Wednesday, May 13, 2015

+2 மாணவர்களுக்கு நாளை முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

Provisional Mark Sheet விநியோகம் 
பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு  நாளை(14.05.2015) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Mark Sheet) மற்றும் மாற்றுச்சான்றிதழ் (TC)  வழங்கப்படுகிறது.   தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

இம்மாதம் 7ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. தேர்ச்சி பெற்றவர் களுக்கு, தற்காலிக சான்றிதழ் வழங்கும் திட்டத்தை, பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. பள்ளிகளில், நாளை (14ம் தேதி) முதல்  பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் தலைமை ஆசிரியரின் கையொப்பத்துடன்  வழங்கப்பட உள்ளது. இது  90 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதை பயன்படுத்தி  மாணவ, மாணவியர் உயர்கல்விக்கு  விண்ணப்பிக்கலாம். நாளை முதல் 18ம் தேதி வரை மட்டுமே பள்ளிகளில் இச்சான்றிதழ் வழங்கப்படும்; அதன்பின், dge.tn.nic.in இணையதள முகவரியில் சென்று மாணவ, மாணவியரே இச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.