Saturday, October 17, 2015

'கால் டிராப்'புக்கு ரூ.1 நஷ்டஈடு (Compensate for call drops from Jan 1, 2016: TRAI to telcos)

 
புதுடில்லி,:'மொபைல் போனில் பேசுகையில், 'தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பாதியில் இணைப்பு துண்டிக்கப்பட்டால், வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக, ஒரு ரூபாய் தர வேண்டும்' என, 'டிராய்' எனப்படும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.

மொபைல் போனில் பேசுகையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இணைப்பு பாதியில் துண்டிக்கப்படுவது, 'கால் டிராப்' எனப்படும். இந்தியாவில், அடிக்கடி கால் டிராப் ஏற்படுவதாக, டிராய்க்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதற்கு தீர்வாக, கால் டிராப் ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு, நஷ்டஈடாக ஒரு ரூபாய் தர வேண்டுமென, டிராய் அறிவித்துள்ளது.வரும், 

ஜனவரி 1 முதல், இந்த உத்தரவு அமலாகிறது.கால் டிராப் நஷ்டஈடு, ஒருநாளைக்கு அதிக பட்சம், மூன்று முறை மட்டுமே வழங்கப்படும் என, டிராய் கூறியுள்ளது.