Showing posts with label Holidays. Show all posts
Showing posts with label Holidays. Show all posts

Wednesday, January 10, 2018

12.01.2018 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சிறப்பு விடுமுறை - தமிழக அரசு


பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில்  உள்ள பள்ளிகள் மற்றும்  உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகள். பல்கலைக்கழகங்கள் , பல்கலைகழகங்களுக்கு கீழ் இயங்கும் உறுப்புக்கல்லூரிகள் என அனைத்து  கல்வி நிறுவனங்களுக்கும் சிறப்பு நிகழ்வாக வருகிற 12.01.18 வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


Friday, September 18, 2015

அக்டோபர் மாதம் 21 முதல் 25 வரை 5 நாள் தொடர் 'லீவு


அக்டோபர் மாதம் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை வருவதால், பொதுமக்கள் இப்போதே தங்கள் வேலைகளை 'பிளான்' பண்ணிக்கொள்வது நல்லது. 

அக்.21ம் தேதி (புதன்) ஆயுத பூஜை, 22ம் தேதி (வியாழன்) விஜயதசமி, 23ம் தேதி (வௌ்ளி) மொகரம், 24ம் தேதி (சனி), 25ம் தேதி (ஞாயிறு) ஆகியவையே அந்த விடுமுறை நாட்கள். ஒரே வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் பல பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஐந்து நாட்களுமே அரசு அலுவலகங்கள் இயங்காது என்பதால், சொந்த வேலையாக அங்கு செல்ல வேண்டியவர்கள் செல்லத் தேவையில்லை.

சுற்றுலா: பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை என்பதால், குழந்தைகளும் விடுமுறையில் இருப்பர். எனவே, குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவோரும் இப்போதே திட்டமிட்டால், பயணம் மகிழ்ச்சியானதாக அமையும்.

வங்கிகள்: வங்கிகளுக்கும் இதே கதை தான். நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை என்பதால், அவர்களுக்கும் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்றால் வர்த்தகர்களும் பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, 24ம் தேதி சனிக்கிழமை வங்கிகள் இயங்க அறிவுறுத்தப்படலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது. இதுகுறித்து வங்கிகள் இனிமேல் தான் அறிவிக்கும்.

தொடர் விடுமுறை என்றால் ஏடிஎம்-களிலும் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படும். எனவே, அதற்கேற்றாற்போல் பொதுமக்கள் திட்டமிடுவது நல்லது.