Saturday, November 28, 2015

தமிழகத்தில் வருமான வரி செலுத்தும் 30 லட்சம் பேருக்கு Gas மானியம் ரத்து



இந்தியா முழுவதும் 16 கோடி Gas  சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். இதில் 5 கோடி பேர் ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர். ஆனால்  தற்போது, 36 லட்சம் பேர் மட்டும் தான்  காஸ் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர். 

வசதியானவர்கள் விட்டு கொடுக்கும் மானியத்தை பயன்படுத்தி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு  இலவசமாக(?) சிலிண்டர் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 30 லட்சம் பேர்  வருமான வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் 1 சதவீதம் பேர் கூட மானியத்தை விட்டு கொடுக்கவில்லை. 

எனவே  வருமான வரி செலுத்துவோருக்கு, மானிய சிலிண்டரை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

JEE MAIN Offline,Online Examinations & JEE Advance (Joint Entrance Examination - May 2016) Exam Date's Announced for +2 (XII) Students

IIT(Indian Institute of Technology), IIM(Indian Institute of Management),IISc(Indian Institute of Science) போன்ற  கல்விநிலையங்களில்  B.Tech,B.Arch, B.Pharm, B.S ஆகிய படிப்புகளில் சேர 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் JEE Main 2016 (Offline),  JEE Advance  (Joint Entrance Examination) தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன 


JEE(Main)- Paper-1 (B.E./B. Tech.) [Offline examination]                 :03.04.2016    

JEE(Main)- Paper-1 (B.E./B. Tech.) [Online examination ]                : 09,10 April, 2016  

JEE(Main)- Paper-2 (B.Arch./B.Planning) [Offline examination]                :03.04.2016 

JEE Advance  Examination                                                                      : 22.05.2016      
 

Apply online through :   


Online Application process Stats From                                                 : 01.12.2015
Last  Date of Online Applcation Registration                                       : 31.12.2015
தேர்வு தொடர்பான முக்கிய நாட்களை அறிய http://www.jeeadv.ac.in/scr/important-dates.php   தொடர்பை கிளிக் செய்யவும்.

மேலும் விவரங்களை அறிய  http://www.jeeadv.ac.in/index.php என்ற இணையதளத்தை அணுகவும்.

Friday, November 27, 2015

Wi-Fi தெரியும். Li-Fi தெரியுமா? தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த மைல்கல் Li-fi technology

 

 

’’​Wi-Fi’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”Li-Fi ” தொழில்நுட்பத்தை லண்டன்  எடின்பர்க்(University of Edinburgh) பேராசிரியர் Prof. Harald Haas என்பவர் 2011ஆம் ஆண்டு உருவாக்கினார்.

 

Li-Fi என்பது இருவழி தகவல் பரிமாற்றம்(Bi Directional)  நடத்தும் திறனுள்ள, அதி வேகமான தகவல் தொடர்பு தொழில்நுட்பமாகும்.  இது  அகச்சிவப்பு கதிர்கள் மற்றும் புறஊதாக் கதிர்களை பயன்படுத்தும் ஒளி வழி தகவல் பரிமாற்ற (visible light communication / Optical wireless communications) தொழில்நுட்பமாகும்.

Li-Fi தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டால் , உங்கள் அறையிலுள்ள மின்விளக்கு, உங்கள் காரின் ஹெட்லைட்,  தெருவிளக்குகள், சுரங்கப்பாதையில் உள்ள விளக்குகள், உங்கள் செல்போனின் ப்ளாஷ்லைட்  என அனைத்தின் வழியாகவும் நீங்கள் அதிவேக  இணையத் தொடர்பை பெறலாம்.



ஒரு வினாடிக்கு 224 GB வேகம் கொண்ட Li-Fi இதுவரை ஆய்வுக் கூடத்தில் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, இந்த தொழில்நுட்பம் முதன்முறையாக அலுவலகம் மற்றும் தொழிற் கூடங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது. 


இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நொடிக்கு 1 GB வேகத்தில் டேட்டா உபயோகிக்கும் அளவிற்கு முன்னேற்ற இயலும் என்று  அறிவியலாள்ர்கள் கூறுகின்றனர். இது, சாதாரண  Li-Fi வேகத்தை விட 100 மடங்கு அதிகமானது.

