Wednesday, May 20, 2015

14 சதவீதம் ஆகிறது: சேவை வரி உயர்வு, ஜூன் 1–ந் தேதி அமல் மத்திய அரசு அறிவிப்பு


 

தற்போது, கல்வி வரியையும் சேர்த்து, சேவை வரி 12.36 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.

இந்த 14 சதவீத சேவை வரி, ஜூன் 1–ந்தேதி அமலுக்கு வருவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதன்மூலம், உணவகங்களில் சாப்பிடுதல், காப்பீடு, டெலிபோன் பில், விளம்பரம் செய்தல், விமான பயணம், சிலவகை கட்டுமானங்கள், கிரெடிட் கார்டு, நிகழ்ச்சி ஏற்பாடு, சுற்றுலா ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்.