Showing posts with label SSA. Show all posts
Showing posts with label SSA. Show all posts

Tuesday, October 13, 2015

வட்டார வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு

 
அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய காலிப்பணியிடங்களில் பணிபுரிய, பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. இதற்கு ஆசிரிய பயிற்றுனர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.கோயம்புத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட வட்டார வளமையங்களில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும்.விருப்பம் உண்டா?: ஆனால் ஏற்கனவே பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பணி மாறுதல் செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2006 ஜன.,1 க்கு பின் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம், கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. 'இந்த பணியிடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.முரண்பாடு: ஏற்கனவே, ஆசிரியர் பயிற்றுனர்களாக பணிபுரிவோர், பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கல்வித்துறையின் நடவடிக்கையால் ஆசிரிய பயிற்றுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: 'வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லை' என, எங்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கல்வித்துறையின் முரண்பாட்டால் எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் கிடைக்காமல் போய்விடும், என்றார்.