Monday, November 2, 2015

RECRUITMENT OF JUNIOR DRAUGHTING OFFICER IN HIGHWAYS DEPARTMENT - 188 VACANTS : Last Date: 18.11.2015


Diploma in Civil (DCE)  படிச்ச உங்க பசங்க, Friendsகளுக்கு தகவல் சொல்லுங்க.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை  இளநிலை வரைதொழில் அலுவலர் (JUNIOR DRAUGHTING OFFICER) - 188 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 
 மேலும் விவரங்களுக்கு 

Thursday, October 29, 2015

தமிழக அரசின் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிகளில் சேர Computer On Office Automation Examination Dec 2015

 Special Link: CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிகளில் சேர(Typist),  கணினி இயக்கவும் தகுதி பெற வேண்டும். இதற்காக TNPSC  நடத்தும்  சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிக்கான தேர்வில், உரிய விதிப்படி தேர்ச்சி பெற்றாலும், கணினி தகுதி சான்றிதழ் படிப்பிலும் (COA) தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் (Directorate of Technical Education) நடத்தும்  கணினி தகுதித்தேர்வுக்கு(Computer On Office Automation Examination Dec 2015) நவம்பர் 16ம் தேதிக்குள் http://www.tndte.com/ota.html ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, நவம்பர் 23ம் தேதிக்குள், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


Announcement : COA Dec-2015.PDF
Syllabus:  OFFICE_AUTOMATION_SYLLABUS-23.09.15..PDF

Wednesday, October 28, 2015

மார்ச் 2016: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாட்கள் கடினமானவையாக இருக்கும்

 

மார்ச் 2016ல்  நடைபெற  உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு களுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியை  தேர்வுத் துறை துவங்கியுள்ளது.  வினாத்தாள்களை சற்று கடினமாக தயாரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு  பாடங்களின் உள் அம்சங்களில் இருந்து புதிய கேள்விகள் கேட்குமாறு  உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே  மார்ச் 2016ல்  நடைபெற  உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு வினாத்தாட்கள்  கடினமானவையாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ( Provisional Marksheet SSLC Result - September 2015)

Monday, October 26, 2015

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இ-சேவை மையத்தில் வசதி

Special Link: CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15
 

இ-சேவை மையத்தில்  TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டணம் எவ்வளவு?

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.


மேலும், புதிதாக, டி.என்.பி.எஸ்.சி.,க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, நிரந்தரப் பதிவு செய்ய, 50 ரூபாய், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, 30 ரூபாய், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய, ஐந்து ரூபாய், மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற, 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்புகை சீட்டு

நிரந்தர பதிவு கட்டணமான 50 ரூபாய் மற்றும் தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களில் செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. பணம் செலுத்தியதற்கான, ஒப்புகை சீட்டு, உடனடியாக பெற்று கொள்ளலாம் என, சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, October 24, 2015

பாஸ்போர்ட் வேணா வாங்கிக்குங்க. ஆனா சொல்லிட்டு தான் வெளிநாடு போகணும்: பள்ளிக் கல்வி இயக்குனர்



அரசு பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று, விடுப்பு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, வெளிநாடு செல்ல முடியும். 

இந்த அனுமதியை பெற, தங்கள் விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் 
"அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும்  என தமிழக அரசு (Go.Ms.No. 71 Dt. 02.07.2015)   தெரிவித்துள்ளதால்"
  
'பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும், தடையில்லா சான்றுக்காக காத்திருக்க வேண்டாம்' எனவும் .  'பாஸ்போர்ட் பெற விரும்புவோர், விண்ணப்ப படிவ நகலை, பணி நியமன அலுவலருக்கு அனுப்பி விட்டு, பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம்' எனவும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் தன்னுடைய செயல்முறைகளில் தெரிவித்துள்ளார்.


Thursday, October 22, 2015

CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15

விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
  
தேவையற்ற குப்பைகளை 'முடிந்தவரை' உங்கள் பார்வைக்கு வைப்பதில்லை என்ற உறுதியுடன், நீங்கள் பயனடையும் வகையில் தகவல்கள் அளிக்க வேண்டும் என்ற உணர்வுடன், விஜயதசமி நல்வாழ்த்துக்களை அனைத்து   நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நவம்பர் 1 முதல் புதிய சிந்தனை மாற்றங்களுடன் deccanbluediamonds.

Tuesday, October 20, 2015

'ஜாக்டோ' போராட்டம் : விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் 'கட்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர்.


