Tuesday, September 1, 2015

நாளை பாரத் பந்த்! நாடு முழுவதும் ஆட்டோ, டாக்சி ஓடாது. வங்கிகள் முடங்கும்


தொழிலாளர் சட்டம், சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் போன்ற சில சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும்  என  எதிர்ப்பு தெரிவித்து   11 தொழிற்சங்கங்கள் நாளை (02.09.2015) பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. முன்னதாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் பந்த்துக்கு தங்கள் முழு ஆதரவு இருப்பதாக சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எம்எஸ், ஐஎன்டியுசி உள்ளிட்ட தமிழகத்தின் 12 ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்த நகரத்திலும் நாளை ஆட்டோக்கள் ஓடாது. அதேபோல, இந்த வேலைநிறுத்தத்தில், தமிழகத்தில் ஷேர் ஆட்டோ, டாக்சி, கால்டாக்சி உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், திருப்பூர், ஈரோடு போன்ற தமிழகத்தின் பல நகரங்களிலும் நாளை வேலை நிறுத்த பாதிப்பு எதிரொலிக்கும் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனால் காசோலை மற்றும் வங்கி பரிமாற்றங்கள் பாதிக்கப்படும்.  குறிப்பிடத்தக்கது.