Tuesday, May 26, 2015

கர்ப்பிணிகளில் பாராசிட்டமால் (Paracetamol) மாத்திரைகள் ஏற்படுத்தும் தாக்கம்


 

(Paracetamol-acetaminophen)

கருவுற்ற காலத்தில் பெண்கள்  அதிக அளவிலான பாராசிட்டமால் (Paracetamol-acetaminophen) மாத்திரைகளை உட்கொண்டால், அது அவர்களது பிறக்கப்போகும் மகனின் இனப்பெருக்க சக்தியை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சுரம்(Fever), தலைவலி( headache), உடல்வலி(muscle aches), முதுகு வலி(backache), பல்வலி(toothaches), சளி(colds)   என அனைத்துக்கும் சர்வரோக நிவாரணியாக பலராலும் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மருந்தானது எலிகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயும் விஞ்ஞானிகள்  இதனை தெரிவித்துள்ளனர்.

எலிகளில் மனிதக் கருவின் திசுக்களை செலுத்தி, ஒரு கர்ப்பம் போன்று பாவனை செய்து பரிசோதித்தபோது, பாராசிட்டமால் மருந்தை  7 நாட்கள் தொடர்ந்து   கொடுக்கப்பட்ட எலிகளின் கருவில் Testosterone அளவு மிகவும் குறைவாக இருந்தது கண்டறியப் பட்டது.

ஆண்களுக்கான இனப்பெருக்க உறுப்புக்களை உருவாக்குவதில் இந்த Testosterone ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது.  எனவே கர்ப்பிணிகள் பாராசிட்டமால் வலி நிவாரணியை மிகவும் அவசியமாக தேவைப்பட்டால் மட்டும் குறைந்த காலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.