பெரும்பாலானோர் விடுப்பு கடிதமும் அளிக்காமல், பள்ளிக்கும் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதில், விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு மட்டும், ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

Monday, October 19, 2015

NHIS ANNEXTURE VII

(For Friends)
                 1. Download the file here  fin_e_243_2012.pdf
                 2. Print the Pages 35 & 36
Link 
                  New Health Insurance - All G.Os  

23.10.2015 வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் : மொஹரம் விடுமுறை 24.10.2015 க்கான உத்தரவு


பொது விடுமுறை - மொகரம் பண்டிகை 23.10.2015ம் தேதிக்கு பதிலாக 24.10.2015 அன்று கடைபிடிப்பதையடுத்து தமிழக அரசு பொது விடுமுறை அறிவிப்பு

 Click  Below to Download G.O.

 FRIDAY WORKING DAY GO.pdf

 

Saturday, October 17, 2015

epayroll'ல Bill போடுறீங்களா? DA வை நீங்க மாத்த முடியாது. NIC Server ல தான் மாத்த முடியும். Wait பண்ணுங்க.


epayroll மூலமாக அக்டோபர் மாத ஊதியப் பட்டியலை தயாரிக்கும் வேலையில் இருப்பவர்கள், தங்களுடைய  login சென்று DA வை 113% லிருந்து 119% ஆக மாற்ற முடியாது.  NICன்  Web Payroll System server ல் மாற்றினால் தான் நம்மால் புதிய DA வில் ஊதியப் பட்டியலை தயாரிக்க முடியும்.

திங்கள்கிழமை(19.10.2015) அன்று NIC Server ல் புதிய DA(119%) மாற்றப்படும். எனவே ஊதியப் பட்டியல்களை தயாரிக்கும் வேலையில் இருப்பவர்கள் திங்கள்கிழமை மதியம் முயற்சிக்கவும்.

Link:   

     

சாலை விபத்தில் தமிழகத்தில் 8 மாதங்களில் 10 ஆயிரம் பேர் மரணம்


போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் விளக்கம் :

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது.

அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து சாலை விரிவாக்கம் செய்வது, புதிய சாலைகளை அமைப்பது, பாலங்கள் கட்டுவது, இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்வதற்கான நடவடிக்கைகள்  என  சாலை விபத்துக்களை குறைக்க தமிழக அரசு சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

என்ன காரணம்?


சாலை விதி மீறல்கள், ஓட்டுநர்களின் கவனக்குறைவு, செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டுவது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்வது போன்ற காரணங்களால் சாலை விபத்துகள் நடக்கின்றன. 


எப்படி குறைப்பது?
விபத்துகளை குறைக்கும் வகையில் அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின் றன. அரசின் நடவடிக்கைகளின் பலனாக 2014-ல் விபத்துகளால் பலியானோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது மேலும் குறையும் என எதிர்பார்க்கிறோம். 

கடந்த 1-ம் தேதிக்கு பிறகு புதிதாக உற்பத்தி செய்யும் லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டாயம் வேகக்கட்டுபாட்டு கருவியை பொருத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை பெரும்பாலான மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டன.


Link :  கனவுகளை நொடிப்பொழுதில் தகர்க்கும் சாலை விபத்துகளை தவிப்பது எப்படி?


தமிழகத்தில் இந்த ஆண்டு 

நம்பிக்கை
 
தமிழகத்திலும் இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. முறையாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கும் வகையில் கணினி மூலம் கண்காணிக்கும் வசதி 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விரைவில் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களால் வரும் நாட்களில் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகள் குறையும் என நம்பு கிறோம். 

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 58% இடங்கள் மட்டுமே நிரம்பின: 1.20 லட்சம் இடங்கள் காலி


 
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E, B.Tech, B.Arc படிப்புகளில் 58% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 1.20 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. 
 
  Thanks To:  The Hindu.

இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த கல்வியாளர் பேராசிரியர் மூர்த்தி செல்வகுமரன் கூறும்போது, ‘‘பொறியியல் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. எனவே, அதிக செலவு செய்து பொறியியல் படிக்க வேண்டுமா என்று மாணவர்கள், பெற்றோர் கருதுவதால் கலை, அறிவியல் படிப்பை நாடுகின்றனர்". பொறியியல் படிப்பில் தேசிய அளவில்கூட 16.90 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அறிவித்துள்ளது. பொறியியல் இடங்களை 6 லட்சம் அளவுக்கு குறைக்கவும் AICTE திட்டமிட்டுள்ளது’’ என்றார்.  

'கால் டிராப்'புக்கு ரூ.1 நஷ்டஈடு (Compensate for call drops from Jan 1, 2016: TRAI to telcos)

 
புதுடில்லி,:'மொபைல் போனில் பேசுகையில், 'தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பாதியில் இணைப்பு துண்டிக்கப்பட்டால், வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக, ஒரு ரூபாய் தர வேண்டும்' என, 'டிராய்' எனப்படும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.

