
Whatsapp, Apple imessage உள்ளிட்டவற்றின் மெசேஜ்களை 3 மாதங்கள் வரை அழிக்கக்கூடாது, இந்த கட்டுப்பாட்டை மீறினால் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
Whatsapp போன்ற சமூக ஊடகங்களில் வருகின்ற தகவல்கள் அனுப்பப்படும் இடத்திலிருந்து செர்வர்களுக்கு சென்று Encrypt செய்யப்பட்டு குறியீட்டுச் சொற் களாக மாற்றப்பட்டு வருவதே
இதற்கு முக்கிய காரணம். உதாரணமாக வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றில் நாம்
அனுப்பும் செய்திகள் தானாவே குறியீட்டுச் சொற்களாக(Encryption) மாற்றப்பட்டு
அனுப்பப்படுகின்றன. அதனை பெறுபவர்களின் ஸ்மார்ட் போனில் மட்டுமே நாம்
அனுப்பிய தகவலை படிக்க முடியும்.
இப்போது தேசிய குறியீட்டுச் சொற்கள் வரைவு சட்டத்தை மத்திய அரசு
வகுத்துள்ளது. இது அமல் படுத்தப்பட்டால், அனைவரும் தங்கள் வாட்ஸ் ஆப், ஹேங்
அவுட்ஸ், ஐமெசேஜ் உள்ளிட்ட வற்றை 3 மாதங்கள் வரை கண்டிப்பாக அழிக்காமல்
வைத்திருக்க வேண்டும். (The
Draft National Encryption Policy wants users to store all encrypted
communication for at least 90 days and make it available to security
agencies, if required, in text form.) அப்படி இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய
குற்றமாகும். சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிருக்கும்
இந்த புதிய சட்டத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு இது தொடர்பாக
கருத்துத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அழைப்பு
விடுத்துள்ளது.