Monday, September 21, 2015

அக்டோபர் 8ல் பள்ளிகளை மூடி போராட்டம் - ஜாக்டோ , பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு

பங்களிப்பு பென்ஷன் திட்டம்(CPS) ரத்து உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  அக்டோபர் 8ம் தேதி   தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும் என, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.

சிவகங்கையில், அவர் கூறியதாவது: 

முதல்வர் ஜெ., சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஆட்சிக்கு வந்தவுடன் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன் என்றார். இன்று வரை ரத்தாகவில்லை. எனவே பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அக்டோபர் 8ம் தேதி தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆசிரியர்கள், பள்ளிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என அவர் கூறினார்.