Monday, September 14, 2015

Microsoft க்கு மாற்றாக BOSS ஆப்பரேட்டிங் சிஸ்டம் - மத்திய அரசு முடிவு



 
அதிகரித்து வரும் Cyber Crime, சீனாவின் Hacker களால் இந்திய அரசின் இணையதளங்கள் உளவு பார்க்கப்படுவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மத்திய அரசின் அங்கமான நவீன கணினி மேம்பாட்டு மையம் உருவாக்கி உள்ளது. 

புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாற்றாக Linux இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் BOSS (Bharath Operating System Solutions) என்ற அதிநவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

மேலும் கல்வி சார்ந்த பிரத்யேக தேவைகளுக்காக EduBOSS   ஆப்பரேட்டிங் சிஸ்டமும் உருவாக்கப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



Click Here to Download  BOSS & EduBOSS Operating System


இந்த BOSS ஆப்பரேட்டிங்  சிஸ்டம், கடந்த வாரம் நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது 

ராணுவம், உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இணையதளங்கள் பல்வேறு விதமான  ஊடுருவலுக்கு (Intruder) உட்படுத்தப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகளை பாஸ் முறியடித்து, வெற்றி கண்டுள்ளது.


அமெரிக்கா, ரஷ்யா, சீன உளவுத்துறைகளால் இணையத் தளங்களில் அதிகம் கண்காணிப்படும் நாடு இந்தியாஇதனால் வெளிநாட்டினர் இந்திய அரசின் ரகசியங்களை உளவு பார்ப்பதை தடுப்பதற்காக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்திய தொழில்நுட்பத்தை புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும்..


முதல்கட்டமாக அரசு இணையதளங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், தனிநபர்களின் ரகசியங்களையும் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது.