Showing posts with label TALK OF THE TOWN. Show all posts
Showing posts with label TALK OF THE TOWN. Show all posts

Sunday, May 31, 2015

Maggi நூடுல்ஸ் - தீங்கு விளைவிக்கும் பொருட்களால் நெஸ்லே நிறுவனம் மீது வழக்கு

 
மேகி நூடுல்ஸின் பாதுகாப்பு தரத்தை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனங்கள், மற்றும் அதன் மேலாளர்கள் 3 பேர் மீது, பாரபங்கி  நீதிமன்றத்தில்  உத்தரப்பிரதேச உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் நேற்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’ ஐ  நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். 

இந்த நூடுல்சின் தரம் குறித்து சமீபத்தில் பெரும் சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநில உணவு பாதுகாப்பு  மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள Easyday கடையில் இருந்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளை எடுத்து வந்து ஆய்வு  செய்தது.

அப்போது அதில் மோனோ சோடியம் குளூட்டாமேட் (Mono sodium Glutamate- MSG)
என்ற அமினோ அமிலம் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், 17 மடங்கு அதிகமாக இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உடல்நலத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடியது.  இதைத்தொடர்ந்து  மாநில சந்தைகளில் இருந்து  நூடுல்சை திரும்ப பெற நெஸ்லே இந்தியாவுக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிடப்பட்டது. மேலும்,  பாரபங்கி கூடுதல்  தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் நெஸ்லே நிறுவனம் மீது நேற்று வழக்கு  தொடரப்பட்டது.

இது குறித்து பாரபங்கி உணவு பாதுகாப்பு அதிகாரி வி.கே.பாண்டே கூறுகையில், ‘ உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவன ஆணையர்  பி.பி.சிங்,  நெஸ்லே நிறுவனம் மீது வழக்கு தொடர அனுமதி அளித்தார். அதன் அடிப்படையில்  ஹரோலியில் உள்ள நகல் கலன் தொழில்நுட்ப  பூங்காவில் உள்ள நெஸ்லே நிறுவனம், டெல்லியில் உள்ள நெஸ்லே நிறுவனம், பாரபங்கியில் உள்ள Easyday  நிறுவனம், டெல்லியில் உள்ள Easyday,  நிறுவன மேலாளர்கள் மோகன்குப்தா, சபாப்ஆலம், பாண்டே ஆகியோர் மீது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது ’ என்றார்.

பாரபங்கியைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்து மக்களை தவறாக திசை திருப்பிய நடிகர் அமிதாப், நடிகைகள்  மாதுரிதீட்சித், ப்ரீதி ஜிந்தாஆகியோர் மீது தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனியாக நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார். இவர்கள்  மீது குற்றவியல் சட்டம் 420, 272, 273, மற்றும் 109 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Saturday, May 30, 2015

கள்ளநோட்டு என அறியாமல் வைத்திருந்தால் குற்றமில்லை



'கள்ளநோட்டு என அறியாமல் கரன்சி நோட்டுகளை வைத்திருப்பது குற்றமல்ல' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஒருவர், வங்கியில் செலுத்திய கரன்சி நோட்டுகள், சிலவற்றில் கள்ள நோட்டுகள் இருந்தன. இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நீதிமன்றம் அவருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட நபர், மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி அனுஜா பிரபுதேசாய் முன்னிலையில் மே 28 அன்று விசாரணைக்கு வந்தது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  " கள்ளநோட்டு வைத்திருந்த நபருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சரியல்ல. தன் கையில் இருக்கும் நோட்டுகளில், சில கள்ளநோட்டுகளும் உள்ளன என்பதை அவர் அறியாத நிலையில், அவரை குற்றவாளியாக கருத முடியாது. வங்கியில் அவர் செலுத்திய நோட்டுகள் கள்ள நோட்டுகள் என வங்கியில் தெரிவித்த பிறகும் அவர் தப்பி ஓடவில்லை என்பதால், அந்த கள்ளநோட்டை அவர் வேண்டுமென்றே வைத்திருக்கவில்லை என்பது புலனாகிறது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்கிறேன்" என  உத்தரவிட்டார்.


இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கள்ளநோட்டு புழக்கம் அதிகமாக உள்ள தற்போதைய நிலையில், கள்ளநோட்டு என தெரியாமல், பிறர் கொடுக்கும் நோட்டுகளை வைத்திருந்ததால் பலர் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Friday, May 22, 2015

நாளை (23.05.2015) முதல்வர் பதவியேற்பு விழா - 28 அமைச்சர்கள் பட்டியல்


அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்  மே 23 (சனிக்கிழமை) அன்று  முதல்வராக பதவியேற்கிறார். 5-வது முறையாக தமிழக முதல்வர் பதவியேற்கும் அவருடன் பட்டியலில் உள்ள  28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.



வ.
எண்
பெயர்
துறை
1
செல்வி ஜெ. ஜெயலலிதா
முதல்வர் | காவல், உள்துறை
2
ஓ.பன்னீர்செல்வம்
நிதி, பொதுப்பணித் து
3
நத்தம் ஆர்.விஸ்வநாதன்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
4
ஆர்.வைத்திலிங்கம்
வேளாண், நகர்ப்புற மேம்பாடு, ஊரக வீட்டுவசதி
5
எடப்பாடி கே.பழனிச்சாமி
நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகம், வனம்
6
ப.மோகன்
தொழிலாளர் நலன், ஊரகத் தொழில்
7
ப.வளர்மதி
சமூல நலத்துறை, சத்துணவு
8
பி.பழனியப்பன்
உயர் கல்வித்துறை
9
செல்லூர் கே.ராஜூ
கூட்டுறவுத்துறை
10
ஆர்.காம
உணவு, இந்து சமய அறநிலைத்துறை
11
பி.தங்கமணி
தொழிற்துறை
12
வி.செந்தில் பாலாஜி
போக்குவரத்துத்துறை
13
எம்.சி.சம்பத்
வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை
14
எஸ்.பி.வேலுமணி
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டத்துறை
15
டி.கே.எம். சின்னை
கால்நடை பராமரிப்புத் துறை
16
எஸ்.கோகுல இந்திரா
 கைத்தறி மற்றும் துணிநூல்
17
எஸ்.சுந்தரராஜ்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
18
எஸ்.பி.சண்முகநாதன்
சுற்றுலாத்துறை
19
என்.சுப்பிரமணியன்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
20
கே.எ.ஜெயபால்
மீன்வளத்துறை
21
முக்கூர் என்.சுப்பிரமணியன்
தகவல் தொழில்நுட்பம்
22
ஆர்.பி.உதயகுமார்
வருவாய்த்துறை
23
கே.டி.ராஜேந்திர பாலாஜி
செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கம்
24
பி.வி.ரமணா
பால்வளத்துறை
25
கே.சி.வீரமணி
பள்ளிக் கல்வித்துறை
26
தோப்பு என்.டி.வெங்கடாசலம்
சுற்றுச்சூழல்துறை
27
டி.பி.பூனாச்சி
காதி, கிராமத் தொழில்
28
எஸ்.அப்துல் ரஹிம்
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்
29
சி.விஜயபாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத்துறை

Wednesday, May 20, 2015

14 சதவீதம் ஆகிறது: சேவை வரி உயர்வு, ஜூன் 1–ந் தேதி அமல் மத்திய அரசு அறிவிப்பு


 

தற்போது, கல்வி வரியையும் சேர்த்து, சேவை வரி 12.36 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.

இந்த 14 சதவீத சேவை வரி, ஜூன் 1–ந்தேதி அமலுக்கு வருவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதன்மூலம், உணவகங்களில் சாப்பிடுதல், காப்பீடு, டெலிபோன் பில், விளம்பரம் செய்தல், விமான பயணம், சிலவகை கட்டுமானங்கள், கிரெடிட் கார்டு, நிகழ்ச்சி ஏற்பாடு, சுற்றுலா ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்.