Saturday, May 16, 2015

தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சி திட்டம்: இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகம்

Anna University
Introducing 
Direct Field Experience  for Engineering Students 

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்றவாறு  பாடத் திட்டங்களை நவீனப்படுத்த, AICTE (All India Council for Technical Education) உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில்  வரும் கல்வி ஆண்டில், தொழிற்சாலைகளுடன் இணைந்த பயிற்சி திட்டங்கள் அறிமுகமா கின்றன.

முக்கிய அம்சங்கள்:


முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கூட்டமைப்புகளுடன் அண்ணா பல்கலைக்கழகம்  ஒப்பந்தம் மேற்கொள்ளும்.
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தொழிற்சாலையில் நேரடி பயிற்சி தரப்படும்.

தொழிற்சாலைகளுடன் இணைந்து மாணவர்களுக்கு புதிய செயல் திட்டம் வழங்கப்பட்டு தொழிற்சாலைகளை மாணவர்கள் நேரடியாக பார்வையிடலாம். படித்து முடித்த பின், அவர் பயிற்சி எடுத்த தொழிற்சாலையிலேயே வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கேற்ப தொழிற்சாலையின் தேவைக்கேற்ப புதிய படிப்பு மற்றும் பாடங்கள் கொண்டு வரப்படும்.

புதிய தொழில்நுட்ப பாடங்கள் உடனே தேவைப்பட்டால் தொழிற்சாலை மற்றும் பல்கலைக்கழக வல்லுனர் குழு ஆலோசித்து, தேவையான மாற்றங்களை பாடத்திட்டத்தில் உடனே கொண்டு வரும்.

தொழிற்சாலை இன்ஜினியர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலை மாணவர்களை இணைத்து சிறப்பு பயிலரங்கம் நடத்தப்படும்.

மே 15 முதல் இத்திட்டத்தின் கீழ் பல்கலைக் கழகங்களுடன் ஒப்பந்தம் செய்ய விரும்பும் தொழிற்சாலைகளுக்கான பதிவுகள் துவங்கியுள்ளன. வரும் ஜூன் 8ம் தேதி வரை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, பின், இரு தரப்பிலும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான தொழில்நுட்ப அறிவு பலமடங்கு மேம்படவும், வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கவும் வழி பிறக்கும்.