் 1967ல் அவர் சென்னை திரும்பினார். தனது இறுதி நாள்வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது "Girija" இல்லத்தில் மகிழ்வோடு இருந்தார்.
1975 ஏப்ரல் 17ம் நாள் அவர் இம்மண்ணுலகை விட்டு மறந்தார்.
சிறந்த
ஆசிரியர்
அவர் ஒரு ஆசிரியராக
இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர்
பெற்றவர். நல்ல
கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர்,
அவரின் பிறந்தநாளை
கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு
கூறினார், "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில்
கொண்டாடுவதைவிட அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால்,
நான் பெருமையாக
உணர்வேன்" என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 1962 ஆம் ஆண்டு முதல்
இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பணியை போற்றியவர்
தனது வாழ்வில் ஆசிரியர்
பணியை பெருமையாய்
கருதியவர் ராதாகிருஷ்ணன்.
ஆசிரியர் தொழிலுக்கு
மரியாதை கொடுத்தவர்.
பெருமையை சேர்த்தவர்.
ஒரு நல்ல
ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும்
என்பதற்கு அவரே
நேரடி செயல்
விளக்கம். பல
ஆசிரியர்களுக்கு முன்னுதாரணம்.
ஆசிரியர்கள், சமூகத்தின் அடிப்படை:
ஒரு சமூகம் அதி
உன்னத நிலை
அடைந்து இருந்தால்
நிச்சயமாக அதன்
பின்னால் அற்புதமான
ஆசிரியர் சமூகம்
இருப்பதாக அர்த்தம்.
ஒரு சமூகம்
தாழ்ந்து போனால்
ஆசிரியர் சமூகம்
தனக்கான பணியை
சரிவர செய்திடவில்லை
என அர்த்தம்.
வேறு எந்த
துறையை விடவும்
அதிக பொறுப்புகளும்,
அதிக முக்கியத்துவமும்
நிறைந்தது அவர்கள்
பயணம்.
ஆசிரியர்கள், சமூக சிற்பிகள்:
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தினையும், தன்னம்பிக்கை, நன்னெறி,ஒழுக்கம், அறிவுத்தேடல் ஆகியவற்றை ஊட்ட வேண்டும். ஒரு குழந்தை விரும்பா விட்டாலும் அதன் தாய் எப்படி உணவை வாயில் அடைத்து ஊட்டுகின்றாரோ அதை போல எப்படிப் பட்ட மாணவர்களையும் கைவிடாது ஆசிரியர்கள் இதை செய்யவேண்டும். இதை சரியாக செய்யும்போதுதான்,
அங்கே ஆசிரியர்
வேலை அதன்
முழு நிறைவை அடைந்ததாக அர்த்தம்.
கல்போல, களிமண் போல பக்குவம் இல்லாமல் தன்னிடம் வரும் மாணவர்களை , சிலைகளாகவும், சிற்பங்களாகவும் செதுக்கிடும் ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர்தின நல் வாழ்த்துக்கள்!