Li-Fi  இயங்கும் முறை:

ஒரு முனையில் LED போன்ற ஒளிமூலமும்(light source) , மறுமுனையில் போட்டோ உணர்வி (Light Sensor) பொருத்தப்பட்ட சாதனங்களும் இருந்தால், விளக்கு ஒளிரும்போது 1 என்ற பைனரி எண்ணையும், விளக்கு அணையும்போது  0 என்ற பைனரி எண்ணையும் அளிக்கிறது. (நமது வீடுகள் உட்பட உள்ள  அனைத்து ஒளிமூலங்களும் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பது போல இருந்தாலும், உண்மையில் மிகக் குறுகிய நேரத்தில் விட்டு விட்டு ஒளிர்கிறது என்பதே உண்மை.)  இவ்வாறான பைனரி தகவல் பரிமாற்றத்தின் மூலமாக உலகில் உள்ள அனைத்து ஒளி மூலங்களையும் நாம் இணைய வழி தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தலாம்.

ஒளியின் வேகம் அதிகமாக உள்ளதால் (299792458 1080 meters per second  or 1080 million kilometers per hour ) இதில் டேட்டா பரிமாற்றம் அதிவேகமாக இருக்கும்.

Li-Fi பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள் 

ஆப்டிகல் பைபர் கேபிள்களை அமைக்க முடியாத இடங்களில் Li-Fi தொழில்நுட்பத்தை  பயன்படுத்தலாம். 

உங்கள் அறையிலுள்ள அனைத்து விளக்குகளையும் வயர்லெஸ் நெட்வொர்க்கில் இணைக்க முடியும்.

கார், பஸ் போன்ற வாகனங்களின் முன்விளக்குகளில் LED பயன்படுத்துவதன் மூலம்போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியும்.

’’​Wi-Fi’’யை விட  விட நூறு மடங்கு வேகமானது. ஒளி சுவற்றில் ஊடுருவாது என்பதால் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்தவும்  Li-Fi உதவும். ஒரு வினாடியில் 50 GB தகவல்களை அல்லது 20 திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் அளவிற்கு வேகமானது. 

அடுத்த  சில ஆண்டுகளில் Li-Fi     இணைய  சேவையில் புரட்சியை உருவாக்கும் என்று  எதிர்ப்பார்க்கலாம்.

For more details:



Thursday, November 26, 2015

இந்தியாவின் முதல் அரசியல் சாசன தினம் இன்று(26.11.2015) கடைபிடிப்பு


அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், இன்று அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது.
 
1949ம் ஆண்டு இதேநாளில் அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்று வர்ணிக்கப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோம் நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிந்திருந்தார். 

இதையடுத்து நாட்டில் முதல் அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Tuesday, November 24, 2015

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வு தள்ளிப்போகும்: பள்ளிக் கல்வித்துறை முடிவு

வட கிழக்கு பருவமழையால்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலுார்,விழுப்புரம்,கடலுார் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

அதனால், பள்ளிகளுக்கு  நவம்பர்  9 முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும்  அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

முந்தைய அறிவிப்புப்படி, 10ம் வகுப்புக்கு டிசம்பர்  9 மற்றும் 12ம் வகுப்புக்கு டிசம்பர்  7ல் அரையாண்டுத் தேர்வு துவங்கி, டிசம்பர்  22ல் முடிய வேண்டும். ஆனால், மழை விடுமுறையால், ஆறு மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டுத் தேர்வை, ஜனவரி முதல் வாரத்தில் நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


 

Sunday, November 22, 2015

வட மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது - தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் : சென்னை வானிலை மையம்



இன்று காலை  முதல் வடமாவட்டங்களில் விட்டு விட்டு   இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 


காற்றழுத்த தாழ்வு நிலை குமரி கடல் பகுதியில் நீடிப்பதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்  விவரங்களை தெரிந்து கொள்ள 

SBI - 5000 Clerk's , 2000 Probationary Officers Recruitment- Will be Announced Soon (End of the Nov.2015)

 

5000 Clerk's , 2000 Probationary Officers பணிகளுக்கு,   பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India - SBI ) விரைவில் பணியாளர்களை நியமனம் செய்யவுள்ளது.  