மொபைல் போனில் பேசுகையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இணைப்பு பாதியில் துண்டிக்கப்படுவது, 'கால் டிராப்' எனப்படும். இந்தியாவில், அடிக்கடி கால் டிராப் ஏற்படுவதாக, டிராய்க்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதற்கு தீர்வாக, கால் டிராப் ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு, நஷ்டஈடாக ஒரு ரூபாய் தர வேண்டுமென, டிராய் அறிவித்துள்ளது.வரும், 

ஜனவரி 1 முதல், இந்த உத்தரவு அமலாகிறது.கால் டிராப் நஷ்டஈடு, ஒருநாளைக்கு அதிக பட்சம், மூன்று முறை மட்டுமே வழங்கப்படும் என, டிராய் கூறியுள்ளது.

பாஸ்வேர்டு முறைக்கு குட்பை சொல்கிறது யாகூ

 

சர்வதேச அளவில் இணையதள சேவைகளில் முன்னணியில் உள்ள யாகூ நிறுவனம், தனது இமெயில் சேவைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு, பாஸ்வேர்ட் இல்லா லாகின் (Password free email login) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மனிதனுக்கு வங்கிக்கணக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல இன்றைய நவநாகரீக உலகில், இமெயில் அக்கவுண்ட்டும் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. மக்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள பணிகளுக்கு ஏற்ப,மற்றும் தங்கள் வசதிக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்டுகளை பராமரித்து வருகி்ன்றனர். இந்த இமெயில் பாஸ்வேர்டுகள், ஓபன் சோர்ஸ் அடிப்படையினலாதனால், ஹேக்கர்ஸ்கள் எளிதாக, நமது இமெயில் அக்கவுண்ட்டுகளை ஹேக் செய்துவிடுகின்றனர். இதன்காரணமாக, நமது முக்கிய விபரங்கள் பறிபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


இந்த இமெயில் அக்கவுண்ட் ஹேக் தொடர்பாக பல புகார்கள், யாகூ நிறுவனத்திற்கு தொடர்ந்து வந்ததையடுத்து, பாஸ்வேர்டுக்கு மாற்று குறித்த ஆய்வில் யாகூ நிறுவனம் ஈடுபட்டிருந்தது. அதன் முயற்சியாக, தற்போது யாகூ நிறுவனம், பாஸ்வேர்டை உள்ளீடாக செலுத்தாமல், ஸ்மார்ட்போனிலிருந்து வரும் நோட்டிபிகேசனின் மூலம், இமெயில் அக்கவுண்டிற்குள் உள்செல்லும் முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் செய்ல்படும் வகையில் "அக்கவுண்ட் கீ" என்ற ஆப்சன் கொண்ட அப்ளிகேசனை அறிமுகப்படுத்தியுள்ள யாகூ, இதன் உதவிகொண்டு உருவாக்கப்படும் நோட்டிபிகேசனைக்கொண்டு, பாஸ்வேர்ட் இல்லாமல், இமெயில் அக்கவுண்ட்டை நிர்வகிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய முறை தற்போது அறிமுகப்பட்டுள்ள போதிலும், பாஸ்வேர்ட் நடைமுறை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்று யாகூ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, October 16, 2015

அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் 1ம் தேதியிலிருந்து இந்த உயர்வு வழங்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசாணையை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 


தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி: முதல்வர் ஒப்புதல். இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு



தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படிக்கான உத்தரவில் தமிழக முதல்வர் நேற்று கையெழுத்திட்டார் என தகவல் வெளியாகி இருப்பதால் இன்று அதற்கான அறிவிப்பு மற்றும் அரசாணை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் 4900 பணியிடங்களுக்கு Group IV தேர்வு; டி.என்.பி.எஸ்.சி.,அறிவிப்பு



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, அருள்மொழி நேற்று பதவி ஏற்றார். அரசு இ-சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, முதல் அறிவிப்பை அவர் வெளியிட்டார். 


அவர் அளித்த பேட்டி: 


போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள், தாமதமின்றி வெளியிடப்படும். அரசு துறை காலியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு அறிவிக்கப்படும்.  

டி.என்.பி.எஸ்.சி.,யின் இணைய வழி சேவை அனைத்தும், மிகக் குறைந்த செலவில் கிடைக்க, இ-சேவை மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.நிரந்தர பதிவு, தேர்வு விண்ணப்பம், அதில் மாற்றம், நகல் பெறுதல் போன்ற சேவைகளுக்கு, அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்களை அணுகலாம். அதற்கு, கட்டணம் உண்டு. இந்த சேவைகள், எல்காட் நடத்தும், இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, October 15, 2015

ஆசிரியர் குறை தீர்க்க கமிட்டி அமைக்க உத்தரவு

பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, நான்கு கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம்:

·  பள்ளி வாரியாக குறை தீர்ப்புக் குழு அமைத்துஆசிரியர்களின் குறைகளை கேட்க வேண்டும்.

