Saturday, October 17, 2015

பாஸ்வேர்டு முறைக்கு குட்பை சொல்கிறது யாகூ

 

சர்வதேச அளவில் இணையதள சேவைகளில் முன்னணியில் உள்ள யாகூ நிறுவனம், தனது இமெயில் சேவைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு, பாஸ்வேர்ட் இல்லா லாகின் (Password free email login) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மனிதனுக்கு வங்கிக்கணக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல இன்றைய நவநாகரீக உலகில், இமெயில் அக்கவுண்ட்டும் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. மக்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள பணிகளுக்கு ஏற்ப,மற்றும் தங்கள் வசதிக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்டுகளை பராமரித்து வருகி்ன்றனர். இந்த இமெயில் பாஸ்வேர்டுகள், ஓபன் சோர்ஸ் அடிப்படையினலாதனால், ஹேக்கர்ஸ்கள் எளிதாக, நமது இமெயில் அக்கவுண்ட்டுகளை ஹேக் செய்துவிடுகின்றனர். இதன்காரணமாக, நமது முக்கிய விபரங்கள் பறிபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


இந்த இமெயில் அக்கவுண்ட் ஹேக் தொடர்பாக பல புகார்கள், யாகூ நிறுவனத்திற்கு தொடர்ந்து வந்ததையடுத்து, பாஸ்வேர்டுக்கு மாற்று குறித்த ஆய்வில் யாகூ நிறுவனம் ஈடுபட்டிருந்தது. அதன் முயற்சியாக, தற்போது யாகூ நிறுவனம், பாஸ்வேர்டை உள்ளீடாக செலுத்தாமல், ஸ்மார்ட்போனிலிருந்து வரும் நோட்டிபிகேசனின் மூலம், இமெயில் அக்கவுண்டிற்குள் உள்செல்லும் முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் செய்ல்படும் வகையில் "அக்கவுண்ட் கீ" என்ற ஆப்சன் கொண்ட அப்ளிகேசனை அறிமுகப்படுத்தியுள்ள யாகூ, இதன் உதவிகொண்டு உருவாக்கப்படும் நோட்டிபிகேசனைக்கொண்டு, பாஸ்வேர்ட் இல்லாமல், இமெயில் அக்கவுண்ட்டை நிர்வகிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய முறை தற்போது அறிமுகப்பட்டுள்ள போதிலும், பாஸ்வேர்ட் நடைமுறை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்று யாகூ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.