நடப்பு நிதியாண்டில் 700 புதிய வங்கிக் கிளைகளைத் திறக்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. இதன்மூலம் எஸ்பிஐ வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 17000 ஆக  உயரும். இந்த புதிய வங்கிக் கிளைகளில் பணியாற்றுவதற்காக 7000 புதிய வங்கி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தற்போது பாரத ஸ்டேட்  வங்கியில் 2 லட்சம் ஊழியர்கள்  பணிபுரிகின்றனர்.  இந்த ஊழியர்களில் 45 ஆயிரம் மாற்றுத் திறனாளி ஆண் ஊழியர்கள் , 2,500 மாற்றுத் திறனாளி பெண் ஊழியர்கள்  அடங்குவர். இதன்மூலம்  வங்கித்துறையில்  அதிக பணியாளர்களை கொண்ட  வங்கி என்ற  பெருமையை பாரத ஸ்டேட் வங்கி பெற்றுள்ளது. 



Tentative  schedule

Serial
Event
Date
1
Online registration of application form begins
4th week of November 2015
2
Online registration of application form ends
3rd  week of December 2015
3
Last date to reprint application form
3rd  week of December 2015
4
Online fee payment
4th week of November 2015 to 3rd  week of December 2015
5
Offline fee payment
4th week of November 2015 to 3rd  week of December 2015
6
Admit card release
End of December 2015
7
Online written exam
January 2016
8
Result declaration
February 2016

BSNL Recruitment ( Telecom Technical Assistant - 147 Vacancies)

 
 
BSNL  நிறுவனத்தில் 147 டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்(TTA) பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என பிஎஸ்என்எல் அறிவுறுத்தியுள்ளது. 
 
எஸ்சி பிரிவுக்கு 25-ம், எஸ்டி பிரிவுக்கு 77-ம், ஓபிசி பிரிவுக்கு 45-ம் வழங்கப்படும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற மத்திய அரசு, மாநில அரசு தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டிலிருந்து 3 ஆண்டு என்ஜினீயரிங் டிப்ளமோ படித்து முடித்திருக்கவேண்டும். 
 
 வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். 
 
நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
ஆன்-லைன் மூலம் 01.12.2015 முதல் 10.12.2015 வரை  விண்ணப்பிக்கலாம்.
 
தேர்வு நடைபெறும் தேதி:  20.12.2015
 
For Adv Click Here:
 
For more details :   http://www.bsnl.co.in/

Friday, November 20, 2015

7-வது ஊதியக்குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு - முழு விவரங்கள்


Click Here to Download the 7th Central Pay Commission Report




7-வது ஊதியக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி  திரு ஏ.கே.மாத்தூர் அவர்கள், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியிடம் 900 பக்க அறி்க்கையை சமர்பித்தார். 

7-வது ஊதியக்குழு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்
  1. மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படவேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டும்.

  2. .ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத ஓய்வூதிய உயர்வு.

  3. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு. 

  4. குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். தற்போது, ரூ.90 ஆயிரம் சம்பளம் பெற்று வரும் மந்திரிசபை செயலாளர், இனிமேல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுவார்.

  5. இந்த சிபாரிசுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்.

  6. பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. அத்துடன், எப்போதெல்லாம் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயர வேண்டும்.

  7. இந்த சம்பள உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் பலன் அடைவார்கள்.ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவு ஏற்படும்

  8. சம்பள உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். (இதில், பொது பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரத்து 650 கோடியும், ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 450 கோடியும் ஏற்றுக் கொள்ளப்படும்.)

  9. வீட்டுக்கடன் வட்டியுடன் கூடிய வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்

  10. .ராணுவத்தினரைப் போலவே, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தவேண்டும் .

  11. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.

  12. குரூப் இன்சூரன்சு திட்டத்தின் கீழ், மாதாந்திர பிடித்தம் அதிகரிப்பதுடன், காப்பீட்டு தொகையும் அதிகரிக்கப்படவேண்டும்.

  13. 52 படிகள் கைவிடப்பட வேண்டும். மேலும் 36 படிகள், தற்போதைய படிகளுடனோ அல்லது புதிதாக அறிமுகமாகும் படிகளுடனோ இணைக்கப்பட வேண்டும்.

  14. கிரேடு சம்பளம், ஒட்டுமொத்த சம்பளத்துடன் இணைப்பு.