·  அதில்குறைகளைத் தீர்க்க முடியாவிட்டால்வட்டார வள மைய அதிகாரி தலைமையிலானவட்டார கமிட்டி விசாரித்து, 30நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க வேண்டும்.

·  அதற்கு மேல்கலெக்டர் தலைமையில் அமைக்கப்படும் மாவட்ட கமிட்டிமூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடிஆசிரியர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

· இறுதியாகமாநில அளவில்தொடக்கக் கல்வி இயக்குனரை தலைவராக கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். இந்தக் கமிட்டிஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடிகுறைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

· ஆசிரியரின் பணி விதிமுறைகள்பதவி உயர்வுநிதி சார்ந்த கோரிக்கைகள்ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனை தொடர்பான குறைகளைஇந்தக் கமிட்டிகள் விசாரிக்காது. 

·         மத்திய மனிதவள அமைச்சகத்தின் இந்த உத்தரவால்எந்த பலனும் ஏற்படாது எனஆசிரியர்கள் குறை கூறி உள்ளனர். 

இதுகுறித்துபட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: 
ஏற்கனவேஅனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தில்கிராம கல்விக் குழு என்ற குறை தீர்ப்பு கமிட்டி இருக்கிறதுஆனால்அது முறையாக செயல்படவில்லை என்ற குறையே இன்னும் போக்கப்படவில்லை.
பணி விதிமுறைகள்பதவி உயர்வுஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை ஆய்வு செய்யாமல்,ஆசிரியர்களின் குறைகளை எப்படி தீர்க்க முடியும்இவ்வாறு அவர் கூறினார்.

650 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு நாளை முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது

2015-2016ம் கல்வியாண்டிற்கான இரண்டாம் கட்ட பட்டதாரி - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது 

Tuesday, October 13, 2015

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு


தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 இதுசார்பான கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

TNPSC GROUP II - A : 1863 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு






1863 உதவியாளர், இளநிலை உதவியாளர்  காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



TNPSC GROUP II A

பணியிடங்கள்
உதவியாளர், இளநிலை உதவியாளர்
கல்வித்தகுதி : 

இளநிலை பட்டப்படிப்பு 
பணியிடங்களின் எண்ணிக்கை
1863
கடைசி தேதி
11.11.2015


மேலும் விவரங்களுக்கு

வங்கிகளின் இணைய சேவைக்கு (Net Banking) கட்டணம்



வங்கிகளின் இணைய சேவைக்கு (Net Banking) அக்டோபர்  1 முதல் கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது.
வங்கிகளுக்கு சென்று பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க ATM மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ATM மூலம் ஐந்து முறை,  பிற வங்கி ATM   மூலம் மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். 

இதற்கு மேல் ATM  சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இதை தொடர்ந்து, தற்போது இலவசமாக இருக்கும் வங்கிகளின் இணைய சேவைக்கும்(Net Banking)  கட்டணம் வசூலிக்க வேண்டும் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, பணத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும் 2.50 ரூபாய் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும்.

வட்டார வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு

 
அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய காலிப்பணியிடங்களில் பணிபுரிய, பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. இதற்கு ஆசிரிய பயிற்றுனர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.கோயம்புத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட வட்டார வளமையங்களில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும்.விருப்பம் உண்டா?: ஆனால் ஏற்கனவே பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பணி மாறுதல் செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2006 ஜன.,1 க்கு பின் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம், கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. 'இந்த பணியிடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.முரண்பாடு: ஏற்கனவே, ஆசிரியர் பயிற்றுனர்களாக பணிபுரிவோர், பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கல்வித்துறையின் நடவடிக்கையால் ஆசிரிய பயிற்றுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: 'வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லை' என, எங்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கல்வித்துறையின் முரண்பாட்டால் எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் கிடைக்காமல் போய்விடும், என்றார்.

TNPSC ன் புதிய தலைவர்: கே. அருள்மொழி


 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC தலைவராக கே. அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த ஏ.நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபா இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பொறுப்பை கடந்த ஜூன் மாதம் அவர் ராஜினாமா செய்தார்.


இதன்பின் தலைவர் பொறுப்பை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக உள்ள பாலசுப்பிரமணியன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். 

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கே. அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் அவர் 6 ஆண்டுகாலம் நீடிப்பார் என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.