Wednesday, September 23, 2015

வாட்ஸ் அப் மெசேஜ்களை அழிக்கக் கட்டுப்பாடு விதிக்கும் வரைவுக் கொள்கை உடனடியாக வாபஸ் - மத்திய அரசு



Govt U turn on Encryption Policy
வாட்ஸ் அப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் தகவல் பரிமாற்றங்களை 90 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மீறினால், கைதாகவும் வாய்ப்பு உள்ளது' என்ற வரைவு செயல் திட்டத்திற்கு, பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மத்திய அரசு அதை வாபஸ் பெற்றுள்ளது.அழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கும் வரைவு கொள்கையை மத்திய அரசு வாபஸ் பெற்றது.


பொதுமக்கள் மட்டுமன்றி வணிக நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையதள நிறுவனங்களும் இந்த கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வரைவு கொள்கையில் கூறப்பட்டிருந்தது.



இந்தத் தகவலை டெல்லியில் நேற்று  செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தகவல் பரிமாற்றங்களை நாட்கள் அழிக்கக்கூடாது என்று வெளியிடப்பட்ட குறியீட்டுக் கொள்கை வெறும் மாதிரி அறிக்கை மட்டுமே. இது அரசின் கருத்து அல்ல. வாட்ஸ் ஆப்90 , பேஸ்புக் மற்றும் இதர சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பொதுமக்களை கட்டுப்படுத்துவது குறியீட்டுக் கொள்கையின் நோக்கம் அல்ல. சில விஷயங்கள் தவறான புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. எனவே வரைவு கொள்கை வாபஸ் பெறப்படுகிறது. 

 


மத்திய அரசை பொறுத்தவரை சுதந்திரமான சமூக இணையதள வசதியை ஆதரிக்கிறோம். எனினும் பாதுகாப்பு விவகாரங்களுக்காக தகவல் பரிமாற்றத்தை முறைப்படுத்த குறியீட்டுக் கொள்கை வரையறுக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதன்படி திருத்தப்பட்ட வரைவு கொள்கை தயாரிக்கப்பட்டு மக்களின் கருத்துகள் கோரப்படும்" என்றார் அவர்.
 
Social Media Reflects





" i guess kabutar yug will be back soon #ModiDontReadMyWhatsapp" MAG poked fun at the Encryption policy"

#EncryptionPolicy is like giving you a car, a bungalow, a beautiful wife and you are not allowed to enjoy anything!"

"This Govt wants to control everything, how you using net, what u doing in Whatsapp and next they gonna ask who u sleeping with" - Amit kumar

now will the govt. ask us to tell them what we had for breakfast? policy


This is very "Durbhagyapurna". How long will you keep on taking U-turns. Whose resignation should we ask for?



the IT Minister who referred to it as an "encryption policy" would appear to disagree with you :)