  15. ராணுவ பணியின் பல்வேறு அம்சங்களுக்காக இழப்பீடாக வழங்கப்படும் ராணுவ சேவை ஊதியம், ராணுவத்தினருக்கு மட்டுமே நீடிக்க வேண்டும். அதன்படி, சர்வீஸ் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.6000'ல் இருந்து ரூ.15 ஆயிரத்து 500 ஆக உயரும். நர்சிங் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.4 ஆயிரத்து 200–ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 800 ஆக உயரும். போரில் ஈடுபடுத்தப்படாத ராணுவத்தினருக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.1,000–ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 ஆக உயரும்
குறுகிய பணிக்கால அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தை விட்டு வெளியேறலாம்.

இவ்வாறு 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

New Level

SG Asst -  Level 5
BT Asst - Level 7
PG Asst - Level 8

Entry Level Pay

BT - 53600
SG - 32900
PG - 58600

Pay Matrix:

Save the following Images to your computer, then view it  in fullscreen.


 

Wednesday, November 18, 2015

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை

 

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. 



Monday, November 16, 2015

தமிழ் பாடத்தை கட்டாயமாக்கி தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு எதிரான வழக்கு: நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆராய உத்தரவு



பள்ளிகளில் 1ம்  வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை  தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்கியது தொடர்பாக குழு அமைத்து ஆராயுமாறு, தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

1ம்  வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை  தமிழ் பாடத்தை கட்டாயமாக்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் சார்பில் சாதிக் பாஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அவர் தனது மனுவில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் தமிழை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை என்றும், எனவே அரசின் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை இன்று தலைமை நீதிபதி கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கட்டாயப் பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆராய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Sunday, November 15, 2015

கனமழை காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி , காரைக்காலில் நாளை(16.11.2015) பள்ளி, கல்லூரிகளுக்கு (14 மாவட்டங்கள்) விடுமுறை


 
Graphics by: deccanbluediamonds

கனமழை காரணமாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் , விழுப்புரம் , கடலூர் ,நாகப்பட்டினம், திருவாரூர்,புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய  கடலோர மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டமான  ராமநாதபுரத்தில் 16 மற்றும் 17ம் தேதி இரு நாட்களுக்கும்   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வேலூர், திருவண்ணாமலை,நாமக்கல், திருச்சி  ஆகிய உள் மாவட்டங் களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  
கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, சேலம்,ஈரோடு,திருப்பூர், பெரம்பலூர் , அரியலூர், கரூர், தஞ்சாவூர்   ஆகிய  உள் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்  நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அவர்களின் சுற்றறிக்கை

 
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அவர்கள்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:


  1.  நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மாணவர்கள் ஆறு, ஏரி, குளங்களுக்கு வேடிக்கை பார்க்கச் செல்ல வேண்டாம். 

  2.  தொடர் மழையின் காரணமாக பள்ளியில் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தூரத்துக்கு மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். 

  3.  மழை காரணமாக சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய அறைகளை பயன்படுத்தக் கூடாது. அவற்றை பூட்டிவைக்க வேண்டும்.

  4. மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின்கசிவு, மின்கோளாறு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். தேவைப்பட்டால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துக்கொள்ளலாம். அத்துடன் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு மின் கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

  5. பள்ளி வளாகத்தில் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால், அவை மூடப்பட்ட நிலையில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  6. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். விடுமுறை காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக் கூடாது. இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  7. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் வழியை தவிர்க்க வேண்டும்.

  8. சாலையில் செல்லும்போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடுவதோ அல்லது அருகே செல்வதோ கூடாது. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் இருக்கும் இடங்கள் வழியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

  9. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்.

  10. சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாத வண்ணம் இருக்கின்றனவா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

  11. மாணவர்களைக் கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது.

  12. பள்ளியில் உள்ள கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  13. பள்ளி வளாகத்தில் கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். பள்ளங்களைச் சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  14. மழையில் இருந்து காத்துக்கொள்ள மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது என்றும் அவ்வாறு ஒதுங்கினால் இடி, மின்னலால் ஆபத்து நேரிடக்கூடும் என்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

  15. பருவகால மாற்றங்களால் ஏற்படக்கூடிய டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.