Monday, May 11, 2015

பள்ளிகள் தயார்நிலை - மே 14 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வினியோகம்

 தற்காலிக மதிப்பெண் பட்டியல்
 (Provisional Marksheet)


மார்ச் 2015ல் நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு  07.05.2015 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டது.  இதில் அரசு பள்ளிகள் 84.26 சதவீதம், தனியார் மெட்ரிக் பள்ளிகள்  97.67,  அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் 93.42 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 


இந்நிலையில்  மாணவர்கள்  இன்ஜினியரிங், மருத்துவப் படிப்பு, கலைப்படிப்புகள்  உள்ளிட்ட உயர்கல்விகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக 14.05.2015 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வினியோகிக்கப் படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் சுற்றறிக்கை வழிகாட்டுதல்களின்படி, தற்போது அனைத்துப் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் பட்டியல் (Provisional Mark Sheet)  பதிவிறக்கம் செய்து சரிபார்க்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது.

எனவே 14.05.2015 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு விரைந்து அளிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.